Election bannerElection banner
Published:Updated:

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!

பையிங் பவர் (BUYING POWER)

##~##
ங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஒருவரின் பங்கு வாங்கும் சக்திதான் 'பையிங் பவர்’. டிரேடிங் அக்கவுன்ட் என்கிற பங்கு வர்த்தகக் கணக்கில் இருக்கும் தொகை மற்றும் மார்ஜின் தொகை ஆகிய இரண்டு தொகையும் சேர்ந்து ஒருவரின் வாங்கும் சக்தியாக இருக்கும். உதாரணமாக, டிரேடிங் கணக்கில் 1,000 ரூபாய் இருக்கிறது. வர்த்தகத்துக்கு 50% மார்ஜின் தொகை போதும் என்கிறபட்சத்தில் அவரின் வாங்கும் சக்தி 2,000 ரூபாய். இதுவே மார்ஜின் தொகை இல்லாத பங்கு முதலீட்டில் டிரேடிங் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறதோ, அதுவே வாங்கும் சக்தியாக இருக்கும்.

பேலன்ஸ் ஷீட் ரிசர்வ்ஸ் (BALANCE SHEET RESERVES)

ன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் எதிர்காலத்தில் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும் கிளைம் மற்றும் தற்போது கொடுக்க வேண்டியிருக்கும் தொகையை பேலன்ஸ் ஷீட் ரிசர்வ்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இந்த தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சட்டபடி ஒதுக்கீடு செய்வது அவசியம்..!

பிஸினஸ் இன்ஷூரன்ஸ் (BUSINESS INSURANCE)

பிஸினஸில் ஏற்படும் நஷ்டத்தை, கிளைம் பெறும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது. சொத்துக்கள் சேதமாவது, சட்ட ரீதியாகக் கொடுக்க வேண்டிய இழப்பீடுகள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆகியவை மூலமாக ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வதே பிஸினஸ் இன்ஷூரன்ஸ்.

பிஸினஸ் லையபிலிட்டி இன்ஷூரன்ஸ் (BUSINESS LIABILITY INSURANCE)

ட்ட ரீதியாக பிஸினஸில் ஏற்படும் பிரச்னைகளை சமாளித்து, தம்மை பாதுகாத்துக் கொள்வதுதான் பிஸினஸ் லையபிலிட்டி இன்ஷூரன்ஸ். நீங்கள் ஒரு சிறுதொழிலை பார்ட்னர்ஷிப் முறையில் செய்து கொண்டிருக்கிறீர்கள் எனில் சில சட்ட பிரச்னைகளில் உங்களுடைய தனிப்பட்ட பணத்தையும் இழக்க நேரிடும். அந்த பொருளாதார இழப்புகளை இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் சரி செய்துகொள்ளலாம்.

பிஸினஸ் கிரைம் இன்ஷூரன்ஸ் (BUSINESS CRIME INSURANCE)

பிஸினஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களினால் ஏற்படும் பிரச்னைகளை பாதுகாத்துக் கொள்ள எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் இது. திருட்டு, ஏமாற்றுதல், ஆவணங்கள் திருட்டு மற்றும் பிஸினஸ் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பீடுகளை சரி செய்ய இந்த  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம்.

- பானுமதி அருணாசலம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு