மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

சிமென்ட் விலை என்ன ஆகும்!

சிமென்ட் விலை என்ன ஆகும்!

சிமென்ட் விலை என்ன ஆகும்!

இந்தியாவில் எல்லா பொருட்களும் ஜெட் வேகத்தில் விலை உயர்ந்து வருகின்றன. இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது கட்டுமானத் துறைக்கு முக்கிய மூலப் பொருளான  சிமென்ட்தான்.  

##~##
சி
மென்டின் இந்த ஜெட் வேக விலை உயர்வுக்கு முன்னணி நிறுவனங்களின் கூட்டு சதிதான் காரணம் என கூறி வர்த்தக நியதிகளுக்கான அமைப்பான 'காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா’ (சி.சி.ஐ.) கிட்டத்தட்ட 6,300 கோடி ரூபாயை பதினொரு பெரிய சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதமாக விதித்துள்ளது.

''பெரிய சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித்திறனை வெகுவாக குறைத்து,  செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை நியாயமே இல்லாமல் மிகவும் அதிகரித்து விற்றதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக'' மத்திய அரசின் நிறுவன விவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.  

இந்த அபராத விதிப்புக்கு முக்கிய காரணம் இந்திய கட்டுனர்கள் சங்கம் (பி.ஏ.ஐ.). சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக சி.சி.ஐ. அமைப்பிடம் புகார் தெரிவித்தது தான்.

சிமென்ட் விலை என்ன ஆகும்!

இந்த பிரச்னை குறித்து பி.ஏ.ஐ.-ன் முன்னாள் தேசிய தலைவரும் சிமென்ட் ஆக்ஷன் கமிட்டியின் தலைவருமான ஆர்.ராதாகிருஷ்ணன் இப்படி சொன்னார்.

''கடந்த 2010, மே மாதத்தில்       50 கிலோ சிமென்ட் மூட்டை 145 ரூபாய்க்கு விற்றது. இது ஜூலையில் 290 ரூபாய்க்கு அதிகரித்தது. இவ்வளவுக்கும் இந்த காலகட்டத்தில் மின் கட்டணம் எதுவும் உயரவில்லை! அரசு வரி எதையும் உயர்த்தவில்லை..! சிமென்ட் மூலப் பொருட்களின் விலையும் உயரவில்லை..! சரக்குக் கட்டணமும் உயரவில்லை.

இவை எதுவும் உயராத நிலையில் சிமென்ட் விலை மட்டும் இரண்டே மாதத்தில் மூட்டைக்கு 145 ரூபாய் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சி.சி.ஐ அமைப்புக்கு புகார் தெரிவித்ததோடு, பெரிய சிமென்ட் நிறுவனங்கள் கூட்டு சதி (கார்டெல்) செய்து சிமென்ட் விலையை எப்படி உயர்த்தின என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னோம்.

சிமென்ட் விலை என்ன ஆகும்!

அந்த அமைப்பும் இரண்டு ஆண்டு கள் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டது. சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள், பில்டர்கள் என பல தரப்பினரையும் அழைத்து விசாரித்தது. விலை உயர்வில் சிண்டிகேட் அமைத்து பெரிய நிறுவனங்கள் செயல்பட்டிருப்பதை அடுத்து, அவற்றுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறது'' என்றார்.

சிமென்ட் விலை என்ன ஆகும்!

இந்த அபராதம் 2009-10 மற்றும் 2010-11-ம் ஆண்டுகளில் சிமென்ட் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் 0.5%அபராதமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 10 நிறுவனங்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் சேர்த்து ரூ.6,300 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அபராதத்தை 90 தினங் களுக்குள் கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் இந்த பத்து கம்பெனிகளின் சிமென்ட் உற்பத்தி, இந்திய சிமென்ட் துறையின் உற்பத்தி யில் சுமார் 50% ஆக இருக்கிறது.

மேலும் பல சிமென்ட் கம்பெனிகள் இந்த சதியில் ஈடுபட்டிருப்பதை சி.சி.ஐ. அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. அந்த நிறுவனங்களுக்கு இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (பி.ஏ.ஐ.) தென்னக மையத்தின் தலைவர் மு.மோகனிடம் இதுபற்றி பேசினோம்.

''தமிழ்நாடு அரசு சிமென்ட் மூட்டை 180 ரூபாய்க்கு விற்கும்போது, தனியார் நிறுவனங்கள் 300 ரூபாய்க்கு விற்பது என்பது கொள்ளை லாபம் தானே? இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். சொந்தமாக வீடு கட்டினாலும் கட்டிய வீட்டை வாங்கினாலும் அதிக தொகை செலவிடபோவது அவர்கள் தான்..! சி.சி.ஐ. தீர்ப்பை மேற்கோள்காட்டி மத்திய அரசை சிமென்ட் துறைக்கு என ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். அதன் மூலம் சிமென்ட் விலையை நிர்ணயிக்க கேட்டு இருக்கிறோம். கூடவே மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் சிமென்ட் இறக்குமதிக்கான வரியை முற்றிலும் நீக்க கோரிக்கை வைக்க இருக்கிறோம். அப்படி நீக்கும்பட்சத்தில் ஒரு மூட்டை சிமென்ட் 200 ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும். அப்போது உள்நாட்டு சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த அளவுக்கு விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

சிமென்ட் விலை என்ன ஆகும்!

அபராதம் விதிக்கப்பட்ட சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள், ''இந்த குற்றச்சாட்டு பொய். நாங்கள் கூட்டுச்சதி செய்து சிமென்ட் விலையை உயர்த்தி இருக்கிறோம் என்பதில் எந்த அடிப்படையும் இல்லை. சி.சி.ஐ. அபராதத்தை எதிர்த்து அப்பீல் செய்ய இருக்கிறோம்'' என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த முன்னணி புரமோட்டர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை சொன்னார்.

''இந்த சதித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தது தென்னகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர்தான். அவரது கட்டுப்பாட்டில்தான் இந்தியா வின் முன்னணி சிமென்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. எல்லா சிமென்ட் நிறுவனங் களும் இவர் பேச்சை கேட்டு ஆடுவது அநியாயம்'' என்றார்.

இந்தத் தீர்ப்பை ஃபெடரேஷன் ஆஃப் ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசி யேஷன் தலைவர் மணிசங்கர் வரவேற்றார். அவர் நம்மிடம், ''கடந்த ஐந்தாண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை 100 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இதில் சிமென்ட் விலைதான் மிகவும் அநியாயமாக உயர்த்தப் பட்டிருக்கிறது. ஒரு மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் 150 ரூபாய்தான். ஆனால், அதை 300 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால் அநியாயம்தானே..! சி.சி.ஐ.யின் இந்த அதிரடி அபராதம் சரியான முடிவுதான். எதிர்காலத்தில் சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுச்சதி செய்ய பயப்படும். அந்த வகையில் கூடிய விரைவில் சிமென்ட் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்'' என்றார்.

வீடு கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சிமென்ட் விலை குறைந்து நடுத்தர மக்களின் வீட்டுக் கனவு நனவால் சரிதான்..!

- சி.சரவணன்
படங்கள் என்.விவேக்