. 'கே.ட்ஜட்ஸ்' எனப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் நீண்ட நெடிய வரலாறு படைத்தவை அல்ல.அவை எல்லாமே அதிகபட்சம் 150 ஆண்டுகள் பழமையானவையே. இந்த நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கு அடிப்படை என்று பார்க்கப் போனால் அது அநேகமாக கால்குலேட்டராகத்தான் இருக்கும். மனிதன் கால்குலேட்டர் என்கிற கருவியை கண்டுபிடித்த பிறகு அதை வைத்து வேறு சில புதிய கருவிகளை உருவாக்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதனோடு சேர்ந்து கூட்டணி அமைக்க, இன்று 'ஃபைனான்ஷியல் கேட்ஜட்ஸ்’ (நிதி தொடர்பான நவீன தொழில்நுட்பக் கருவிகள்) என்பது அலாதியான இடத்தைப் பிடித்திருக்கிறது..
ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. எனினும் ஏ.டி.எம். மெஷின்கள் உருவான கதை கொஞ்சம் ரொமான்டிக்கானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்கு பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கி கியூவில் நின்றார். தன் முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்துவிட்டது என்று கவுன்ட்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜான் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சநஞ்ச சில்லறையை வைத்து, கொஞ்சம் சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சாக்லெட் வெண்டிங் மெஷினைத் தேடிச் சென்றார்.

அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப் படுத்தினாலும், சாத்திய வங்கி கவுன்ட்டரும், காசு போட்டால் உதிர்ந்த சாக்லேட்களும் அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்து போனது. அதன் விளைவுதான் முதல் ஏ.டி.எம். உருவாக்கத்துக்கான வித்து.

1969-ல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். மெஷின் வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அடுத்தும் ஒரு பிரச்னை. ஜானின் மனைவியால் அப்போதைய ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜான், அதை நான்கு இலக்கமாகக் குறைத்தார்.

ஏ.டி.எம். மெஷின்கள் தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜானின் காதல்தான்!

-எஸ்.கே.நிலா