பிரீமியம் ஸ்டோரி
அள்ளித் தருமா வெள்ளி?

வெள்ளி முதலீடு என்றாலே நம்மவர்கள் இப்போது பயந்து ஓடுகிறார்கள். காரணம், கடந்த ஆண்டு அவர்கள் பட்ட நஷ்டம்தான். கடந்த ஆண்டில் 75,000 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு போகும் என்கிற ஆசையில் எல்லோரும் வாங்க, அது திடீரென 50,000 ரூபாய்க்கும் கீழே வந்து பதற வைத்தது. ஆனால், அந்த விலையிலிருந்து 10% விலை ஏறியபின்பும் இப்போதுகூட வெள்ளி முதலீடு என்றாலே யோசிக்கத்தான் செய்கிறார்கள் மக்கள்.

அள்ளித் தருமா வெள்ளி?

ள்ளபடி பார்த்தால், இந்த தயக்கம் தேவை யில்லாத பயம்தான். காரணம், நீண்ட கால நோக்கில் தங்கத்தைவிட வெள்ளி அதிக லாபம் தந்திருப்பது பலருக்கும் தெரியாத உண்மை. கடந்த பத்தாண்டுகளில் தங்கம் 18.6% வருமானம் கொடுத்தபோது, வெள்ளி 21% லாபம் தந்திருக் கிறது.  இனிவரும் காலத்திலும் இந்த வருமானம் தொடர வாய்ப்பிருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். அவர்கள் இப்படி சொல்ல என்ன காரணம்?  

வெள்ளியின் பயன்பாடு!

தங்கம் அதிகளவில் ஆபரணத் தேவைக்கும், 11% தொழிற்சாலைத் தேவைக்கும் பயன்படுகிறது. ஆனால், வெள்ளியோ 48% தொழிற்சாலைத் தேவைக்கு பயன்படுகிறது. பேட்டரிகள், எலெக்ட்ரிக் ஸ்விட்சுகள், போட்டோ வால்டிக் செல்கள் என பல எலெக்ட்ரானிக் பொருட்களில் வெள்ளி பயன்படுகிறது. தற்போது பயன்படுவதைவிட 2015-ல் வெள்ளியின் தொழிற்சாலை டிமாண்ட் இன்னும் 60 சத விகிதமாக அதிகரிக்குமென உலக வெள்ளி ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள்.

அள்ளித் தருமா வெள்ளி?


முதலீடு!  

தங்கத்தை முன்பு ஆபரணத் தேவைக்காக வாங்கி வந்த மக்கள், இப்போது முதலீட்டு அடிப்படையில் அதிகளவில் வாங்குகிறார்கள். உலகளவில் தங்கத்தின் தேவையில் கிட்டத்தட்ட 41% முதலீட்டு அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது, கோல்டு இ.டி.எஃப். மற்றும் கோல்டு ஃபண்டுகளாக வாங்கி வைக்கப்படுகிறது. ஆனால், வெள்ளியில் சில்வர் இ.டி.எஃப்., சில்வர் ஃபண்டுகள் போன்றவை நம் நாட்டில் இன்னும் வரவில்லை. எனவே, அதை கட்டிகளாகவும் சாமான் களாகவும் மட்டுமே வாங்கி வைக்க வேண்டிய நிலை.

அள்ளித் தருமா வெள்ளி?


ரிஸ்க்!

##~##
எல்லாப் பொருட்களும் விலை ஏற்ற, இறக்கத்திற்கு உட்பட்டவைதான். ஆனால், வெள்ளியில்  இந்த ஏற்ற, இறக்கம் கொஞ்சம் அதிகம். 2008-ல் தங்கம் 18% விலை இறங்கியபோது, வெள்ளி 28% விலை இறங்கியது. 2011-ல் ஆண்டில் தங்கம் 11.5% இறங்கியபோது வெள்ளி விலை 26% இறங்கியது. ஆனால், 2009-ம் ஆண்டில் தங்கம் விலை 10% அதிகரித்தபோது, வெள்ளி விலை 23% அதிகரித்தது. 2011 பிப்ரவரி மாதத்தில் 20% வெள்ளி விலை அதிகரித்தது. அந்த சமயத்தில் தங்கமோ 6% மட்டுமே உயர்ந்தது. ஆக, உச்சத்தில் இருக்கும் போது வாங்காமல், விலை குறைந்தபிறகு வாங்கினால் நஷ்டமடைய வாய்ப்பில்லை.

இதை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதானே உங்கள் கேள்வி. இதே கேள்வியைத்தான் நாம் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாக ராஜனிடம் கேட்டோம்.

அள்ளித் தருமா வெள்ளி?

''தொழிற்சாலைத் தேவை களில் வெள்ளி அதிகளவில் பயன்படுகிறது. சோலார் தகடுகள், மடிக்கணினி மானிட்டர், எல்.சி.டி. டி.வி. ஸ்கிரீன் போன்றவைகளில் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது. தற்போது வெள்ளியின் மீதான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இப்போது ஒரு கிலோ வெள்ளி 56,000 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதிலிருந்து 50,000 ரூபாய் வரை கீழே போய் மீண்டும் 65,000 ரூபாயை இன்னும் ஒரு வருடத்தில் அடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டின் உச்சபட்ச விலையான 75,000 ரூபாயை அடைய இன்னும் மூன்று வருடம்கூட ஆகலாம்'' என்றார்.

உச்சத்தைத் தொட்ட வெள்ளி பிறகு இறங்கி, இப்போது ஒரு நிலையில் தட்டுப்பட்டு நிற்கிறது. 50,000 ரூபாயையும் தாண்டி பெரிய அளவில் கீழே இறங்காது என்று நம்பலாம். ஆனால், மேலே போனால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை. எனவே, உங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணத்தை மட்டும் வெள்ளியில் போடலாமே!

- பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு