Published:Updated:

சம்மர் ஆஃபர் சேல்ஸ்: லாபமா? ஏமாற்றமா?

கவர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
சம்மர் ஆஃபர் சேல்ஸ்: லாபமா? ஏமாற்றமா?

கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து நம்மை குளிர்விக்கிற ஒரே விஷயம் சம்மர் ஆஃபர் சேல்ஸ். சிறிய கடை முதல் பெரிய ஷாப்பிங் சென்டர் வரை எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா நிறுவனங்களுமே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அள்ளி வீசும் இந்த கோடை ஆஃபர்களின் உண்மை நிலை என்ன என்பதை அறிய ஒரு ரவுண்ட் சுற்றி வந்ததில் நாம் தெரிந்துகொண்ட விஷயங்கள் பல. அவற்றின் தொகுப்பு இனி:

எலெக்ட்ரானிக்!

##~##
ஏ.சி., ஏர்கூலர், ஃபேன் போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு கோடை காலங்களில்தான் நிறைய ஆஃபர் தருகிறார்கள். பொதுவாக, கோடை தொடங்கும்  முன்பே புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி விலையையும் ஏற்றிவிடுகிறார்கள். பிறகு கோடை ஆஃபர் என்ற பெயரில் விலையைக் கொஞ்சம் குறைத்து புதிய மாடல்களை  விற்றுவிடுகிறார்கள்.

ஒரு சில கடைகளில் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருட்களை மட்டும் அதிகம் விற்பனை செய்ய சில சிறப்புச் சலுகைகளை அறிவிக் கிறார்கள். குறிப்பிட்ட பிராண்ட் பொருளைத்தான் நீங்கள் வாங்கப் போகிறீர்கள் எனில் இந்த கடைகளை நாடலாம்.

இரண்டு பொருட்கள் சேர்த்து சலுகை விலை அளிக்கும் வழக்கமும் இந்த ஆஃபர் சேலில் அதிகமாக இருக்கிறது. இந்த இரு பொருட்களையும் தனித் தனியாக வாங்கினால்கூட அதே விலையில் வாங்கிவிட முடியும். எனவே, சலுகையாகத் தரப்படும் பொருள் உங்களுக்கு தேவையா என்று பார்த்து வாங்குவது புத்திசாலித்தனம்.  

தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகை மற்றும் ஷோரூம் வழங்கும் சலுகை என இரண்டு வகை ஆஃபர் கிடைக்கிறது. ஷோரூம் வழங்கும் சலுகைகள் லாப கரமாக இருக்கும்.

துணிக் கடைகள்!

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் துணிக் கடைகளுக்கு வருவதை அறிந்த துணிக் கடைகள் 10 - 20% வரை தள்ளுபடி கொடுத்து, எக்கச்சக்கமாக வியாபாரம் செய்துவிடுகின்றன.

இச்சமயத்தில் புதிய துணிகள் அதிகம் வந்திருக்காது என்பதால் பழைய ஸ்டாக்குகளே அதிகம் இருக்கும். எனவே, பார்த்துப் பார்த்து துணிகளை வாங்கினால், பிற்பாடு வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.  

சம்மர் ஆஃபர் சேல்ஸ்: லாபமா? ஏமாற்றமா?


ஷாப்பிங் சென்டர்கள்!

பெரிய சூப்பர் மார்க்கெட்களில் மளிகைப் பொருட்களுக்கு தொடர்ந்து சலுகைகள், விலைக் குறைப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. சோப்பு, பேஸ்ட் முதற்கொண்டு அரிசி, பருப்பு என எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட சலுகை அறிவிக்கிறார்கள். இச்சலுகையை சரியாகத் தெரிந்துகொண்டு வாங்கினால் லாபம்தான்.

ஒரு நிறுவனம் புது புராடக்ட்டுகளை அறிமுகம் செய்யும்போது தரும் ஆஃபர், ஏற்கெனவே அறிமுகமான, ஆனால் வேகமாக விற்பனை யாகாத புராடக்ட்டுகளுக்கு வழங்கப்படும் ஆஃபர் என பல சலுகைகள் இந்த மெகா சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கிறது.

இப்பொருட்கள் நமக்கு தேவை எனில் மட்டுமே வாங்கலாம். காரணம், இரண்டு தேவையான பொருளோடு ஒரு தேவையில்லாதப் பொருளை வாங்குவதன் மூலம் நாம் எந்த நன்மையும் அடைய முடியாமல் போய்விடும். தவிர, சலுகையில் அந்த பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி போன்ற வற்றை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.  

ஆக, ஆஃபர் என்கிற பெயரில் விலை குறைவாக  கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக பொருட்களை வாங்காமல் மேற்சொன்ன விஷயங்களை கவனித்து வாங்கினால், நாம் செலவு செய்கிற பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்.  

-நீரை.மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு