Published:Updated:

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

கேள்வி-பதில்

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?
##~##

விவசாய நிலம் வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோ.சுதாகர், பொள்ளாச்சி.

கிருஷ்ணன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

''விவசாயக் கல்வி தொடர்பான பட்டம் வாங்கியுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டுமே விவசாய நிலம் வாங்குவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயப் பட்டப் படிப்பு படித்து பணியில் இருப்பவர்கள் என்றாலும் வங்கிக் கடன் கிடைக்காது. விவசாயக் கல்வி தொடர்பான பட்டப் படிப்பு இல்லாத பிற நபர்களுக்கு விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்காது.''

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

முன்கூட்டியே வரி செலுத்தும் நிறுவனத்தின் பங்குகளை பயப்படாமல் வாங்கலாம் என்கிறார் நண்பர். அவர் சொல்வது சரியா?

- சேதுபதி, திருநெல்வேலி.

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை ஆலோசகர்.

''முன்கூட்டியே வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்துவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ/விற்கவோ கூடாது. சில வரிச் சலுகைகள் காரணமாக சில நிறுவனங்கள் செலுத்தும் வரி குறைவாக இருக்கலாம். சில நேரங்களில் தங்களது சொத்துகளை விற்பனை செய்துவந்த வருமானத்தாலும், பிறவகை வருமானங்கள் மூலம் திரட்டும் தொகை அதிகமாக இருந்தாலும் முன்கூட்டியே செலுத்தும் வரி அதிகமாக இருக்கலாம். வங்கிகளைப் பொறுத்தவரை, வாராக்கடன் வசூலிப்பதைக் கொண்டும் முன்கூட்டியே வரி செலுத்தவும் செய்யும். ஒரு நிறுவனம் முன்கூட்டியே வரி செலுத்துவதை மட்டுமே வைத்து அதன் உண்மையான நிதி நிலைமையை அறிய முடியாது. எனவே, இதை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, விற்க வேண்டாம். பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகளில் இதுவும் ஒரு அளவுகோல் என்கிற அடிப்படையில் கவனிக்கவும்.''

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நான், ஏற்கெனவே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். எனது மனைவியும் சமீபத்தில் வேலைக்குச் செல்வதால் அவருக்குத் தனியாக டேர்ம் பாலிசி எடுக்க வேண்டுமா?

- மா.செந்தில்ராஜா, வந்தவாசி.

சுபாஷிணி, நிதி ஆலோசகர்,  

''வருமானம் ஈட்டும் நபரின் வருமானம் தடைபடும்பட்சத்தில் அவரால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காகத்தான் காப்பீடு திட்டங்கள். உங்களது மனைவி தொடர்ச்சியாக வருமானம் ஈட்டுகிறார்; உங்கள் இருவரது வருமானத்தைக் கொண்டுதான் எதிர்காலத்தைத் திட்டமிடுவீர்கள் என்பதால், உங்கள் மனைவிக்கு என்று அவரது வருமானத்தின் அடிப்படையில் தனியாக ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியானது. மனைவி பணிக்குச் செல்லவில்லை என்றால், குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும்!''

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

குத்தகைக்கு விடப்பட்டிருந்த ஒரு நிலத்தை, அந்த நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வாங்கி பத்திரப்பதிவும் செய்துகொண்டோம். ஆனால், நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் இந்த விற்பனை செல்லாது என வழக்குத் தொடுத்தார். கீழ் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாகவும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் எங்களுக்கு பாதகமாகவும் தீர்ப்பு வந்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா?

- பாலமுருகன், தஞ்சாவூர்.

அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''தாராளமாகச் செய்ய முடியும். முதலாவது மேல்முறையீட்டின் மீதான உத்தரவை உங்களுக்குப் பாதகமாக உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது என்று கருதும்பட்சத்தில், இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபரான நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.''

பதினைந்து வருடங்களாக ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் கட்டி வருகிறேன். ஆனால், பாலிசிக்குரிய ஒரிஜினல் ஆவணங்கள் தொலைந்துவிட்டது. ஒரிஜினல் ஆவணங்களை திரும்பப் பெற வழியுண்டா?

- செந்தில்குமார், பொள்ளாச்சி.

ஏ.ஜி.பழனி, காப்பீடு ஆலோசகர், எல்.ஐ.சி.

''பாலிசி ஆவணம் தொலைந்துவிட்டால் நகல் ஆவணங்களைப் பெற முடியும். முதலில், ஆவணம் தொலைந்தது குறித்து உங்கள் பாலிசி உள்ள கிளை அலுவலகத்துக்கு கடிதம் எழுதவும். உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றபிறகு இரண்டு விதமான விண்ணப்பங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அடையாளச் சான்று, முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும். மற்றொரு விண்ணப்பத்தை 80 ரூபாய் முத்திரைத் தாளில் டைப் செய்து மேற்கண்ட ஆவணங்களோடு திரும்பவும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பினால் உங்களது பாலிசியின் நகல் ஆவணம் அனுப்பி வைக்கப்படும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் கவரேஜ் கொண்ட பாலிசி எனில், பாலிசி பத்திரம் தொலைந்து போன விண்ணப்பத்தை செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்தபிறகு இந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.''  

விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

நான் 2008-ல் பிரமிட் சாய்மீரா பங்குகளை வாங்கியிருந்தேன். தற்போது அந்த நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகமாவதில்லை. அந்த பங்குகளை விற்று பணமாக்குவதற்கு வழி என்ன?

- ஜி.வி.மோகன், சென்னை .

எம்.சேகர், இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''பிரமிட் சாய்மீரா நிறுவனம் பங்குச் சந்தை பட்டியல் விதிப்படி வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் வர்த்தகமாவதில்லை. அந்த நிறுவனத்தின் பங்குகள் உங்கள் கைவசம் இருந்தால் அந்த நிறுவன முகவரிக்கு தொடர்புகொண்டு முதலீடுகளை திரும்பப் பெறலாம். அல்லது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு உங்கள் முதலீடுகள் குறித்த விவரத்தின் அடிப்படையில் புகார் அளித்தால் உரிய தீர்வு கிடைக்கும்.''

படம்: ஆ.முத்துக்குமார்.