அலைந்து திரிந்து மதிய நேரத்தில் ஒரு ஓட்டலில் நுழைந்தால், தங்களின் கனிவான உபசரிப்பின் மூலம் வீட்டில் உணவருந்திய உணர்வை ஏற்படுத்திவிடுகிறார்கள் பெண் சர்வர்கள். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்களைவிட நம் குடும்பத்திற்குத் தேவையான சாமான்களை தேடித் தருவதில் அலாதி அக்கறை காட்டி நம் பாராட்டை பெற்றுவிடுகிறார்கள் பெண் ஊழியர்கள்.

பெட்ரோல் விற்கும் விலையில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் நிரப்புவதில் கில்லாடிகளாக இருப்பதால் எல்லோரும் பெண் ஊழியர்களையே விரும்புகிறார்கள். ஆக மொத்தத்தில், இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி.

அரசு வேலை, ஆசிரியர் வேலை என்பவை போக அதிக உடல்வலு தேவைப்படாத, அலுப்பில்லாமல் செய்யக்கூடிய பல வேலைகள் இன்றைக்குப் பெண்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றன.

பெண்களை வேலைக்கு எடுத்தால் பல சாதகமான அம்சங்கள் இருப்பதாகச் சொல்கிறார் கரூரில் ஏற்றுமதி தொழில் நிறுவனம் நடத்திவரும் ஜெகநாதன்.

''ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர் எப்போதுமே நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். அடிக்கடி வேலை மாறுவது, லீவு போடுவது போன்ற பிரச்னை இருக்காது. குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வந்துவிடுவார்கள்.

. உற்பத்தியில் கவனமாக இருப்பது, ஈடுபாட்டுடன் வேலை செய்வது போன்ற விஷயங்களில் ஆண்களைவிட பெண் ஊழியர்களை அதிக அளவில் நம்ப முடியும். .
பரபரப்பான நேரம் என்றாலும் கவனம் சிதறாமல் வேலை பார்ப்பதும், முகம் சுளிக்காமல் பொறுமையுடன் பதிலளிப்பதும் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் சாமர்த்தியம் என்பதால் எந்தத் தொழிலைச் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும். பெண்கள் வேலை பார்ப்பதற்குரிய சூழலை உருவாக்கி கொடுக்கும்போது அவர்களின் ஆற்றலை நாம் முழுமையாகப் பெற முடியும்.

முறையான விடுப்பு, சமவிகித ஊதியம், வேலை நேரத்தை முறைப்படுத்துவது போன்ற பணி மேம்பாட்டு நடவடிக்கைகள் இருந்தால், பெண்கள் தாங்களாகவே நிறுவனத்தின் வளர்ச்சியையும் மனதில் வைத்து வேலை செய்வார்கள்'' என்றார் ஜெகநாதன். எல்லா வேலைகளிலும் இன்று பெண்களுக்கே முன்னுரிமை என்கிற அளவுக்கு காலம் மாறிவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டிய பொறுப்பு பெண்களிடம்தான் இருக்கிறது!

- நீரை.மகேந்திரன்,
படங்கள்: வீ.சிவக்குமார், பா.காளிமுத்து, செ.சிவபாலன். ஜெ.வேங்கடராஜ்.