Published:Updated:

நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதம்!

மனைக் கடன்

பிரீமியம் ஸ்டோரி
நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதம்!

இன்றைக்கு  நடுத்தர மக்கள் பலரது கனவாக இருக்கிறது சொந்த வீடு. தனியாக ஒரு வீடு, வீட்டை சுற்றி மரங்கள், குழந்தைகள் விளையாட இடம், மொட்டை மாடி என அவர்களின் கனவு விரிகிறது. இவர்களின் இத்தனை கனவும் நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறைவேறுவதில்லை. காரணம், உச்சத்தில் இருக்கும் நிலத்தின் விலை. ஃப்ளாட்டில் நம் வசதிக்கு எதுவுமே செய்துகொள்ள முடியாது. அப்படியானால் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நிறைவேற வழியேயில்லையா?

நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதம்!

''ஏன் இல்லை. முதலில் வீட்டு மனையைக் கடனில் வாங்கிவிட்டு, அது முடிந்ததும் வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு கட்டி சகல சௌபாக்கியங்களுடன் குடியிருக்க முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டினார், முன்னணி வீட்டு வசதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி.யின் நிர்வாக மேலாண்மை உறுப்பினர் ஜோசப் மேத்யூ.

மனைக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி மேலும் அவர் விளக்கிச் சொன்னார்.

''மனைக் கடன் வாங்குவது எளிது. இந்த கடனை வாங்கி, அதன் மூலம் மனை வாங்கலாம். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் காலத்திலேயே, கடன் வாங்கியவரின் தகுதி அதிகரித்திருக்கும்பட்சத்தில்,  வீட்டுக் கடனையும்  வாங்கி வீட்டைக் கட்டிக்கொள்ளலாம்.

நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதம்!
##~##
கடனுக்கான வட்டி, நிலையான விகிதமா, மாறுபடும் விகிதமா என்பதைக் கடன் வாங்குபவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளலாம். நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுத்தால் கடைசி வரைக்கும் வட்டி விகிதம் மாறாது. மாறுபடும் வட்டி விகிதம், கடன் சந்தை வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாறுபடும். நிலையான வட்டி, மாறுபடும் வட்டி விகிதத்தைவிட, சில சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

எங்களிடம் கடன் வாங்கியவர்களில் சுமார் 25% பேர்   மனைக் கடன் வாங்கியவர்கள்.  மனையைப் பெரும்பாலும் முதலீடு நோக்கில்தான் பலரும் வாங்குகிறார்கள். மனை வாங்கவும், பிற்பாடு அந்த மனையில் வீடு கட்டவும் நாங்கள் கடன் தருகிறோம்.  சொந்த பணத்தைக் கொண்டு மனைக் கடனை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு அபராதம் எதுவும் இல்லை. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது, பாக்கித் தொகைக்கு 2% அபராதம் கட்டவேண்டி வரும்'' என்றார்.

நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதம்!

பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், வாங்கும் மனையில் குறிப்பிட்ட ஆண்டுக்குள் வீடு கட்ட வேண்டும் என்கிற நிபந்தனையின் அடிப்படையில்தான் மனைக் கடன் அளிக்கின்றன.  

கடன் தொகையில் சுமார் 0.5% பரிசீலனைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆவணங்கள் மற்றும் மனையை நேரில் ஆய்வு செய்து சரிபார்த்த பத்து  நாட்களில் கடன் கிடைத்துவிடும். கடன் தொகையை கையில் கொடுக்க மாட்டார்கள். பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வங்கியின் முகவர் ஒருவர் நேரில் வந்து கேட்பு காசோலையாகக் கொடுப்பார்.

மொத்தமாக பெரிய தொகையை புரட்டியோ அல்லது கடனாகவோ வாங்கி வீடு வாங்க முடியாதவர்களுக்கு இந்த மனைக் கடன் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

- இரா.ரூபாவதி,
படங்கள். ஆ. முத்துக் குமார்,
இ.ராஜவிபீஷிகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு