Published:Updated:

எடக்கு மடக்கு!

எடக்கு மடக்கு!

எடக்கு மடக்கு!

எடக்கு மடக்கு!

Published:Updated:
எடக்கு மடக்கு!
##~##
''ஏ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காம்பரம், ஒரு வீடு வாங்கலாமுன்னுப் பாக்குறேன். அதைப் பத்திப் பேசணும். என் வீட்டுக்கு வர்றியா?''ன்னு கூப்பிட்டாருங்க என் நண்பர். நானும் அவர் வீட்டுக்குப் போனேன். ''வீடு வாங்கப் போறியா, மொத்த உன் பட்ஜெட்டை சொல்லு''ன்னேன். ''பட்ஜெட் என்ன பட்ஜெட். பி.எஃப். பிடித்தமெல்லாம் போக எனக்குக் கிடைக்கிற மாசச் சம்பளம் 27,000 ரூபா. வாடகை, சாப்பாடு, இன்ஷூரன்ஸ், மெடிக்ளைம், குழந்தைக்கு ஸ்கூல் பீஸு (4-ம் வகுப்பு 45 ஆயிரம் ரூபா பீஸு!) எல்லாம் போக வருஷத்துக்கு ஒரு லட்சம் மிச்சப்படுத்துறேன். இதுக்கே நான் பட்றபாடு எனக்குத்தான் தெரியும்''ன்னு மூக்கால அழுதுகிட்டே பட்ஜெட் தாக்கல் செஞ்சாரு.

''சரி, பட்ஜெட்டை சொல்லிட்டே! வீட்டோட அளவைச் சொல்லு''ன்னேன். ''குறைஞ்சபட்சம் ஒரு 650 சதுர அடியாவது வேணுமில்ல''ன்னாரு. ஆனா, அவரோட பெண்டாட்டியோ, அதெல்லாம் பத்தாதுங்க. பொம்பளைப்புள்ளைய வேற வச்சுருக்கோம். நாளைக்குக் கல்யாணம் காட்சின்னா மாப்பிள்ளை வந்து போக வசதியா 1,200 சதுர அடியாவது வேணுமுங்க'' என்று சொல்ல, என் ஃபிரெண்டு ஒரு மொறை மொறைச்சான். ஆனா, எனக்கோ அவனுக்கு 850 சதுர அடியாவது தேவைன்னு தோணுச்சு.  

முதல்ல ஃப்ளாட் விளம்பரத்துக்கு போனைப் போட்டேன். அவரு இப்ப இருக்கிற இடத்தில இருந்து 20 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற இடத்திலேயே 3,000 ரூபாய் சதுர அடின்னான்.  கிட்டத்தட்ட 26 லட்சம் ஆயிடுது. நாலு லட்சம் கையில இருக்குங்கிறாரு. மீதித் தொகையை 15 வருஷத்துக்கு லோன் போட்டா, கிட்டத்தட்ட மாசம் 22,000 ரூபாய் வந்துடுது. இது சரிப்படாதுன்னு 650 சதுர அடி விளம்பரமாப் பார்த்தேன். அவனுங்களும் யாருக்கும் சலிச்சவனா இல்லை. 20 லட்சம் சொல்றான். கையிருப்பு போக மீதி 16-க்கு லோன் போட்டா மாச இன்ஸ்டால்மென்ட் ரூபாய் 17,500 வருது.

எடக்கு மடக்கு!

சரி, ஃப்ளாட் லாயக்குப்படாது. எடத்தை வாங்கி வீடு கட்டலாமுன்னு எடு பைக்கைன்னேன். என்கூட ஸ்கூல்ல படிச்ச பய ஒருத்தன் சிவில் இன்ஜினீயரா இருக்கான். அவங்கிட்ட போனோம். 850 சதுர அடியில வீடு கட்டணும்; என்ன செலவாகும்னு கேட்டேன். நெருக்கிப் பிடிச்சா சதுர அடிக்கு 1,350-ல இருந்து 1,500 வரைக்கும் ஆகலாம்னான். ஒகேன்னுட்டு, எனக்குத் தெரிஞ்ச ஒரு புரோக்கரைப் போய் பார்த்தோம். தடபுடலா வரவேற்று ஜூஸெல்லாம் தந்தாரு. நண்பருக்குப் பிடிச்ச ஏரியாவோட பேரை சொல்லி, அங்க ஒரு கிரவுண்டு (2,400 ச.அடி) எவ்வளவு விலைன்னு கேட்டேன். ''அண்ணே, ஒரு நல்ல பிராப்பர்ட்டி ரெடியா இருக்கு. டாக்குமென்ட் எல்லாம் ரொம்ப கிளீன். ஒரு ஒன் சி-க்கு முடுச்சுடலாமாண்ணே''ன்னாரு.

சி-க்கு எல்லாம் போகாதீங்கன்னு சொல்லிட்டு, நண்பரோட பட்ஜெட்டை சொன்னேன். அதுக்கும் சளைக்காத அந்த புரோக்கரு, ''அந்த பட்ஜெட்ல அந்த ஊர்ல எடம் இருக்குண்ணே''ன்னாரு! அவர் சொன்ன இடம் சிட்டியை விட்டு 25 கி.மீ. தள்ளி இருந்தது. அமைதியான இடம். இருபது அடியில நல்ல தண்ணி. ஆனா, எவனாவது வந்து அடிச்சுப் போட்டா, அதைக் கேட்குறதுக்கு அஞ்சு கிலோ மீட்டருக்கு அந்த பக்கத்துல இருந்துதான் ஆளே வரணும். எப்படியும் அங்க வீடு கட்டி குடிவரணுமுன்னா ஒரு பத்து வருஷமாவது ஆகும்!

சரி, அரசாங்கம் விக்குதே நிலம். அதையாச்சும் போய்ப் பார்ப்போமுன்னு போனோம். அதுலயும் பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்லை. என்ன, கொஞ்சம் சின்ன சைட்டுகள் கிடைக்குது. விலையெல்லாம் மார்க்கெட் ரேட்டுதான். இவ்வளவையும் பாத்த என் நண்பன் வீடு வாங்குறதா, இல்லையான்னு கொழம்பிப் போயி உக்காந்திருக்கான்.  

என்னங்க நடக்குது நம்ம நாட்டுல? பில்டருங்க விலை ஏத்திகிட்டே போறாங்க. புரோக்கருங்க நிலத்தை விக்கிறவங்களை கையில போட்டுகிட்டு இஷ்டத்துக்கு விலை ஏத்துறாங்க. இந்த நெலைமையில சிட்டிக்கு வெளியதான் என் ஃபிரெண்டு மாதிரியான ஆளுங்களால எடத்தை வாங்க முடியும். ஆனா, அங்கே போய் வீட்டைக் கட்டி குடியிருந்தா ஸ்கூல், ஆபீஸுன்னு போய்வரதுக்கு சான்ஸே இல்லே. இப்படி இருக்கிற நெலைமையில சாமான்யன் ஒருத்தன் சொந்தமா வீடு கட்டவே முடியாதா? இதுக்கெல்லாம் இந்த அரசாங்கம் ஒரு தீர்வு சொல்லாதா?

''என்ன ஏகாம்பரம், அரசாங்கம் மிக்ஸி குடுக்கும்; கிரைண்டர் குடுக்கும். வீட்டையுமா குடுக்கும்''னு நீங்க கேக்கலாம். நாங்க ஒண்ணும் ஓசியில இலவசமா வீடு குடுங்கன்னு அரசாங்கத்துக்கிட்ட கேக்கலயே! வாங்கத் தகுந்த விலையில (அஃப்பர்டபிள் ஹவுஸிங்) அரசாங்கம் வீடு கட்டித் தரலாமேன்னுதானே கேக்குறோம்!

எடக்கு மடக்கு!

வாங்கத் தகுந்த விலைன்னா மலிவு விலை வீடு இல்லீங்க. மலிவு விலையில கேட்டா குவாலிட்டியும் மலிவாப் போயிடும். ஒவ்வொரு சிட்டியையும் ஒட்டி வாங்கத் தகுந்த விலையில அரசாங்கம் வீடு கட்டித் தரலாமில்லையா?  

'அதுதான் ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஹவுஸிங் போர்டு இருக்கே?’ன்னு நீங்க கேக்கலாம். ஹவுஸிங் போர்டுகளுக்கு இருக்கற கெப்பாசிட்டி யானைப்பசிக்கு சோளப்பொரி போடற மாதிரிகூட இல்லை. ஒரே ஒரு சோளப் பொரியை எடுத்துப் போட்ட மாதிரி இருக்குது. தமிழ்நாட்டை கணக்கில் எடுத்துக்கிட்டா, அம்பது வருஷ காலத்தில கிட்டத்தட்ட வருஷத்துக்கு 10,000 வீடு கட்டிக் கொடுத்திருக்காங்க. இருக்கற தேவைக்கு இது எந்த மூலைக்குங்க?

அமெரிக்காவுல இரண்டாம் உலகப் போர் முடிஞ்ச பின்னாடி 1947-ல இருந்து 1951-க்குள்ள ஒரு நாளைக்கு 34 வீடு வீதம் கட்டி அதை வாங்கத் தகுந்த விலையில, டவுன் பேமென்ட் ஏதும் இல்லாம, மாசாமாசம் வாடகை கொடுத்து முப்பது வருஷத்துக்குப் பிறகு சொந்தமாக்கிக்கிற திட்டத்தை நிறைவேற்றியிருக்காங்க.  

இப்ப சீனாவுல ஓடிக்கிட்டிருக்கிற திட்டத்தைச் சொல்றேன். அடுத்த அஞ்சு வருஷத்துல 36 மில்லியன் வீடு கட்டி வாங்கத் தகுந்த விலையில தர்றதுக்கு அரசாங்கம் தயாராகிட்டு இருக்கு. சிங்கப்பூரிலயும் பல்வேறு விதமான வீடுகளை கட்டி அரசாங்கம் ஜனங்களை குடி வச்சிருக்கு. அந்த ஏரியாவுக்கு பப்ளிக் டிரான்ஸ்போர்ட், ஸ்கூல், கடையுன்னு எல்லா ஏற்பாடும் செஞ்சு தந்துருக்கு.  

இப்ப நம்ம நாட்டுல இருக்கிற தேவைக்கும், நிலமும் வீடு கட்டத் தேவையான பொருட்களும் விக்குற விலைக்கு அரசாங்கம் முதல் பிரையாரிட்டியா வாங்கத் தகுந்த விலையில ஒவ்வொரு டவுனுக்கு அருகேயும் கிடைக்கிற மாதிரி வீடு கட்டும் திட்டத்தைப் போட்டு செயல்படுத்தணும். வாங்கற சம்பளத்துல

30 சதவிகிதத்துக்குள்ள மாசத் தவணை இருக்கற மாதிரி இருக்கணும். 1.5 லட்சத்துக்கு கீழே வருஷ வருமானம் இருக்கிறவங்க, 1.50-3.00 லட்சம் வருஷ வருமானம் இருக்கறவங்க போன்ற இரண்டு பிரிவினருக்கும் உடனடியா இந்தத் திட்டம் நிறைவேத்தணும்.

தனியார் முதலாளிங்க இதைச் செய்யப் பிரியப்படவே மாட்டாங்க. அவங்க நோக்கமே அதிக லாபம்தானே! அரசாங்கத்தால மட்டும்தான் சரியான விலையில தரமான வீட்டை கட்டித் தரமுடியும்! மூன்று லட்சத்திற்கு கீழே வருமானமிருக்கிற கூட்டம் நம்ம நாட்டுல ஜாஸ்தி.  பணத்தை வட்டியோட நாம 20-30 வருஷத்தில கட்டத்தானே போறோம். திட்டம் போட்டு பணம் திரட்டி நிர்வகிக்கிறது மட்டும்தான் அரசாங்கத்தோட வேலை.

இந்த டைரக்ஷனுல யாரும் யோசிக்கிற மாதிரியே தெரியலீங்க. ஆனா, இந்த டைரக்ஷனுல யாரும் யோசிக்கலேன்னா, பின்னாடி ரொம்பவே கஷ்டப்படணுமுங்க. இந்த மாதிரி திட்டம் போட்டு செயல்படுத்துனாலே பொருளாதாரமும் எழுந்து நடக்க ஆரம்பிச்சுடும்.

நாட்டை ஆளுற அரசியல்வாதிங்களே, நீங்க 2ஜியில, நிலக்கரியைத் தோண்டுறதுல அனுமதி தர்றதுல, கிரானைட் கல்லை எடுத்து விக்குறதுல காட்டுற அக்கறையைக் கொஞ்சத்தையாவது இந்த விஷயத்துல காட்டுங்களேன். உங்களுக்கெல்லாம் சொத்து இருக்கு. அது டபுளாயிடுது, அஞ்சு பத்து வருஷத்துல. எங்களுக்குக் குடியிருக்க ஒரு வீடுகூட இல்லீங்களே! நாங்க என்ன பங்களாவும் பண்ணை வீடுமா கேட்குறோம். ஒண்டியிருக் கிறதுக்குச் சொந்தமா ஒரு வீடுதானுங்களே! அதுவும், எங்க சம்பாத்தியத்துக்குள்ளே! இந்த சிம்பிள் விஷயம் ஏங்க உங்களுக்குப் புரிய மாட்டேங்குது?

ஓவியம்: ஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism