Published:Updated:

ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

எனது தந்தையார், பாகம் பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்தின் மூலம் வந்த வருமானத்தில் ஆயுள் காப்பீடு பிரீமியம் கட்டியுள்ளார். அவர் இறந்தபிறகு ஆயுள் காப்பீடு தொகை நேரடி வாரிசான எங்கள் குடும்பத்துக்குச் சேருமா அல்லது கூட்டுக் குடும்ப அனைத்து வாரிசுகளுக்கும் பங்கு உள்ளதா?

அரியா.ஜானகிராமன், கும்பகோணம்.

##~##
அ.ரோஜா,
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''ஆயுள் காப்பீடு என்பதன் நோக்கம் ஒருவர் இறந்துவிட்டால் அவரை சார்ந்திருப்பவர்களுக்கு அவரால் கிடைத்த பணப் பலன்கள் தடைபடக் கூடாது என்பதுதான். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நலன் சார்ந்தது மட்டுமே. ஆயுள் காப்பீடை ஒரு சொத்தாக கருத முடியாது. கூட்டுக் குடும்ப சொத்தின் வருமானத்தின் மூலம் பணம் கட்டியிருப்பதால் ஆயுள் காப்பீடு தொகையை கூட்டுக் குடும்பச் சொத்தாக கணக்கெடுக்க முடியாது. ஆயுள் காப்பீடு செய்துகொண்ட நபரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மட்டுமே இந்த தொகை சேரும். கூட்டுக் குடும்பத்தின் மற்றவர்கள் இதில் உரிமை கோர முடியாது.''

ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மின்சாதனப் பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடமிருந்து  பொருட்களை வாங்கிய ஒரு நிறுவனம் ஓராண்டுக்கு மேல் பணத்தைத் தராமல் தாமதப்படுத்தி வருகிறது. பலமுறை கேட்டும் பதில் இல்லை. அந்த நிறுவனத்திடமிருந்து சட்டப்பூர்வமாக பணத்தைப் பெறுவது எப்படி?

முருகவேல், கோவை.

வைதேகி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

''பொருட்களை அனுப்பி, கம்பெனியிடமிருந்து பணம் வராதபட்சத்தில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியும். முதலில் ஒரு வழக்கறிஞர் மூலம் பணம் கேட்டு கடிதம் அனுப்புங்கள். இந்த கடிதம் சேர்ந்து பதினைந்து நாட்களுக்குள் அந்த நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு முறையான தகவல் வராதபட்சத்தில், நீதிமன்றத்தின் மூலம் பணத்தை வாங்கித் தருமாறு கோரி வழக்குத் தொடுக்கலாம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இறங்கும் முன் நிறுவனத்துக்குப் பொருட்களை அனுப்பிய விவரம், அதற்குரிய ரசீதுகள், அதற்கு முன்பு அந்த நிறுவனத்தோடு இருந்த வியாபார உறவுகள், வங்கி மூலம் பரிவர்த்தனை நடந்திருந்தால் அதற்கான விவரம், பொருட்களை அனுப்பியதற்கான ரசீதுகள் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.''

ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்தியாவிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு மதிப்புடைய பொருட்களை பரிசாக அனுப்பலாம்?

கோவர்த்தன், திருப்பூர்.

ஏ.செந்தில்குமார், ஆடிட்டர்.

''வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்புகொண்ட பொருட்களை ஓராண்டில் பரிசாக அனுப்பலாம். இதற்கு தனியாக இந்தியாவில் வரிக் கட்ட வேண்டாம். ஆனால், அந்தந்த நாட்டின் வரி மற்றும் சட்டத் திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும். பரிசை பணமாக அனுப்பினால் வருடத்திற்கு 2 லட்சம் டாலர் மதிப்பில் அனுப்பலாம். அதற்குமேல் அனுப்ப வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்.

ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

''எஸ்.டி.பி., எஸ்.டபிள்யூ.பி. மற்றும் ஸ்வீப் பிளான் என்றால் என்ன?

ஸ்ரீதர், திருத்தணி.

சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ரம் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''எஸ்.டி.பி: முதலீட்டுத் தொகையை மொத்தமாக லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, அந்த லிக்விட் ஃபண்டிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் தேர்வு செய்யும் பேலன்ஸ்டு அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டிற்கு முதலீட்டை கொண்டுவருவது எஸ்.டி.பி. (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்) என்கிறோம். பங்குச் சந்தை சூழல் சாதகமாக இல்லாத நிலைமைகளில் இதுபோல செய்வது நல்லது.

எஸ்.டபிள்யூ.பி.: ஃபண்டிலிருந்து வெளியேறும்போது முதலீட்டை மொத்தமாக எடுக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்வது எஸ்.டபிள்யூ.பி. (சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான்) என்கிறோம். ஓய்வுக்காலத்திற்குப் பிறகு மாதாமாதம் தொகை தேவைப்படும். பென்ஷன்தாரர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

ஸ்வீப் பிளான்: எஸ்.ஐ.பி. முறையில் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்போது குறிப்பிட்ட தொகைக்குமேல் போனால், (உதாரணமாக, 1 லட்ச ரூபாய்க்குமேல் போனால்) வேறொரு ஃபண்டிற்கு மாற்றிக்கொள்வது. தேவைக்கேற்ப இந்த திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.''  

ஆயுள் காப்பீடு தொகை? அப்பாவுக்கு பிறகு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு