பிரீமியம் ஸ்டோரி
விஷன் 2023!

நிஜமாகும் கனவு!

அரசியல் காரணங்களையும் தாண்டி கடந்த வாரங்களில் தமிழகம் மிகவும் பரபரப்பாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம். இரண்டாவது, தமிழக பட்ஜெட். பட்ஜெட் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சடங்கு என்றாலும், 'விஷன் 2023’ தமிழக மக்களுக்குக் கொஞ்சம் புதிதாகவே இருந்தது.

'விஷன்’ என்ன?

##~##
முதலாவது, தமிழக அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ இத்திட்டத்தைக் கொண்டு வராமல், 'ஏசியன் டெவலப்மென்ட் வங்கி’ மற்றும் 'இக்ரா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்’- வுடன் சேர்ந்து கொண்டு வந்திருப்பதால் மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

இந்த தொலைநோக்குத் திட்டத்தின் மூலம், 2023-ம் ஆண்டு நடுத்தர மக்களின் வருட வருமானம் 4.5 லட்சமாக ஆக்குவது; அடுத்த 11 வருடங் களுக்கு ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சி பெறுவது; அனைவருக்கும் வேலைவாய்ப்பு தருவது உள்ளிட்ட பல லட்சியங்களையும், குறிப்பிட்ட பல இலக்குகளையும் நிர்ணயித்து இருக்கிறது தமிழக அரசு.

அடுத்த 11 ஆண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்ற  15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதில் மின் துறைக்கு மட்டும் 4.5 லட்சம் கோடி ரூபாய். இப்படி ஒவ்வொரு துறைக்கும் என்ன செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு தேவை என இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

விஷன் 2023!

இதுகுறித்து அகில இந்திய தொழிற்துறை சம்மேளனத்தின் (பிக்கி) எரிசக்தி குழு உறுப்பினரான நந்தகுமாரிடம் பேசினோம். ''68 பக்கமுள்ள இந்த அறிக்கை மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எத்துறையையும் விட்டுவிடாமல் அனைத்து துறை சார்ந்தும் இந்த தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த 11 ஆண்டுகளில் செலவழிக்கப் போகும் மொத்த தொகையில் 30 சதவிகிதம் அளவுக்கு மின் துறைக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.

இத்திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்ட போகிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்கப் போகிறார்கள். இப்போதைக்கு பப்ளிக் பிரைவேட் பாட்னர்ஷிப்பில் தனியார் 15 சதவிகிதமும், மத்திய அரசு 25 சதவிகிதமும், மாநில அரசு 60 சதவிகிதமும் முதலீடு செய்கிறார்கள்.

விஷன் 2023!

அடுத்துவரும் ஆண்டுகளில்  தனியார் முதலீட்டை            42 சதவிகிதமாக அதிகரிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி தனியார் முதலீட்டை அதிகப்படுத் தினால் அந்த பிஸினஸ் நஷ்டத்தில் இயங்காது. தவிர, அந்நிறுவனத்தின்  சேவையில் பிரச்னையும் இருக்காது.

இன்னொரு வரவேற்கத்தக்க அறிவிப்பும் இதில் இருக்கிறது. தமிழக ஜி.டி.பி.-யில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்திருக் கிறார்கள். அதாவது, தற்போதைய நிலையில் தமிழக ஜி.டி.பி.யில் உற்பத்தித் துறையின் பங்கு 16 சதவிகிதம் மட்டுமே. இதை 22 சதவிகிதமாக ஆக்கப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்போது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த விஷனை நிச்சயம் வரவேற்கலாம். தவிர, இது முதல் நிலை அறிக்கைதான். இதற்கடுத்து ஒவ்வொரு துறை வாரியாக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமும், இதை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதற்கான அறிக்கையும் விரைவில் வெளியாக இருக்கிறது'' என்றார்.

இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணர் நாகப்பனிடம் பேசினோம்.

''இத்திட்டங்களில் குறை ஏதும் சொல்ல முடியாது. இதைச் செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து துறை பற்றியும் குறிப்பிட்டிருந்தாலும், இவை அனைத்துக்கும் நிதிதான் முக்கிய ஆதாரம். தனியார்களை ஊக்குவிப்பது, மத்திய அரசிடம் இருந்து நமக்குத் தேவையான தொகையைத் திரட்டுவது உள்ளிட்டவை இருந்தாலும், தமிழக அரசும் தனக்குத் தேவையான பணத்தை திரட்ட முடியும்.

உதாரணமாக, எஃப்.ஆர்.பி.எம்.ஏ.-படி (Fiscal Responsibility and Budget Management   Act, 2003) மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதத் துக்குள் வைத்திருக்க வேண்டும். தற்போது சமர்ப்பித்த பட்ஜெட்டில்கூட நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதத் துக்குள்தான் இருக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களுக்கான எதிர்பார்ப்புகூட 3 சதவிகித துக்குள்தான். இதனால், கடன் வாங்குவது எளிதாக இருக்கும்.

விஷன் 2023!

தவிர, அரசுத் துறை நிறுவனங் களில் அரசு வசமிருக்கும் பங்குகளை கொஞ்சம் விற்பதன் மூலம் பணத்தைத் திரட்டலாம். ஒருவேளை பட்டியலில் இல்லாத நிறுவனமாக இருந்தால், அந்த நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட்டு அதன் மூலம் பணத்தைத் திரட்டலாம். பங்குச் சந்தையில் பட்டியலிட பெரிதாகச் செலவு செய்யத் தேவையில்லை.

ஆனால், மானியத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அரிசி, காலணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மானியம் தரப்பட்டது. இப்போது மின்விசிறி, மிக்ஸி போன்றவைகூட இலவசமாக தரப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு ஏ.சி.கூட இலவசமாக தர நேரிடலாம். இன்னும் எத்தனை காலத்திற்கு இலவசம் தரப்போகிறோம் என்பது பற்றி இப்போதே முடிவு செய்ய வேண்டும். இலவசங்களை நிறுத்திவிட்டு, வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம்'' என்றார்.

அரசாங்கம் இந்த கோணத் திலும் யோசித்தால் இன்னும் நன்றாக இருக்குமே!

-வா.கார்த்திகேயன்,
படம்: ஜெ.தான்யராஜு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு