Election bannerElection banner
Published:Updated:

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!

முதலீட்டு அகராதி..!
##~##
புரோக்கரேஜ் கம்பெனி
(BROKERAGE COMPANY)

வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையில் பாலமாக இருக்கும் நிறுவனத்தை புரோக்கரேஜ் கம்பெனி என கூறுகிறோம். பங்குச் சந்தை, கமாடிட்டி, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் புரோக்கர் நிறுவனங்கள் அல்லது புரோக்கர்களின் பங்கு அதிகமாக இருக்கும். பரிவர்த்தனை முடித்துக் கொடுத்தால் அதற்கான கமிஷன் அவர்களுக்கு கிடைக்கும். இந்த வேலையை செய்வதற்காகவே பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பேக் எண்ட் லோடு
(BACK END LOAD)

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பயன்படுத்தும் வார்த்தை தான் 'பேக் எண்ட் லோடு’. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று பணமாக்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் இது. இந்த கட்டணம் ஆரம்ப ஆண்டுகளில் அதிகமாகவும், அடுத்தடுத்த வருடங்களில் குறைவாகவும் இருக்கும்.

பாண்ட் ஃபண்ட்
(BOND FUND)

அரசு கடன் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் வகைதான் பாண்ட் ஃபண்ட். இதில் அதிக ரிஸ்க் இருக்காது. ஓரளவுக்கு நியாயமான, நிலையான வருமானம் தருவதுதான் பாண்ட் ஃபண்ட்.

பேலன்ஸ்டு ஃபண்ட்
(BALANCED FUND)

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் திரட்டப்படும் நிதியை நிறுவனப் பங்குகள், கடன் பத்திரம், நிதிச் சந்தை என பலவிதமாகப் பிரித்து முதலீடு செய்வது பேலன்ஸ்டு ஃபண்ட். இந்த ஃபண்ட் திட்டங்களில் போட்ட முதலுக்கு மோசம் வராமல் ஓரளவுக்கு நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம். பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கம் இந்த ஃபண்டின் செயல்பாட்டை அதிகம் பாதிக்காது.

- தொகுப்பு: பானுமதி அருணாசலம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு