கோல்டு இ.டிஎஃப். ஃபண்டுகளில் முதலீடு செய்து ஒன்பது மாதத்தில் வெளியேறினேன். இதில் கிடைத்த லாபத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

செந்தில், சென்னை.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர்.

''கடன் ஃபண்டுகள் பிரிவில், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் வருகின்றன. அந்த வகையில் ஓராண்டுக்கு முன் யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது அதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஒருவரின் வருமானத்தோடு சேர்க்கப்படும். அவரின் அடிப்படை வருமான விகிதத்துக்கு ஏற்ப (10%, 20%, 30%) வரி கட்ட வேண்டி வரும்.''

நான் சமீபத்தில் ஒருவரிடமிருந்து ஒரு இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளேன். அந்த இடத்தை விற்றவர் ஆடிட்டிங் தொடர்பாக பத்திரத்தின் நகல் தேவைப்படுகிறது என்கிறார். அப்படி கொடுக்கலாமா?

சரவணன், நங்கநல்லூர்.

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

''வருமான வரிக் கணக்கில் காட்டுவதற்காக விற்பனை செய்த சொத்தின் ஆவணங்கள் தேவைப்படும் என்பதால் சம்பந்தப்பட்ட சொத்தின் நகல் (ஜெராக்ஸ்) ஆவணங்கள் கொடுக்கலாம். நகல் ஆவணங்கள் கொடுப்பதால் உங்களுக்கு எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை.''

வங்கி, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு 15ஹெச் படிவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ராதாகிருஷ்ணன், வேளச்சேரி.

. பாஸ்கரன்,. ஆடிட்டர்..
''ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் பத்தாயிரத்துக்கும் மேல் வட்டி வருகிறபோது அதற்கு வருமான வரி கணக்கிடப்படும். வங்கிகள் முன்கூட்டியே இந்த வரியைப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்துவிடும் என்பதால், இதை தவிர்க்கும் பொருட்டு 15ஹெச் படிவம் கொடுக்க வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வரும் வருமானத்தைத் தவிர வேறு வருமானம் இல்லாதவர்களுக்கு ( வருமான வரி வரம்புக்குள் வராதவர்களுக்கு ) வரிப் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த படிவத்தை சம்பந்தப்பட்ட வங்கிக்கு கொடுக்க வேண்டும்.''

''எங்கள் தரப்பு வழக்கறிஞர் எனக்கு எதிராகவோ அல்லது எனக்கு பாதகமாகவோ நடக்கும்பட்சத்தில் நான் யாரிடம் முறையீடு செய்வது?''

எஸ்.கணேசன், சேலம்.

முருகபாரதி, வழக்கறிஞர்.

''உங்கள் வழக்கை நடத்த ஒப்புக் கொண்ட பிறகு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அதிலிருந்து தவறும் பட்சத்தில், இரண்டு வகைகளில் அவர் மீது நடவடிக்கை கோரலாம். கட்டணம் பெற்றுக்கொண்ட பிறகு தொழில் ரீதியாகச் சேவை குறைப்பாடு இருந்தால் அவர் மீது நுகர்வோர் நீதிமன்ற நடவடிக்கை கோரலாம். அல்லது தன்னு டைய தொழில் ரீதியாக உங்களுக்குப் பாதகமாக நடந்து கொண்டாலோ/நடத்தைத் தவறினாலோ தமிழ்நாடு பார் கவுன்சில், என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்னை-01 என்கிற முகவரிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்''.

''நான் எல்.ஐ.சி.யில் மணி பேக் பாலிசி எடுத்து, கடந்த ஐந்து வருடங்களாக ஆண்டுக்கு 55 ஆயிரம் ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறேன். இதை தற்போது சரண்டர் செய்துவிட்டு டேர்ம் பாலிசிக்கு மாறலாமா? அந்த பாலிசியை சரண்டர் செய்தால் எனக்கு இழப்பு இருக்குமா?''

அழகேசன்,

ரா.கணேஷ், நிதி ஆலோசகர்.

''பொதுவாக மணி பேக் பாலிசித் திட்டங்களில் அதிகமான முதிர்வுத் தொகையை எதிர்பார்க்க முடியாது. இதற்குப் பதிலாக குறைவான தொகையில் அதிக கவரேஜ் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு மாறுவதுதான் சிறப்பானது. சராசரியாக 25-35 வயதிலிருப்பவர்களுக்கு 70 லட்ச ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான பாலிசிக்கு 8,000 முதல் 10,000 ஆயிரம் ரூபாய்வரை பிரீமியம் கட்ட வேண்டி வரும். மீதி தொகையை ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு மாற்றிக் கொண்டால் நல்ல வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலையில் நீங்கள் கட்டிவரும் பாலிசி ஐந்து வருடங்கள் முடிந்திருந்தால் சரண்டர் செய்யலாம். ஆனால், இதிலிருந்து வெளியேறும்பட்சத்தில் முதிர்வுத் தொகை எதிர்பார்க்க முடியாது என்றாலும், கட்டிய பிரீமியத் தொகையில் பெரிய நஷ்டமிருக்காது.''