Published:Updated:

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

Published:Updated:
காக்டெய்ல்

1. புகார் - தீர்வு!

சமீபத்தில் ஆர்.பி.ஐ. பேங்கிங் ஆம்புட்ஸ்மேன் அமைப்புக்கு வந்த புகார்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. இதில் 24% புகார்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு போன்றவை குறித்து இருந்தன. அதிகமான புகார்கள் கல்விக் கடன் குறித்துதான். கடந்த ஆண்டில் பெறப்பட்ட மொத்த புகார்களில் 94 சதவிகித  புகார்களுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. குறைதீர்ப்பாளர் எஸ்.கணேஷ் சொல்லி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட, நல்ல விஷயம்தான்!

2. பதக்கம் தந்த பத்து லட்சம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கிரிஷா நாகராசி உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்த பதக்கத்தை வாங்கியிருக்காவிட்டால் இந்தியாவிற்கு ஒரு பதக்கம்கூட கிடைத்திருக்காது. வெள்ளி வென்ற இவருக்கு இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம் பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

வெல்டன் கிரிஷா!

3. ஏழை அமைச்சர்!

##~##
போன வருடம் 5.30 கோடி ரூபாயாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து, இந்த வருடம் இரட்டிப்பாகியுள்ளது. ஆனால், மற்ற அமைச்சர்களின் சொத்துகள் இவரைவிட பல மடங்கு இருக்கிறது. பிரதமரின் சொத்து மதிப்பு 10.73 கோடி. மத்திய அமைச்சர் பிரஃபுல் படேலுக்கு 53 கோடி ரூபாய் சொத்துள்ளது. ஆனால், அவரது கட்சித் தலைவர் சரத்பவாரின் சொத்து மதிப்பு 22 கோடி ரூபாய்தானாம். நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து 30 கோடிக்கு மேல். இப்போதிருக்கும் அமைச்சர்களிலேயே மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணிதான். அவரது சொத்து மதிப்பு 55 லட்சம் ரூபாய்தானாம். கேபினட் அமைச்சர்களிலேயே குறைந்த சொத்து உடையவர் இவர்தானாம்.

அட, இவ்வளவுதானாக்கும்!

காக்டெய்ல்

4. அமீர் த கிரேட்!

பிரபல பத்திரிகையான 'டைம்ஸ்’ இதழ் பல்வேறு நாட்டில் உள்ள பிரபலங்கள் சாதனை செய்யும்போது, அவர்களை அட்டை படத்தில் போடுவது வழக்கம். அந்த வகையில் மிகச் சில திரைத்துறை நட்சத்திரங்களே 'டைம்ஸ்’ அட்டையில் இடம் பிடித்திருக்கின்றனர். முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கெனவே அந்த பெருமை கிடைத்தது. இப்போது நடிகர் அமீர்கானுக்கும் இந்த பெருமை கிடைத்துள்ளது. அமீர்கான் செய்துவரும் சமூக சேவைகளை பாராட்டியே அவரை அட்டையில் போட்டு கவுரவித்துள்ளது அந்த பத்திரிகை.

அமீர்னா கிரேட்டுதான்யா!

5. பதவி!

உலக வங்கியின் பொருளாதார ஆலோசகராகவும் மூத்த உதவித் துணைத் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த கவுசிக் பாசு நியமிக்கப் பட்டுள்ளார். இந்திய நிதித் துறையில் பொருளாதார ஆலோசகராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் இவர். 1992-ல் புதுடெல்லியில் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் பொருளாதார வளர்ச்சி அமைப்பை நிறுவியவரும் இவரே. இவரது சேவையினை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. தற்போது அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொருளாதார ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கவுசிக், அடுத்த மாதம் 1-ம் தேதி உலக வங்கி பொருளாதார ஆலோசகராக  பொறுப்பேற்பார். அவரது அனுபவம் எங்களுக்குப் பெரிதும் உதவும் என உலக வங்கியின் தலைவர் ஜின் யாங் கிம் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குப் பெருமை!

6. பெஸ்ட் ஐ.டி. கம்பெனிகள்!

வருவாய், லாபம், பங்கு மதிப்பு, எதிர்கால வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆசியாவின் 11 முன்னணி ஐ.டி. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழில் வெளியிட்டுள்ளது. இதில் சீனாவின் பைடு (baidu) தேடல் இணையதளம் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் கூகுள் இணையதளத்தைவிட பைடு அதிக பயனீட்டாளர்களை கொண்டுள்ளது. அடுத்த இடத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் உள்ளது. 1995-ல் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இதன் கடந்த காலாண்டு வருவாய் 19,350 கோடி ரூபாய். இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.சி.எல். நிறுவனம் ஐந்தாவது இடத்திலும், டி.சி.எஸ். நிறுவனம் பத்தாவது இடத்திலும் உள்ளது.

கூகுள் கவனிக்க..!

- செ.கார்த்திகேயன், ரா.அண்ணாமலை, சு.ராம்குமார்.
படம்: ஜெ.வேங்கடராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism