Published:Updated:

''இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ்.தான்!''

''இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ்.தான்!''

''இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ்.தான்!''

அண்மையில் அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள் டி.சி.எஸ். நிறுவனத்தின் சி.இ.ஓ. சந்திரசேகரனும், சி.எஃப்.ஓ. மகாலிங்கமும். நிகழ்ச்சி முடிந்ததும் சி.எஃப்.ஓ. மகாலிங்கம் நாணயம் விகடனுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

''இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ்.தான்!''

டுத்த வருடம் ஐ.டி துறை 11 - 14% வரை வளர்ச்சி அடையும் என 'நாஸ்காம்’ தெரிவித்துள்ளது. உங்களது வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்கக்கூடும்?

''நாங்கள் எப்போதுமே இவ்வளவு சதவிகிதம் வளர்ச்சி அடைவோம் என்று சொல்வ தில்லை. ஆனால், 'நாஸ்காம்’ சொன்னதைவிட  எங்கள் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்.''

இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி. நிறுவனமாக டி.சி.எஸ். இருந்தும், ஐ.டி. என்றாலே பிற நிறுவனங்களின் பெயரைத் தானே சொல்கிறார்கள், அது ஏன்?

''1970-ம் ஆண்டிலேயே நான் டி.சி.எஸ்.-யில் சேர்ந்தேன். அதற்கு இரண்டு வருடங் களுக்கு முன்பே நாங்கள் மென்பொருள் பிஸினஸில் இருக்கிறோம். ஒரு நிறுவனம் மக்களிடம் பிரபலமடைய  நான்கு விஷயங்கள் தேவை. முதலாவது, அந்நிறுவனத்தின் புரமோட்டர்கள். டி.சி.எஸ். நிறுவனத்தின் புரமோட்டர்கள் டாடா  சன்ஸ். இரண்டாவது, அதன் ஊழியர்கள். மூன்றாவது, எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். இந்த மூவரும் நிறுவனத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது போதாது. நான்காவது, அந்நிய மற்றும் சிறு முதலீட் டாளர்கள். இவர்கள்தான் நிறுவனம் பற்றி அதிகமாக பேசக்கூடியவர்கள்.

நாங்கள் 2004-ல்தான் பங்கு வெளியீட்டுக்கு வந்தோம். கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தான் ஆகிறது. ஆனால், மற்ற ஐ.டி. நிறுவனங்கள் எங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே பங்கு வெளியீடு செய்து விட்டார்கள். அதனால் அந்நிறுவனங்களின் பெயர் அடிக்கடி அடிபடலாம். இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ். என்றுதான் சொல்வார்கள்.

''இனி ஐ.டி. என்றாலே டி.சி.எஸ்.தான்!''

கடந்த காலங்களில் கண்ட வளர்ச்சி இனி ஐ.டி. துறையில் சாத்தியமா, இன்னும் எத்தனை வருடங்களுக்கு ஐ.டி. துறையின் செழிப்பு இருக்கும்?

''எத்தனை வருடங்கள் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், இப்போதைக்கு ஐ.டி. துறையின் எதிர்காலம் பிரகாசமாவே இருக்கிறது. தினமும் புதுப்புது டெக்னாலஜிகள் வந்து கொண்டே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு 'கிளவுட் கம்யூட்டிங்’ என்று சொன்னால் வானத்தைப் பார்த்திருப்போம். ஆனால், இன்று நிலைமை வேறு. இதுபோல புதுப்புது டெக்னாலஜிகள் வந்து கொண்டே இருக்கும்; ஐ.டி.யின் வளர்ச்சி தொடரவே செய்யும்.

ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போகிறதே, இதனால் உங்களுக்கு லாபம் அதிகரிக்குமா?

##~##
''கடந்த ஜூலை மாதம்   45 ரூபாய்க்கு அருகில் இருந்தது. அதன்பிறகு 52 ரூபாய் வரை சரிந்தது. பிறகு ஜனவரியில் உயர்ந்து 49 ரூபாய்க்கு வந்தது. இப்போது மீண்டும் சரிகிறது. இப்படி ஏறி, இறங்குவதால் நாங்கள் 'ஹெட்ஜிங்’ செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி 'ஹெட்ஜிங்’ செய்வதால் எல்லா நேரங்களிலும் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.''

தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்  நெருக்கடியான சூழல் நிலவுகிறதே?

''நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவதுதானே நல்ல கம்பெனிகளுக்கு அழகு. எந்த நெருக்கடியையும் நாங்கள் சமாளிப்போம்!''

உங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் என்ன தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்?

''மூன்று விஷயங்கள் வேண்டும். முதலாவது, கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டாவது, உலகம் முழுக்க வேலை செய்ய வேண்டி இருக்கும் என்பதால் கம்யூனிகேஷன் திறமை வேண்டும்.  மூன்றாவது, புராடக்டிவிட்டி. உங்களது உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.''

ஐ.டி. மாணவர்கள்  முயற்சிக்கலாமே!

- வா.கார்த்திகேயன்,
படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு