Election bannerElection banner
Published:Updated:

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!

பில் ஆஃப் சேல் (Bill Of Sale)

பொருட்களை விற்பனை செய்யும்போது விற்பவர், வாங்குபவருக்கு ஆதாரமாக அளிக்கும் ரசீதுதான் இந்த பில் ஆஃப் சேல். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கான ரசீதை பத்திரமாக வைத்திருப்பது பல சமயங்களில் உதவியாக இருக்கும். மேலும், இந்த ரசீதில் பொருளுக்கு வாங்கப்பட்ட உண்மையான தொகையை மட்டும் குறிப்பிடுவது எப்போதும் நல்லது.  

பியர் பொசிஷன் (Bear Position)

##~##
ஷா
ர்ட் பொசிஷன் என்பதன் இன்னொரு வார்த்தை பிரயோகம்தான் பியர் பொசிஷன். அதாவது, பங்கை வாங்கிவிட்டு விற்பதைவிட, அதிக விலை இருக்கும்போது விற்றுவிட்டு, குறைந்த விலைக்கு வரும்போது வாங்குவது. இப்படி செய்கிறவர்களை பியர்கள் (கரடிகள்) என்று அழைப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக சந்தை இறங்குவதற்கான வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் இந்த பியர் பொசிஷன் எடுக்கலாம். இவர்கள் பங்குச் சந்தை முதலீட்டில் அடிக்கடி களமிறங்க மாட்டார்கள். நிச்சயமான வீழ்ச்சி என்று தெரிய வரும்போது மட்டுமே தலை காட்டுவார்கள்.

புளூ காலர் டிரேடர் (Blue Collar Trader)

திக ரிஸ்க் இல்லாத முதலீடுகள் மூலம் ஓரளவுக்கு வருமானம் ஈட்டுபவர்களைதான் புளூ காலர் டிரேடர் என்கிறார்கள். இவர்கள் டிரேடர்கள் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவர்கள் டிரேடர்கள் அல்ல, முதலீட்டாளர்களே.. இவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளில் வர்த்தகம் செய்ய மாட்டார்கள்.

பை லிமிட் ஆர்டர் (Buy Limit Order)

ங்குச் சந்தையில் ஒருவர் ஒரு பங்கை வாங்க நினைக்கிறார் என்றால், அந்த பங்கு குறிப்பிட்ட விலையில் வர்த்தகமாகும்போது  அதை வாங்கப் போடும் ஆர்டர்தான் 'பை லிமிட் ஆர்டர்’. உதாரணமாக, ஒரு பங்கு 155 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது எனில், 150 ரூபாய்க்கு பை லிமிட் ஆர்டர் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பங்கு 155 ரூபாய்க்கு கீழே இறங்கி 150 ரூபாய்க்கு வரும்போது தானாக வாங்கப்பட்டுவிடும். இதுதான் பை லிமிட் ஆர்டர்.

தொகுப்பு: பானுமதி அருணாசலம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு