மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரிலையன்ஸ் பவர் ஐ.பி.ஓ. போல் அமெரிக்காவின் ஃபேஸ்புக் ஐ.பி.ஓ.வும் பெருத்த ஏமாற்றம் தருவதாகவே அமைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுக்க இருப்பவர்கள் ஃபேஸ்புக் ஐ.பி.ஓ.வை பெரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஐ.பி.ஓ.வின்போதே அதை வாங்கிவிட்டால் ஆயிரக்கணக்கான டாலர்களை லாபம் பார்த்துவிடலாம் என்று நினைத்தார்கள்.

. ஆ.னால், மே 18-ம் தேதி அன்று 38 டாலர்களுக்கு அமெரிக்கச் சந்தையில் பட்டியலிடப் பட்டது ஃபேஸ்புக் பங்கு. சில நிமிடங்களிலேயே 42 டாலர் வரை சரசரவென உயர்ந்த அந்த பங்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் சரியத் தொடங்கி, அன்றைய தினத்தின் முடிவில் 38.23 டாலராக குறைந்ததோடு, அடுத்த சில நாட்களில் 31 டாலருக்கு வந்தது. .
இப்போது அமெரிக்க பத்திரிகைகளும் தரகு நிறுவனங்களும் ஃபேஸ்புக் பங்கு ஒரு பலூன் மாதிரி. அது எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று பயமுறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் பல. அதில் முக்கியமானது, அந்த பங்கின் மதிப்பு.

ஐ.பி.ஓ.வின்போது இந்த பங்கின் மதிப்பு கிட்டத்தட்ட 104 பில்லியன் டாலர் என்றார் கள். அன்றைக்கு அப்பாடா என்று ஆச்சரியம் தந்த இந்த மதிப்பு, இன்று பிரச்னையாக மாறியிருக்கிறது. 2011-ல் ஃபேஸ்புக்கின் வருமானம் 3.7 பில்லியன் டாலர்கள், லாபம் 1 பில்லியன் டாலர் கள். ஒரு பில்லியன் லாபம் உடைய கம்பெனியை எப்படி 100 பில்லியனுக்கு மேல் மதிப்பு செய்ய முடியும்? என்று இப்போது கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் சில அனலிஸ்ட்டுகள்.

இதற்கு ஃபேஸ்புக் சொல்லும் பதில்: ''உலகம் முழுக்க 90 கோடிக்கு மேலான மக்கள் ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக இருக்கிறார் கள். விளம்பரங்களை இவர் களுக்கு கொண்டு செல்வது நிறுவனங்களுக்கு எளிது. தவிர, மக்களுக்கும் எங்களுக்கும் ஒரு எமோஷனலான உறவு இருக்கிறது. அதனால் அடுத்த சில ஆண்டுகளில் 200 பில்லியன் டாலர் கம்பெனி யாக மாறுவோம்.''

ஆனால், இதற்கு அனலிஸ்ட்டுகளின் பதில் வேறு மாதிரியாக இருக்கிறது. ''இப்போதைக்கு 90 கோடி பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்து பவர்களாக இருக்கட்டும். ஆனால், இதற்கு மேல் செல்வது கடினம். காரணம், உலக மக்கள் தொகையே 680 கோடி (2010 நிலவரப்படி) பேர்தான். இப்போது 700 கோடிக்கு மேல் இருக்கலாம். இதில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கணக்கு தொடங்க முடியாது. மேலும், மக்கள் தொகையில் உலகின் இரண்டு முக்கியமான நாடு களான இந்தியா மற்றும் சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இன்னும் பெரிதாக அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 12 கோடி நபர்களில், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி தான்.

தவிர, ஃபேஸ்புக்கினை பயன்படுத்துபவர்களில் பலர் ஸ்மார்ட் போன்களில் அதை பார்ப்பதால் பல நிறுவனங்கள் அதில் விளம்பரம் கொடுக்க தயங்குகின்றன. சமீபத்தில்கூட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஃபேஸ்புக்கில் விளம்பரத்திற்கான செலவை குறைக்கப் போவதாக அறிவித் திருக்கிறது.

கூகுள் நிறுவனம் ஒரு வாடிக்கையாளர் மூலம் 30 டாலர் சம்பாதிக்கிறது. ஆனால், ஃபேஸ்புக் சுமார் 4.39 டாலர்தான் சம்பாதிக்கிறது. கூகுளின் தற்போதைய சந்தை மதிப்பு 194 பில்லியன் டாலர்கள். 2004 ஆண்டு பட்டியலிடப்பட்ட கூகுள் இதுவரை பட்டியலிடப்பட்ட விலைக்கு கீழே ஒருமுறைகூட செல்லவில்லை. ஃபேஸ்புக்கின் பி.இ. விகிதமும் 88 என்கிற அளவில் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், கூகுளின் பி.இ. விகிதம் வெறும் 18தான். பொதுவாக, டெக்னாலஜி கம்பெனிகளுக்கு பி.இ. விகிதம் அதிகமாக இருக்கும் என்றாலும் ஃபேஸ்புக் பி.இ. விகிதம் கூகுளைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பது சரியல்ல. ஆரம்பத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 28 டாலருக்காவது வெளியிட்டிருந்தால் இந்த அளவு பங்கின் விலை சரிந்திருக்காது '' என்று வாதிடுகிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

இது ஒரு பக்கமிருக்க, ஃபேஸ்புக்கின் எதிர்காலம் பற்றி பல கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள் சிலர். நியூசிலாந்தில் சோதனை ஓட்டமாக வேறு சில சேவைகளைக் கொடுத்து அதனை பயன்படுத்தும் மக்களிடமிருந்து 2 நியூசிலாந்து டாலர் வசூலிக்கலாமா என்று யோசித்து வருகிறது ஃபேஸ்புக். இந்த யோசனை அங்கு வெற்றி அடைந்தாலும் மற்ற நாடுகளில் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறது எகனாமிஸ்ட் பத்திரிகை. சும்மா கிடைக்கும் வரைதான் மக்கள் பயன்படுத்துவார்கள். காசு என்று வந்துவிட்டால், பலரும் ஓடிவிடுவார்கள் என்கிறபோது ஃபேஸ்புக்கின் வருமானம் எப்படி உயரும்? என்பது ஒரு தரப்பினரின் கேள்வி.

அடுத்து, இனிவரும் காலத்திலும் உலகம் முழுக்க உள்ள மக்கள் ஃபேஸ்புக்கையே பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. ஃபேஸ்புக்கைவிட இன்னொரு சமூகதளம் வரும்போது மொத்த மக்களும் அங்கு சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. மைஸ்பேஸ் என்கிற வலைதளம் 2003-ம் ஆண்டு தொடங்கி 2008 வரை சக்கைப் போடு போட்டது. ஆனால், இன்று அதை யாரும் சீண்டுகிற மாதிரி தெரியவில்லை.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கிறபோது ஃபேஸ்புக் பங்கு இப்போதைக்கு வாங்கிய விலைக்குக்கூட விற்க முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

வாரன் பஃபெட் 2000-ல் டாட்காம் வீழ்ச்சியின் போது ''ஐ.பி.ஓ. வருவது புரமோட்டார்களின் லாபத்துக்குத்தானே தவிர கம்பெனியின் லாபத்துக்கு அல்ல'' என்று சொன்னது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் பொருந்தும்.

கடைசி செய்தி: ஃபேஸ்புக் ஐ.பி.ஓ.வின் போது டிரேடிங்கை காலதாமதப்படுத்தியது, டிரேடர்கள் கேன்சல் செய்யச் செய்த ஆர்டரை நிறைவேற்றத் தவறியது உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காக நாஸ்டாக் ஓ.எம்.எக்ஸ். குரூப் நிறுவனம் மீது ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

- வா.கார்த்திகேயன்.