Published:Updated:

எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

நானும், என் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒரு மனை வாங்கியுள்ளோம். இதில் வீடு கட்டத் திட்டமிட்டுள்ளோம். வங்கிக் கடன் பெற நடைமுறை என்ன?

-எம்.பிரபாகர், சென்னை.

##~##
கணேசன்,
முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

''கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள் ஆகியோர் சேர்ந்து வீடு கட்ட கடன் வாங்கும் போதுதான் அது வீட்டுக் கடன் என்கிற பிரிவுக்குள் வரும். மற்றபடி, நண்பர்கள் ஒன்றுசேர்ந்து வீடு கட்ட வாங்கும் கடன் வீட்டுக் கடன் என்கிற அடிப்படையில் வராமல், வர்த்தகக் கடன் எனும் அடிப்படையிலேயே வரும்.

இப்படி கடன் வாங்கும் போது வழக்கமான வீட்டுக் கடனுக்கான வட்டியைவிட சற்று கூடுதலான வட்டி கட்ட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பில்டர் ஒருவரிடம் ஒப்பந்தம்போட்டுக் கொண்டு, தனித்தனியாக விண்ணப்பித்து வீட்டுக் கடன் வாங்கி, வீடு கட்டலாம்''.  

எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், எல்லா வகையான இழப்புகளுக்கும் இழப்பீடு கிடைக்குமா?

- சசிதரன், திருவாரூர்.  

வி.கிருஷ்ணதாசன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், இண்டியா நிவேஸ்.

''இறப்பினால் ஏற்படக்கூடிய இழப்புக்கு மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிளைம் செய்ய முடியும். இதில், உடல் பாதிப்பு போன்ற வேறு இழப்புகளுக்கு கிளைம் செய்ய முடியாது. அதே நேரத்தில், டேர்ம் இன்ஷூரன்ஸுடன் ரைடர் பாலிசிகள் எடுத்துக் கொண்டால்,  நிரந்தர ஊனம் மற்றும் சரி செய்யக்கூடிய ஊனம் போன்றவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.''  

எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் அல்லது பி.பி.எஃப். இவற்றில், எதில் முதலீடு செய்தால் பதினைந்து வருட காலத்தில் சிறப்பான வருமானம் கிடைக்கும்?

சந்திரபாபு, பொள்ளாச்சி.

தீபா மாதவன், நிதி ஆலோசகர்.

''பி.பி.எஃப். முதலீட்டுக்கான வட்டி என்பது அரசின் முடிவுகளுக்கு உட்பட்டது என்பதால், பதினைந்து வருட காலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், வங்கி வைப்பு நிதிக்கு கிடைக்கும் வட்டிக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ  வருமானத்தை எதிர்பார்க்கலாம். இது சுமார் 8.5 சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

டாக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்.) முதலீட்டை பொறுத்தவரை சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. எனவே, அதன் வருமானத்தையும் சரியாக கணித்துச் சொல்ல முடியாது என்றாலும், பதினைந்து வருட காலத்தில் சுமார் பத்து முதல் பன்னிரண்டு சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கலாம்.''

எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன். கீழ்த்தளத்தை வாடகைக்கு விட்டிருக்கிறேன். இந்நிலையில், வீட்டுக் கடன் வட்டிக்கு கூடுதல் வரிச் சலுகை உண்டா?

செந்தில்முருகன், திருச்சி.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர்.

''வீட்டின் வாடகையை வருமானமாக காட்டினால், வாடகைக்கு விட்டிருக்கும் பகுதிக்காக கட்டும் வீட்டுக் கடனுக்கான முழு வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும்.''

எந்த வகையான இழப்புக்கு கிளைம் கிடைக்கும்?

ஏற்கெனவே செய்த வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். பழைய நிறுவனத்தில் பிடிக்கப்பட்ட பி.எஃப். தொகையை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள என்ன வழி?

கதிரவன், சென்னை.

தொழிலாளர் ஈட்டுறுதி மண்டல அலுவல அதிகாரிகள்.

''தொழிலாளர் ஈட்டுறுதி அலுவலகம் அல்லது அதன் இணையதளத்தில் ஃபார்ம் 13-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்து, தற்போது பணியில் சேர்ந்துள்ள நிறுவனத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் மூலமாக வரும் விண்ணப்பத்தைச் சரிபார்த்து பி.எஃப். அலுவலகம் பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய நிறுவனத்தில் உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் பி.எஃப். கணக்குக்கு மாற்றிவிடும்.''

எஸ்.ஐ.பி. முறையில் ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் மூன்றாயிரம் ரூபாயை, முறையே 10, 18, 28 தேதிகளில் ஆயிரம் ரூபாய் வீதம் முதலீடு செய்து வருகிறேன். இது லாபகரமான முறையா?

ஸ்ரீதரன், கரூர்.

எஸ்.வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ, சென்னை.

''சந்தை சீரான வளர்ச்சியில் இல்லாமல், ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருக்கும்போது இதுபோன்ற முதலீட்டு முறைகள் நல்ல பலன் அளிக்கும். எனவே, இது சரியான முறைதான். தற்போதைய சந்தை சூழலில் இதை நீங்கள் தொடரலாம். சந்தை தொடர்ந்து ஏற்றத்தைச் சந்திக்கும் நிலையில் இந்த முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு