பத்தாயிரம் மணி நேரப் பயிற்சியின் மகிமையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது கம்ப்யூட்டர் உலகில் கலக்கி எடுத்த பில் ஜாய் வாழ்க்கையில் பின்னுக்குப் போய்ப் பார்ப்போம்.

. அ.து 1971-ம் வருடம். பில்லுக்கு பதினாறு வயது. பில் அப்போதே நல்ல உயரம். அவன் கணிதத்தில் புலி. எம்.ஐ.டி., கால்டெக் மற்றும் வாட்டர்லூ போன்ற உச்சப்புகழ் பல்கலைக்கழகங்கள் ஆர்வத்தோடு தூண்டில் போட்டு இழுக்கக்கூடிய சூப்பர் பிரில்லியன்ட் மாணவர்களின் ரகம்தான் அவனும்..
எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், எந்தத் துறை நோக்கி தேர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு ஃபோகஸ் கிடைக்காத சிறிய வயதில் இருந்தபோதே, அவன் எல்லாவற்றைப் பற்றியும் எல்லாமும் அறிந்து கொள்ளும் வெறியோடு இருந்தான். அவனுடைய அப்பா வில்லியம் பிறகு இது பற்றிச் சொல்லும்போது, ''எங்களுக்குத் தெரிந்த வரைக்கும் அவனுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தோம். எங்களுக்குத் தெரியாத பட்சத்தில், அவனிடத்தில் அதற்குரிய புத்தகத்தை வாங்கிக் கொடுத்து விடுவோம்' என்றார்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் 'ஸ்காலஸ்டிக் ஆப்டியூட் டெஸ்ட்’ நடந்தது. மிகக் கடினமான அந்த டெஸ்ட்டில் கணிதப்பிரிவில் நச்சென்று மார்க் வாங்கியிருந்தான் பில்.

'அந்த டெஸ்ட் ஒன்றும் எனக்குக் கடினமாக இல்லை, விடைகளை எழுதி முடித்துவிட்டு, விடைத்தாளை இரண்டாவது முறை சரிபார்ப்பதற்குக்கூட எனக்கு நிறைய நேரம் இருந்தது' என்று பில் பிற்பாடு குறிப்பிட்டிருந்தான்.

அவனிடமிருந்த திறமை ஒரு லாரி நிறைய ஏற்றக்கூடிய சரக்கிற்குச் சமம். ஆனால் அதை மட்டுமே அவன் வாழ்வில் சாதனை சிகரம் தொட்டதற்கு காரணமாக நாம் கவனத்தில் கொள்ளலாகாது. குறிப்பாக அவனுடைய முன்னேற்றத்திற்கு மூல காரணம் பீல் அவென்யூ என்ற பகுதியில் இருந்த ஒரு கட்டடம்தான்.

1970-களின் முற்பகுதியிலேயே ஜாய் கம்ப்யூட்டர் 'புரோகிராமிங்’ பற்றி கற்க ஆரம்பித்திருந்தான். அந்தக் காலத்தி லெல்லாம் கணினி என்பது ஒரு முழு அறையை அடைத்துக் கொள்கிற அளவிற்கு பெரிதாக இருக்கும். ஒரு சிறிய மெஷின் வாங்க வேண்டுமானால், மில்லியன் டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த இயந்திரத்தின் 'மெமரி’ இன்று நாம் சமைக்கப் பயன்படுத்தும் 'மைக்ரோவேவ் அவன்’ அடக்கியுள்ள 'மெமரி’யை விடக் குறைவுதான்! ஆக, அப்பொழுது கம்ப்யூட்டர் என்பது நேரில் பார்ப்பதற்கே அரிதான விஷயமாகவே இருந்தது.

கம்ப்யூட்டர்களின் ஆரம்ப காலம் அது என்பதால், 'புரோகிராமிங்' என்பது மிகவும் கடினமான விஷயமாகவே இருந்தது. அந்தக் காலத்தில் 'கார்ட்போர்டு’ அட்டை

களை பஞ்ச் செய்துதான் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டன. புரோகிராம் கோடின் ஒவ்வொரு வரியும் கீ பஞ்ச் மெஷின் உதவியுடன் கார்டில் பஞ்ச் செய்து பதிவு செய்யப்பட்டது. ஒரு சிக்கலான புரோகிராமிற்கு நூற்றுக்கணக்கான கார்டுகள் தேவைப்படும். புரோகிராம் தயாரான பிறகு எந்த மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டர் கிடைக்கிறதோ, அதன் ஆபரேட்டரிடம் அந்த கார்டுகள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்.

அப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் என்பது ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும்தான் செய்யக்கூடிய திறனோடு இருந்தது. அதனால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உங்கள் புரோகிராமிற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவார். உங்களுக்கு முன்னால் எத்தனை பேர் இப்படி புரோகிராம் எழுதிவிட்டு கார்டுகளுடன் காத்துக் கிடக்கிறார் என்பதைப் பொறுத்தே உங்கள் புரோகிராம் கார்டுகள் உங்கள் கைக்குத் திரும்பக் கிடைக்கும். சில சமயங்களில் நீங்கள் எழுதிய புரோகிராமில் சின்னத் தவறு நடந்திருந்தாலும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். இது மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் பொறுமையோடு பயிற்சி செய்து மேதையாவது எந்த அளவுக்குச் சாத்தியம்?

கம்ப்யூட்டர் அறையில் கிடைக்கின்ற ஒரு மணி நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே புரோகிராமிற்கு என்று செல விடப்படும் நிலையில், எப்படி பத்தாயிரம் மணி நேரப் பயிற்சி கிடைக்கும்? கார்டில் 'புரோகிராம்’ எழுதக்கூடிய காலத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் இதுபற்றி பிறகு கூறும்போது, 'புரோகிராமிங்கை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ... கடல் மாதிரி பொறுமையையும், தவறில்லாமல் எழுதக்கூடிய புரூப் ரீடிங் திறமையையும் வேண்டுமானால் தாராளமாக வளர்த்துக் கொள்ள லாம்'' என்றார்.

ஒருவழியாக, கம்ப்யூட்டர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடிய அடுத்தகட்ட மாற்றம் பெற்றன. கம்ப்யூட்டரின் ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்றி எழுதினால் மெஷினுடைய நேரத்தை ஒரு செயலுக்கும் அதிகமாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் உணர, அதையே நன்கு விரிவுபடுத்தி யோசித்தபோது, கம்ப்யூட்டரினால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலைகளைச் செய்ய முடியும் என்று புரிந்தது.

டஜன் கணக்கான டெர்மினல் களை ஏற்படுத்தி அவற்றை ஒரு டெலிபோன் இணைப்பு மூலம் மெயின் ஃப்ரேம் கம்ப்யூட்டருடன் தொடர்புபடுத்தினால் ஒரே நேரத்தில் பல பேர்கள் வேலை செய்ய இயலும் என்பதும் தெரிய வந்தது.

இப்படி காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் கண்டுபிடிப்பு, நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பில் வாழ்க்கையில் எப்படி ஜாலங்கள் புரிந்தது என்பதை மேற்கொண்டு படிக்கும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். இது ஒரு புரட்சி அல்ல. ஆனால் வெளிப்பாடு. ஆபரேட்டர், கார்டுகள் மற்றும் காத்திருக்கும் நேரம் ஆகியவற்றையெல்லாம் மறந்து விடுங்கள். இந்த காலப் பகிர்வினால், நீங்கள் உங்களின் 'டெலிடைப்’புக்கு முன்னால் உட்கார்ந்து, இரண்டு 'கமாண்ட்'களைத் தட்டினால் அந்த நிமிடமே நமக்கு விடை கிடைத்து விடும். காலப் பகிர்வின் மூலம் ஒருவருடன் ஒருவர் உரையாடிக் கொள்ளவும் முடியும். புரோகிராம் உங்களுடைய கருத்தைக் கேட்கும்... அதற்குப் பிறகு உங்கள் கருத்தை அறிய அது காத்திருக்கும். நீங்கள் டைப் செய்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில், அது உங்களுக்கு விடையளித்துவிடும்.

உலகளவில் இந்தக் காலப் பகிர்வை பகிர்ந்து கொள்ளும் முறைக்கு மாறிய பல்கலைக் கழகங்களில் மிச்சிகன் பல்கலைக் கழகமும் ஒன்று. 1967-லிலேயே இந்த சிஸ்டத்திற்கான மூலப் படிவம் உருவாக்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. 1970-களின் ஆரம்பத்தில் மிச்சிகனில் தேவைக்கேற்ற கணினி சக்தி இருந்தது. நூற்றுக்கணக்கான பேர்கள் ஒரே நேரத்தில் கம்ப்யூட்டர் மையத்தில் புரோகிராமிங் செய்ய முடிந்தது. '60-களின் பிற்பகுதி யிலும், 70-களின் முற்பகுதியிலும் மிச்சிகன் மாதிரி வேறு எந்த இடமுமே இத்தகைய வசதியுடன் இருந்திருக்க முடியாது'' என மிச்சிகன் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தின் முன்னோடியான மைக் அலெக் ஸாண்டர் கூறியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்தின் ஆன் ஆர்பர் வளாகத்திற்கு 1971-ல் பில் ஜாய் வந்து சேர்ந்தபோது அவருக்கு இது மிகப் பெரிய வரமாக அமைந்தது. கம்ப்யூட்டர் இருப்பதினால் அவர் மிச்சிகனை தேர்ந்தெடுக்கவில்லை. பள்ளியில் படிக்கும் காலத்தில் எத்தனையோ விஷயங்களில் ஆர்வம் காட் டினாலும், கம்ப்யூட்டர் சம்பந்த மாக எதுவும் செய்யவும் இல்லை. அவருக்கு விருப்ப மெல்லாம் கணிதத்திலும், பொறியியலிலும்தான் நிலைத்திருந்தது. ஆனால் புரோகி ராமிங்கில் ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தவுடன், 17 வயது நிரம்பிய ஒருவனுக்கு புரோகிராமிங் சம்பந்தமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வதற்கு சந்தர்ப்பவசமாக இந்த இடம் வாய்ப்புகளை அளித்தது! அந்த கட்டத்தில்தான் பில் ஜாய் கம்ப்யூட்டர் பழக வந்தார்.

''நான் நார்த் கேம்பஸில் தங்கி இருந்தேன். கம்ப்யூட்டர் சென்டரும் நார்த் கேம்பஸில்தான் இருந்தது. இப்படி கூப்பிடு தொலைவில் இருந்ததால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நான் அங்கு செலவு செய்தேன். அது அளவிட முடியாதது. 24 மணி நேரமும் கம்ப்யூட்டர் சென்டர் திறந்திருக்கும். நான் அங்கு இரவு முழுவதும் இருந்துவிட்டு விடியற் காலையில்தான் திரும்புவேன். அந்த ஆண்டுகளில் நான் வகுப்பில் செல விட்ட நேரத்தைவிட கம்ப்யூட்டர் மையத்தில் செல விட்ட நேரம்தான் அதிகம்'' என்று பிறகு நினைவு கூர்ந்தார் பில் ஜாய்.

''இதில் சவால் என்னவென்றால், அந்த மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அக்கவுன்ட்டில் போடுவார்கள். அந்தத் தொகைக்கான அளவு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி முடித்தவுடன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரமும் முடிந்து விடும். இதனால், நீங்கள் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் அதற்கேற்ற மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்வதற்கு தொகையைப் போட்டு, நேரம் தருவார்கள். ஆனால், புத்திசாலிக்கு வேறொரு குறுக்கு வழியும் அதில் கிடைத்தது. 'டைம் ஈக்குவல்ஸ்’ என்ற வார்த் தையைப் போட்டு, அருகில் ஆங்கில எழுத்தான 'டி' போட்டு - ஈக்குவல்ஸ் சின்னத்தைப் போட்டு - 'கே' என்ற எழுத்தைப் போட்டுவிட்டால்... நேரக் கணக்கை கம்ப்யூட்டர் பதிவு செய்யாது. இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் எத்தனை நேரம் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரில் நீங்கள் பழகிக் கொண்டிருக்கலாம்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் பில் ஜாய்.

ஆக, பில் ஜாய்க்கு அமையப் பெற்ற வரங்களைக் கவனியுங்கள். நீண்ட தொலைநோக்கோடு கூடிய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தது; 'பஞ்ச் கார்டு’ முறையிலேயே கம்ப்யூட்டருடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில் 'டைம் ஷேரிங்' எனப்படும் 'காலப் பகிர்வு’ சிஸ்டத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்தது; பல்கலைக்கழக சிஸ்டத்தில் தற்செயலாக அந்த 'டி' ஈக்குவல்ஸ் 'கே' வைரஸ் இருந்ததை அவர் அறிந்தது என்பதெல்லாம் அவருக்குக் கிடைத்த வரம்தானே? அதோடு, அந்தப் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சென்டர் 24 மணி நேரமும் திறந்தே இருந்தது என்பது பில் ஜாய்க்கு கிடைத்த இன்னொரு பெரிய வரம்.

இதற்கெல்லாம் ஒட்டிய பாயின்ட்தான் பில் ஜாய் மிகவும் புத்திசாலி என்பது. எதில் ஆர்வம் உண்டாகிறதோ அதை அவர் தீவிரமாகத் தெரிந்து கொள்ள விரும்பினார். அதற்காகப் பாடுபட்டார். இதை யாரும் மறுத்துவிட முடியாது.

அவருடைய புத்திசாலித் தனத்துக்கும் அயராத பயிற்சிக் குமான வாய்ப்புகள் அமையப் பெற்ற காரணத்தாலேயே, அவர் வரம் பெற்ற விதையாக மாறினார். அவரைப் போன்ற புத்திசாலித்தனமும், பயிற்சி செய்யக்கூடிய ஆசையும் வேறு யாருக்குமே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

பில் ஜாய் கூறும் போது, ''மிச்சிகனில் இருக்கும்போது நாளன்றுக்கு ஏறக்குறைய 8-லிருந்து 10 மணி நேரம் வரை புரோகிராமிங்கில் ஈடுபட்டி ருந்தேன். நான் பெர்க்லியில் இருந்த சமயம் பகலும், இரவுமாக இதைத்தான் செய்தேன். வீட்டிலேயே 'டெர்மினல்’ இருந்தது. நான் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிவரை புரோகிராமிங் செய்து விட்டு, அப்படியே கீ போர்டில் தலை சாய்த்துப் படுத்துவிடுவேன். ஆனால், அப்போது எனக்கு பெரிய அளவில் திறமை இருந்தது என்று சொல்ல முடியாது. நான் இரண்டாமாண்டு படிக்கும் போது ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தேன். அப்போது நான் எழுதிய புரோகிராமை 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பயன்படுத்துகிறேன்'' என்று ஃபிளாஷ்பேக்கை பெருமையோடு சொல்கிறார் பில் ஜாய். கூடவே, ''பல்கலைக்கழகத்திலும், வீட்டிலும், பிறகு மறுபடி பெர்க்லியிலுமாக... கல்லூரி நடக்கும் நாட்கள் தவிர கோடை விடுமுறைகளிலும் கம்ப்யூட்டர் பக்கத்திலேயே இருந்த பில் ஜாய்க்கு - உளவியல் அறிஞர்கள் கடந்த அத்தியாயத்தில் விவரித்த அந்த பத்தாயிரம் மணி நேர பயிற்சி வாய்த்ததா?

பில் ஜாயிடம் கேட்டபோது, ''ம்... அப்படித்தான் இருக்க வேண்டும்!'' என்கிறார் புன்னகையோடு.

வெற்றியாளர்களின் ரகசியம் அதோடு முடிந்துவிடக் கூடியதா? என்ன... ஆராய்ந்து பார்க்கும் போது, அடுத்தடுத்த அதிசயங்கள் இந்த ரகசியத்துக்குப் பின்னே இருப்பது புரிகிறது. வாருங்கள், தேடிப் போவோம்...!

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell