Election bannerElection banner
Published:Updated:

புதிய மாற்றத்துடன் 'பத்லா'!

புதிய மாற்றத்துடன் 'பத்லா'!

புதிய மாற்றத்துடன் 'பத்லா'!

ங்குச் சந்தையில் புதுப்புது புராடக்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் வரப்போகிறது 'கேஷ் ஃப்யூச்சர் ஸ்பிரட்’ (சி.எஃப்.எஸ்.). கூடிய விரைவில் மேலும் ஒரு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வரவிருப்பதால் புதுமையைப் புகுத்துவதற்காக இந்த 'கேஷ் ஃப்யூச்சர் ஸ்பிரட்’டை கொண்டு வரப்போகிறது மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.

இந்த 'கேஷ் ஃப்யூச்சர் ஸ்பிரட்’ என்பது 1990-களில் நடைமுறையில் இருந்த 'பத்லா’ என்பதன் மறுவடிவம்தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இது என்ன மாதிரியானது, ஏன் இதை மீண்டும் கொண்டு வருகிறார்கள் என சில பங்குச் சந்தை நிபுணர்களிடம் பேசினோம்.

##~##
''பத்லா’ என்பது மும்பை பங்குச் சந்தையில் பல ஆண்டுகாலமாக இருந்த நடைமுறை. 1990-களில் இந்த நடைமுறையை ஒழித்துக்கட்டியது செபி. அந்த சமயத்தில் நடந்த முறைகேடுகள்தான் இதற்குக் காரணம் என்று சொன்னாலும், அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த 'பத்லா’ எப்படி செயல்படுகிறது என்பது புரியவில்லை என்பதுதான் உண்மையான காரணம்'' என்றார்கள் சந்தை நிபுணர்கள்.

சரி, இப்போது கொண்டுவரப்பட இருக்கும் 'கேஷ் ஃப்யூச்சர் ஸ்பிரட்’ எப்போது நடைமுறைக்கு வரும், இதனால் டிரேடர்களுக்கு என்ன நன்மை என பி.எஸ்.இ.-யின் உயரதிகாரி ஒருவருடன் பேசினோம். சில விளக்கங்களைச் சொன்னார்.

''வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி இந்த திட்டத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். நாங்கள் இந்த புராடக்ட்டை கொண்டு வருவதற்கும் எம்.சி.எக்ஸ். பங்குச் சந்தை வரப்போவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் நீண்ட காலமாகவே இந்த திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம். மேலும், ஃப்யூச்சர் டெலிவரி சிஸ்டம் பி.எஸ்.இ.யில் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இந்த திட்டத்தைக் கொண்டுவரப் போகிறோம்.

கேஷ் மார்க்கெட்டிலும், ஃப்யூச்சர் மார்க்கெட்டிலும் இருக்கும் விலை வித்தியாசங்களை பயன்படுத்துவதற்கு ஆர்பிட்ரேஜ் என்று சொல்வார்கள். (அதாவது, ஒரு பங்கு கேஷ் மார்க்கெட்டில் 95 ரூபாய்க்கு வர்த்தகமாகும்; அதே பங்கு எஃப். அண்ட் ஓ பிரிவில் 100 ரூபாய்க்கு வர்த்தகமாகும். இதை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதே ஆர்பிட்ரேஜ்). இப்போது இந்த ஆர்பிட்ரேஜை செய்ய வேண்டும் எனில், நான்கு செயல்களை செய்ய வேண்டும். ஆனால், 'கேஷ் ஃப்யூச்சர் ஸ்பிரட்’டில் இரண்டே இரண்டு செயல் மூலம் எளிதாக லாபம் சம்பாதிக்க முடியும்'' என்றார்.

புதிதாக வரும் இந்த புராடக்ட் டிரேடர்களுக்கு பணத்தை அள்ளித் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

- வா.கார்த்திகேயன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு