Published:Updated:

பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?
பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

பொதுத் துறை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பென்ஷன் கிடையாது. மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் 10,000 ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறேன். பென்ஷன் திட்டங்களைப் போல பாதுகாப்பான ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

ஜானகிராமன், நெய்வேலி.

ராமகிருஷ்ணன் வி.நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல்.

''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பென்ஷன் திட்டங்களும் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதும் சிறப்பானதுதான். யூ.டி.ஐ, ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் போன்ற ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்பதால் ரிஸ்க் குறைவு. பென்ஷன் திட்டங்களில் சுமார் 11-12% வருமானம் எதிர்பார்க்க முடியும். இதைவிட அதிக வருமானம் பெற விரும்பினால் ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ. ஃபோகஸ்டு புளூசிப், பிர்லா டிவிடெண்ட் யீல்ட் போன்ற ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளிலும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். ஆனால், இவற்றில் ரிஸ்க் சற்று அதிகம். பென்ஷனுக்கான பணம் சேர்ந்தபிறகு இந்த ஃபண்டுகளின் யூனிட்களை விற்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து வட்டியை எடுத்து செலவு செய்யலாம்.''  

பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

இண்டெக்ஸ் ஃபண்டுகளில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாமா?

சேகர், தஞ்சாவூர்.

சுவாமிநாதன், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்.

''பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பவே இண்டெக்ஸ் ஃபண்டுகளின் வருமான வளர்ச்சி இருக்கும். இண்டெக்ஸ் ஃபண்டுகளில் பங்குச் சந்தை குறியீடு, வங்கி நிறுவனப் பங்குகளின் குறியீடு என இருக்கின்றன. சந்தையின் நிலவரத்தைக் கவனித்து வருகிறவர் எனில், இண்டெக்ஸ் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம். அதுவும் குறுகிய காலத்துக்குதான். நீண்ட கால முதலீடு எனில், இண்டெக்ஸ் ஃபண்டுகளைவிட டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.''

பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

எனக்கு வயது 40. குடும்பத்தின் தற்போதைய மாதச் செலவு 16,000 ரூபாய். இன்னும் இருபது வருடம் கழித்து இதே செலவுகளை செய்வதற்குமாதம்எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

செல்லபாண்டியன், ஈரோடு

அழகப்பன், நிர்வாக இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ்.

''தற்போது மாதம் 16,000 தேவை எனில், 20 வருடம் கழித்து பணவீக்கம் 6 சதவிகிதமாக கணக்கிலெடுத்துக் கொண்டால் மாதம் 51,000 தேவைப்படும். இதற்கு டி.எஸ்.பி. பிளாக்ராக் டாப் 100, ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி பிளான் போன்ற சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறை யில் மாதம் 6,200 ரூபாய் முதலீடு செய்து, இதற்கு 12% வருமானம் கிடைக்கும் எனில் சுமார் 61.20 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இதற்கு 10 சதவிகித வட்டி வருமானம் கிடைத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் 51,000 ரூபாய் கிடைக்க வாய்ப்புண்டு!''

பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

எனது அப்பா ஏற்கெனவே வாங்கி வைத்துள்ள சில பங்குகளை எனக்கு அன்பளிப்பாக அளிக்க விரும்புகிறார். இதை என் பெயரில் மாற்ற என்ன வழி? இதற்கு நான் வரி கட்ட வேண்டுமா?

சதீஸ்குமார், தேனி.

##~##
இளங்குமரன்,
ஆடிட்டர்.

''உங்கள் அப்பாவின் டீமேட் கணக்கிலிருந்து குறிப்பிட்ட பங்குகளை அன்பளிப்பாக அளிக்க விரும்புவதாக கடிதம் மூலம் புரோக்கிங் நிறுவனத் துக்குத் தெரிவித்தால், உங்களது டீமேட் கணக்கிற்குப் பங்குகளை மாற்றிக் கொடுத்து விடுவார்கள். பங்குகளை மாற்றித்தரும் தேதி, எண்ணிக்கை, பங்குகளின் மதிப்பு போன்ற விவரங்களை உங்களின் தந்தை உங்களுக்கு கடிதமாகத் தர வேண்டும். அப்படி செய்தால்தான் பிற்காலத்தில் பங்குகளை விற்கும்போது வரிக் கணக்கிற்கு சிக்கல் இருக்காது. இதில் பங்குகளை மாற்றித் தருபவர் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை.

ஆனால், உங்களுக்கு மாற்றிய தேதியிலிருந்து ஒரு வருடத்திற் குள் பங்குகளை விற்றால் மூலதன ஆதாய வரி உண்டு.''

பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

கருத்து வேறுபாட்டால் நானும் கணவரும் பிரிந்து வாழ்கிறோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எனது மாமனார் என் கணவருக்கு பாகமாக கொடுத்த சொத்தில் எனக்கு உரிமை இருக்கிறதா?

ஒரு வாசகி, காஞ்சிபுரம்.

ரோஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

'' கணவரை பிரிந்து வாழும் மனைவி அவருடைய சொத்துக்களில் நேரடியாக உரிமை கோர முடியாது. இருந்தாலும், திருமணமான மனைவியை பராமரிக்கும் கடமை கணவனைச் சார்ந்ததே என்பதால், பராமரிப்பு தொகையை கணவன் வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் கணவரிட மிருந்து ஜீவனாம்ச தொகை பெறலாம். நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்ச தொகை கொடுக்காவிட்டால் கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை ஜீவனாம்ச தொகைக்காக ஜப்தி செய்யலாம். இங்கு கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் என்பதற்கு அவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தும், பாகப் பிரிவினையில் ஒதுக்கப்பட்ட சொத்தும் அடங்கும்.

ஜீவனாம்ச தொகை தவிர மற்ற காரணங்களுக்காக கணவன் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது மனைவி உரிமை கோர முடியாது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு