''நான் பி.ஏ. பட்டதாரிதான். ஆனா, கல்யாணமாகி பட்டுக்கோட்டைக்கு வந்தபிறகுதான் பங்குச் சந்தைன்னு ஒண்ணு இருக்கிறதையே தெரிஞ்சுகிட்டேன். கல்யாணமான புதுசுல என் வீட்டுக்காரர் பங்குச் சந்தை பத்தி பேச ஆரம்பிச்சா எனக்கு ஒண்ணும் புரியாது'' என வெள்ளந்தியாகப் பேசும் உமாதேவி, இன்று வெற்றிகரமான பங்குச் சந்தை முதலீட்டாளர். எப்படி?

''என் கணவர் பங்குச் சந்தையில் நீண்ட காலமாகவே முதலீடு செய்து வருகிறார். பங்குச் சந்தை எப்படி நடக்குதுன்னு அவர்கிட்ட கேட்டப்ப, விளக்கமா எடுத்துச் சொன்னார். அதை அடிப்படையா வச்சு, டிவியில பங்குச் சந்தையை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.

சந்தை புரிய ஆரம்பிச்சபிறகு டீமேட் கணக்கு ஆரம்பிச்சு, பங்குகளை வாங்க ஆரம்பிச்சேன். அப்பப்ப வர்ற சந்தேகங்களை என் புரோக்கிங் கம்பெனிகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். சந்தையை நான் வேகமாக கத்துகிட்டதால, நிறைய லாபம் பார்க்க முடிஞ்சது'' என்கிறார் உமா.

ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்து, அதன் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்த திறமை உமாவுக்கு உண்டு.

2008-ல் சந்தை சரிந்தபோது உமாவும் கையை சுட்டுக் கொள்ள, சந்தையிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். இப்போது மீண்டும் உற்சாகமாக பங்குச் சந்தையில் குதித்திருக்கிறார்.

சொந்த ஆராய்ச்சி, புரோக்கிங் கம்பெனிகளின் அட்வைஸ், இதனோடு கணவரின் யோசனை என கலவையாக இவர் செய்யும் முதலீட்டு முடிவு, இவருக்கு நல்ல லாபத்தையே சம்பாதித்துத் தந்திருக்கிறது.

இவருடைய ஃபேவரிட் சாய்ஸ், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட பெரிய கம்பெனிகள், பேங்கிங் பங்குகள், எஃப்.எம்.சி.ஜி.

துறை பங்குகள்தான். சந்தை இறங்கும்போது அதிகமான பணத்தை முதலீடு செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் உமா.

''நான் லாங்டைம் இன்வெஸ்ட்டர் என்றாலும், 30 - 40 சதவிகித லாபம் கிடைத் தவுடன் விற்றுவிடுவேன்'' என்று சொல்லும் உமா, நாணயம் விகடனின் தீவிர வாசகி.

''ஒரு ஃப்ரெண்ட் மாதிரி, ஒரு வாத்தியார் மாதிரி பங்குச் சந்தை பத்தி பல விஷயங்களை கத்துத் தர்ற நாணயம் விகடனை எல்லா பெண்களும் கட்டாயம் படிக்கணும்'' என்கிறார்!

-பானுமதி அருணாசலம்
படம்:செ.சிவபாலன்.

ஆண்களே கமாடிட்டி டிரேடிங் செய்ய அஞ்சுகிற நேரத்தில் கோயம்புத்தூர் தர்ஷினி தைரியமாக கமாடிட்டி சந்தையில் இறங்கிக் கலக்கிக் கொண்டு இருக்கிறார். அவருடன் பேசியபோது, கமாடிட்டி டிரேடிங்கில் அவர் ஒரு எக்ஸ்பர்ட் என்பது நன்றாகவே தெரிந்தது.

''சாதாரணமாக பெண்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவே ஆர்வமாக இருப்பார்கள். காரணம், கமாடிட்டியில் டிமாண்ட், சப்ளை பற்றியும் உலக நடப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் ஜெயிக்க முடியும்'' என எடுத்த எடுப்பிலேயே இந்த தொழிலுக்குத் தேவையான முக்கிய விஷயத்தைச் சொல்கிறார் தர்ஷினி.

ஆறு வருடங்களாக கமாடிட்டி சந்தையில் டிரேடிங் செய்து வரும் தர்ஷினி, தொடக்கத்தில் முதலீட்டு அடிப்படையில்தான் ஆரம்பித்தார். பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று வெற்றிகரமான ஒரு டிரேடராக மாறியிருக்கிறார்.

''ஐம்பதாயிரம் ரூபாய் பணம் போட்டு கமாடிட்டியில் டிரேடிங் ஆரம்பித்தேன். உஷாராக டிரேடிங் செய்த அதே நேரத்தில் அதிர்ஷ்டமும் என்னுடன் சேர்ந்துகொள்ள, கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் வரை லாபம் சம்பாதித்தேன்.

அந்த லாபத்தில் கமாடிட்டி சப்-புரோக்கிங் செய்யவும் ஆரம்பித்திருக்கிறேன். இன்றைக்கு என் சப்-புரோக்கிங் மூலம் நானே டிரேடிங் செய்வதோடு, மற்றவர்களும் கமாடிட்டியில் முதலீடு செய்ய உதவுகிறேன்'' - பெருமையோடு சொல்கிறார் தர்ஷினி.

''கமாடிட்டி சந்தை என்பது காலை 10 மணியிலிருந்து இரவு 11 மணி வரை செயல்படும். இதில் நமக்குத் தோதான ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து, அந்த சமயத்தில் டிரேடிங் செய்யலாம். இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை அதிக மூவ்மென்ட் இருக்கும். அந்த நேரத்தில் கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டும்'' - நம்பிக்கையோடு பேசுகிறார் தர்ஷினி.

''கமாடிட்டி டிரேடிங் என்பது ரிஸ்க் நிறைந்ததுதான்! ஆனால், எதில்தான் ரிஸ்க் இல்லை? ஒரு சில கமாடிட்டிகளைத் தேர்வு செய்து அதை தினமும் கவனித்தால் லாபம் உறுதி!'' என்று சொல்லும் தர்ஷினியின் ஃபேவரிட் கமாடிட்டி, வேற என்ன தங்கமும், வெள்ளியும்தாங்க!

- பானுமதி அருணாசலம்
படம்: கே.ஆர்.வெங்கடேஷ்

இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளாக பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், பேருக்குத்தான் அவர்கள் ஏஜென்டுகளாக இருப்பார்கள். உண்மையில் அவர்களின் கணவர்களே, பாலிசி பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், எல்.ஐ.சி. ஏஜென்ட் ஜெயலட்சுமியைப் பொறுத்தவரை, அவர் நூற்றுக்கு நூறு சதவிகிதம் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்தான். ராஜா அண்ணாமலைபுரத்தில் கடற்கரையை பார்த்தபடி இருக்கும் அவரது ஃப்ளாட்டில் அவரைச் சந்தித்தபோது, புதிதாக பாலிசி பிடிக்கச் செல்லும் உற்சாகத்தில் இருந்தார்.

. ''இ.ருபது வருஷமா இந்த தொழில்ல இருக்கேன். லைஃப் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ்னு பல ஆயிரம் பேருக்கு பாலிசி எடுத்து தந்திருக்கேன். அவங்க குடும்ப பாதுகாப்புக்கு நானும் ஒரு காரணமா இருக்கேன்னு நினைக்கிறப்ப, நிஜமாவே சந்தோஷமா இருக்கு'' என்கிறார் ஜெயலட்சுமி..
''என் 33 வயசு வரை நானுண்டு, என் குடும்பம் உண்டுன்னு இருந்தேன். 1992-க்கு பிறகு இன்ஷூரன்ஸ் பத்தி மக்கள்கிட்ட விழிப்புணர்வு வர ஆரம்பிச்சுது. அப்பதான் நானும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆனேன். யாருக்கு எந்த பாலிசி வேணுங்கிறதுல ஆரம்பிச்சு, இன்ஷூரன்ஸின் முக்கியத்து வத்தை எடுத்துச் சொல்கிறவரை அத்தனை விஷயங்களையும் எனக்கு சொல்லித் தந்தார் என் உயரதிகாரி மஞ்சுளா. தவிர, என் வெற்றிக்கு முக்கிய காரணம், கடவுள் அனுக்கிரஹம்!'' -அடக்கமாகச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

இவர், இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளுக்கான 'மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள்’ உறுப்பினர். எல்.ஐ.சி. சேர்மன்ஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

''சொந்தமா ஃபிளாட் வாங்கினது, என் இரண்டு பெண் குழந்தைகளை படிக்க வச்சது, அவங்களுக்கு கல்யாணம் செஞ்சுவச்சதுன்னு ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் பாடுபட்டவர் என் கணவர். அவருடன் பொருளாதார ரீதியாக சரிசமமா பங்கேற்க முடிஞ்சதுன்னா அதுக்கு காரணம் இந்த ஏஜென்ட் வேலைதான்!

இப்ப வரை என்கிட்ட பாலிசி போட்டவங்க, என்னை ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்டாக பார்க்கிறது கிடையாது. அவங்க குடும்பத்துல ஒருத்தராகத்தான் பாக்குறாங்க. அவங்க வீட்ல நடக்கிற அத்தனை நிகழ்ச்சி களுக்கும் என்னைத் தேடி வந்து அழைச்சுட்டு போறதை நெனச்சா, எனக்கு பூரிப்பாத்தான் இருக்கு!'' என்கிறார் பெருமிதமாக.

-செ.கார்த்திகேயன்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் என்பது நூறு சதவிகிதம் ஆண்கள் உலகம். அந்த தொழிலில் கடந்த மூன்று வருடங்களாக கலக்கி வருகிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த வசந்தி. ஆண்களுக்கு நிகராகச் செயல்படும் அவரது தொழில் அனுபவங்களைக் கேட்டோம்.

''என் குழந்தைகள் பள்ளியில் படிக்கிற வரை சம்பாதிக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. ஆனால், அவர்கள் கல்லூரிக்குப் போனபோதுதான் நானும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சமயத்தில் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு இடத்தைக் குடும்ப நண்பர் ஒருவருக்கு வாங்கித் தந்தேன். அவர்கள் மூலமாக வேறு சிலரும் என்னிடம் இடம் கேட்டுவர, இதையே ஏன் ஒரு தொழிலாகச் செய்யக்கூடாது என்று யோசித்ததன் விளைவு, நானும் ரியல் எஸ்டேட் புரோக்கரானேன்'' - இந்தத் தொழிலில் 'என்ட்ரி’ ஆனதை சுருக்கமாகச் சொன்னார் வசந்தி.

'இது ஆண்கள் உலகமாச்சே! எப்படி சமாளிக்கிறீங்க?’ என்று கேட்டோம்.

''ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு. ஆனா, என் கணவர், குழந்தைங்க, புரமோட்டர் களோட ஒத்துழைப்பு முழுமையா இருந்ததால, வேகமா முன்னேற முடிஞ்சது.

மொதல்ல ஒரு புரமோட்டர்கிட்ட மட்டும் இடம் வாங்கித் தந்தேன். இப்ப எல்லா புரமோட்டர்களும் என்னைத் தேடி வந்து பிஸினஸ் தர, என் பிஸினஸ் எல்லை தூத்துக்குடி வரை போயிடுச்சு'' என்கிறார் பெருமையாக.

இந்த தொழிலில் பெண்கள் ஈடுபட என்னென்ன திறமை வேண்டும்? என்று அவரிடம் கேட்டோம்.

''தெளிவான பேச்சும், தைரியமும் இருந்தால் இந்த தொழிலில் ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்க முடியும்.

வருகிறவர்களுக்கு இடத்தைக் காட்டி, இடம் பிடித்திருந்தால் பத்திரப்பதிவு வரை உடன் இருந்து செய்து தரவேண்டும். தொழில் சுத்தமாக இருந்தால் எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை.

இந்தத் தொழிலில் நிரந்தரமாக இவ்வளவு வருமானம் வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், மாதாமாதம் சராசரியாக ஒன்றிரண்டு இடங்களை முடித்தால் வருமானத்திற்கு கவலை இருக்காது'' என்று டிப்ஸும் தருகிறார் வசந்தி.

நீரை.மகேந்திரன்.
படம்: ஏ.சிதம்பரம்.