முதலீட்டு அகராதி..!

பலூன் பேமென்ட் (BALOON PAYMENT)

##~##
வீட்டுக் கடன் வாங்கும்போது ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் கடனைக் கட்டி வருவோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு சம்பளம் உயர்ந்ததும் தவணைத் தொகையையும் அதிகரித்து கட்டுவதுதான் பலூன் பேமென்ட். உதாரணமாக, ஐந்து லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கி மாதம் 5,000 ரூபாய் தவணை கட்டி வருகிறீர்கள் எனில், ஐந்து வருடங்கள் கழித்து உங்களது சம்பளம் உயரும்போது கூடுதலாக 2,000 ரூபாய் சேர்த்து 7,000 ரூபாயாக கடனை திருப்பிச் செலுத்துவதுதான்.

பெனிஃபிஷியல் இன்ட்ரெஸ்ட் (Beneficial Interest)

இன்னொரு நபரின் சொத்தை அனுபவிப்பதுதான் பெனிஃபிஷியல் இன்ட்ரெஸ்ட். உதாரணமாக,  ஒருவர் வாடகை தந்துவிட்டு ஒரு வீட்டில் இருக்கிறார் எனில், அவரே அந்த வீட்டை அனுபவிப்பவர் ஆகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் வேறொருவராக இருந்தாலும், அந்த வீட்டில் வசிக்கும் நபரே அதனை அனுபவிப்பவராகக் கருதப்படுவார்.

பிளண்டெட் இன்ட்ரெஸ்ட் (BLENDED INTEREST)

மாறுபடும் (FLOATING RATE) மற்றும் நிலையான வட்டி (FIXED RATE) விகிதத்தின் கலவைதான் பிளண்டெட் இன்ட்ரெஸ்ட். உதாரணமாக ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் அதில் இரண்டு லட்சத்தை மாறுபடும் வட்டி விகிதத்திலும், மீதமுள்ள மூன்று லட்சம் ரூபாயை நிலையான வட்டி விகிதத்திலும் அமைத்துக்கொள்ளலாம். பொதுவாக இந்த வசதி வீட்டுக் கடன் வாங்கும்போது அளிக்கப்படுகிறது. இதை மிக்ஸ்டு இன்ட்ரெஸ்ட் என்றும் சொல்கிறார்கள்.

கிரெடிட் கார்டு (Credit Card)

வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஒருவரின் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கும் கடன் அட்டைதான் கிரெடிட் கார்டு. இந்த கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான தொகைக்கு அதிகபட்சமாக சுமார் 45-50 நாட்கள் வரை வட்டி ஏதும் கிடையாது என்பதே இதன் கவர்ச்சிகரமான அம்சம். அதே நேரத்தில் இந்த கெடு தேதியை தாண்டினால் ஆண்டுக்கு 35-40 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

தொகுப்பு: பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு