''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் என்றால் என்ன?''

கதிரேசன், குமாரபாளையம்.

. ஸ்ரீதேவி, .நிதி ஆலோசகர், கெமோமைல் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்..
''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒரு ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்து விட்டு, அந்தத் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் வேறு ஃபண்டுக்கு மாற்றிக் கொண்டுவருவதுதான் எஸ்.டி.பி. (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்). வழக்கமாக, சந்தை நிலவரம் சரியில்லாதபோது பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, எஸ்.டி.பி. முறையில் வேறு ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றுவது நடக்கும். ஈக்விட்டி ஃபண்டிலிருந்து பேலன்ஸ்டு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுகிற வழக்கமும் உண்டு.''

''அடுக்குமாடிக் குடியிருப்புக்கு (ஃபிளாட்) பட்டா பெற முடியுமா? பத்திரப் பதிவு செய்துள்ளபோது பட்டா பெறுவதில் சிக்கல் ஏன்?''

விக்னேஷ், யு.எஸ்.ஏ.

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

''அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படுவதில்லை. குடியிருப்பு அமைந்துள்ள மொத்த பரப்பளவில் உங்களுக் கென்று தனியாக இடம் பிரித்துக் கொடுப்பதில்லை. பிரிக்கப்படாத மனையில் (uஸீபீவீஸ்வீபீமீபீ) உங்கள் வீட்டை மட்டும் பத்திரப் பதிவு செய்திருப்பீர்கள். அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ள மனையை மறு விற்பனை செய்ய முடியாது எனவே, அதற்கு பட்டா தேவையில்லை.''

''யூலிப் பாலிசியில் கட்டிய பிரீமியத்தை விடவும் யூனிட்களின் மதிப்பு குறைவாக இருந்ததால் நான் மேற்கொண்டு பிரீமியம் கட்டவில்லை. பாலிசி எடுத்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. நிலுவை பிரீமியத்தைக் கட்டினால் பாலிசியின் நஷ்டத்தை ஈடு செய்ய முடியுமா?''

செந்தில்ராஜா, திருப்பூர்.

பத்மநாபன், நிதி ஆலோசகர்.

''யூலிப் முதலீடுகளை பொறுத்தவரை முதல் மூன்று வருடங்களில், ஏஜென்ட் கமிஷன் மற்றும் நிர்வாகச் செலவுக்காக அதிக தொகை போய்விடும். அந்த வகையில் பிரீமியத்தைவிட பாலிசியின் மதிப்பு குறைவாகவே இருக்கும்.

தற்போதைய நிலையில் வெளியேற வேண்டாம். நிலுவை பிரீமியத் தொகையோடு இன்னும் இரண்டு முதல் ஐந்தாண்டுகள் தங்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப தொடர்ந்து பிரீமியம் கட்டி வரவும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு நிலைமை சீராகலாம். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்பதால், கட்டிய பணம் வரையில் நஷ்டமில்லாமல் வெளியேறும் வாய்ப்பு கிடைக்கும். பொதுவாக, யூலிப் பாலிசிகளில் 7 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வருமானத்தை எதிர்பார்க்க முடியும்.''

''முதிர்வுத் தேதிக்கு முன்னால் ஃபிக்ஸட் டெபாசிட்டை திரும்பஎடுத்தால் அபராதம் எதுவும் உண்டா?''

காமராஜ், சேலம்.

கிருஷ்ணன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் பேங்க்.

''முதிர்வுத் தேதிக்கு முன்னால் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையை திரும்ப பெற்றால் அபராதம் பிடிக்கப்படும். ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கணக்கிடப் படும் வட்டி வருமானத்திலிருந்து சுமார் ஒரு சதவிகிதம் இதற்காகப் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக, ஒரு வருட கால ஃபிக்ஸட் டெபாசிட் தொகை ஆறு மாதத்தில் திரும்ப எடுக்கப் படுகிறது என்றால், ஆறு மாத கால வைப்பு நிதி தொகைக்கு என்ன வட்டியோ அதிலிருந்து ஒரு சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.''

''நான் தனியாக வசித்து வருகிறேன். என்னைச் சார்ந்து யாரும் இல்லை. நான் எந்த வகையான இன்ஷூரன்ஸ் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?''

சதீஸ், சென்னை.

சுந்தரராஜன், வெல்த் அட்வைஸர், ஐ.என்.ஜி. வைஸ்யா.

''நீங்கள் தனியாக இருக் கிறீர்கள். உங்களைச் சார்ந்து யாரும் இல்லை என்கிறபோது உங்களுக்கு ஆயுள் இன்ஷூரன்ஸ் தேவை இருக்காது. உங்களைப் போன்றவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைப்பதும் சற்று சிரமம்தான். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பென்ஷன் கிடைப்பது போல உள்ள பென்ஷன் திட்டங்கள் போன்றவை உங்களுக்கு உகந்ததாக இருக்கும். எனவே, எண்டோவ்மென்ட், மணிபேக் போன்ற பாலிசிகளை எடுத்து பணத்தை வீணடிக்க வேண்டாம். அதற்குப் பதில் பெரிய அளவிலான மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.''

''மோட்டார் இன்ஷூரன்ஸில் கிளைம் செய்யாமல் ஒவ்வொரு வருடமும் பாலிசியைப் புதுப்பித்து வந்தால் சலுகைகள் கிடைக்குமா?''

வீரபாண்டி, திருப்பத்தூர்.

ஜி.ரவீந்திரன், உதவி மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்.

''தனிநபர் வாகன காப்பீடு பாலிசிகளில் ஓன் டேமேஜ் பிரிவில் கிளைம் செய்யவில்லை என்றால் சலுகை வழங்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் கிளைம் செய்யாமல் புதுப்பிக்கும்போது இரண்டாம் ஆண்டு பிரீமியத்தில் 5 சதவிகிதம் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. இப்படி 50 சதவிகிதம் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், மூன்றாம் நபர் காப்பீடு (தேர்ட் பார்டி இன்ஷூரன்ஸ்) பாலிசிக்கு சலுகை கொடுக்கப்படுவதில்லை.''