Published:Updated:

எடக்கு மடக்கு!

எடக்கு மடக்கு!

எடக்கு மடக்கு!

ரெண்டு வாரமா பேப்பரைப் பார்த்தாலே தலை சுத்துதுங்க. அரசாங்கம் போட்ட கமிட்டிகள் ஒண்ணொண்ணா தங்களோட அறிக்கைகளைக் கொடுத்திட்டு இருக்காங்க. அரசாங்கம் அந்த கமிட்டிகளோட அறிக்கைகளை வச்சுக்கிட்டு நடவடிக்கை எடுக்கப் போகுதுன்னு ஓரளவு புரியுதுங்க.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
னா, அறிக்கைகள் சொல்றதப் பார்த்தா பகீருங்குது. ஒரு   அறிக்கை, அரசாங்கம் பப்ளிக் செக்டார் கம்பெனிகள், துறைமுகங்கள், ரயில்வே போன்ற நிறுவனங்கள் தற்சமயம் உபயோகப்படுத்தாம வச்சுக்கிட்டிருக்கிற இடத்தை விக்கச் சொல்லுதுங்க. வல்லுநருங்க இருக்கிற கமிட்டி இப்படிச் சொல்லலாமுங்களா? நிலத்தோட விலை எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஏறிக்கிட்டேதாங்க போகுது. நான் சின்னப் புள்ளையா இருக்கறப்ப எங்க அப்பா ஒரு இடத்தை வாங்குனாரு. அந்த எடத்தை கிரயம் பண்ற அன்னைக்கு நான் மரத்துல இருந்து விழுந்து கையை ஒடச்சுக்கிட்டேன். அது சரியானப்புறம் எனக்கு டைபாய்ட் வந்துச்சு. அதுக்கப்புறம் எனக்கு மஞ்சக்காமாலை வந்துச்சு. அப்பா பயந்து போய் ஒரு ஜோசியக்காரனுகிட்ட போய் கேட்க... அவன், மவன் உசிரா, இடமான்னு பாத்துக்கன்னு சொல்ல, உடனே அந்த எடத்தை வித்துட்டாரு எங்க அப்பா.

இப்ப அந்த எடம் எங்க கையில இருந்தா, உங்க எல்லாரையும்விட நான்தான் பெரிய பணக்காரன். காரணம், அந்த இடம் இப்ப ஹார்ட் ஆஃப் த சிட்டி. என் வாழ்நாள் பூராவும் சம்பாதிச்சுச் சேர்த்தாலும் அந்த இடத்தைத் திரும்ப வாங்க முடியாது. 'எல்லாம் என் கிரகம். தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்’னு அப்பா இப்ப புலம்புறாரு. இன்னைக்கும் இந்த ஏகாம்பரம் வாடகை வீட்டிலேதான் இருக்கான். வாடகை ஏத்த ஏத்த நான் சிட்டியை விட்டு வெளியே போயிகிட்டே இருக்கேன். இன்னும் நாலு முறை வாடகை ஏத்தினா நான் அடுத்த ஊருக்கே போயிடுவேன்.

ஆனா, பாருங்க பேப்பரில அரசாங்கத்தை இடத்தை விக்கச் சொன்ன ஐடியாவைப் படிச்சதிலேருந்து என் அப்பாகூட தூங்காம புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்காருங்க. 'பணத்துக்காக இடத்தை யாராவது விப்பாங்களான்னு போறவுங்க வர்றவுங்ககிட்டெல்லாம் புலம்பிகிட்டே இருக்கிறாருங்க. நான் ஏதாவது சொன்னா, 'டேய், நான் பண்ணுன தப்புனால இன்னைக்கு வரைக்கும் சொந்த வீடு இல்லாம கிடக்கோம்’ அப்படீங்கிறாரு. 'வீட்டை நீ சிட்டியை விட்டு தள்ளித் தள்ளி மாத்திக்கிட்டே போற. அதனால யாருக்கும் பிரச்னையில்லை. ஆனா, துறைமுகத்தையும், ரயில்வே ஸ்டேஷனையும், ஃபேக்டரியையும் அப்படி நவுத்திகிட்டே போக முடியாதே. இன்னைக்குத் தேவைப்படாம இருக்கற எடம் நாளைக்குத் தேவைப்படுமே. ஏர்போர்ட் விரிவாக்கம் பல ஊரில இடம் இல்லாததாலதானே நின்னுபோய் கிடக்குது. ஏர்போர்ட்டாவது ஊரை விட்டு வெளியே கொண்டு போய் வச்சுக்கலாம். போறவனெல்லாம் காரு கீருன்னு எதையாவது வச்சு போய்க்குவானுங்க. ரயிலு அப்படியா? நம்மளை மாதிரி பாமரனுங்க போய் வர்ற விஷயமாச்சே. ஊருக்குள்ளதானே இருக்கணும்’னு மாஞ்சு மாஞ்சு பேசி பொலம்பித் தள்றாரு என் அப்ஸு. அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. படிச்சவருக்குத் தெரிஞ்ச விஷயம் பெரும் படிப்பு படிச்சவங்களுக்குத் தெரியலேன்னு நெனைச்சா வேதனையாத்தான் இருக்குங்க!

எடக்கு மடக்கு!

ரீட்டெயிலுல எஃப்.டி.ஐ., இன்ஷூரன்ஸில எஃப்.டி.ஐ. அப்படீன்னு பல்வேறு விதமா பணம் வருது நாட்டுக்குள்ளார! இது நல்லதா, கெட்டதான்னு யோசிக்கிறதுக்குள்ளேயே ட்ரெயின் டிக்கெட்டை ஏத்து, கேஸ் விலையை ஏத்துன்னு இன்னொரு கமிட்டி ரிப்போர்ட்டை கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்குது. அய்யா! பெரியவுங்களே, படிச்சு கோட்டு சூட்டு போட்டு பணம் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. நீங்கள்லாம் புத்திசாலிங்கன்னு ஒத்துக்குறோம். ஆனா, பொருளாதார நிலைமையில உங்களைவிட மிகவும் கீழ இருக்கற பெருவாரியான 100 கோடி மக்களோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

பட்டப்படிப்பு முடிச்சவன் எங்க பரம்பரையிலேயே இல்லேன்னு சொல்ற அளவுக்கு ஒரு கூட்டம் இன்னும் நம்மகிட்டே இருந்துகிட்டுதாங்க இருக்கு. திருநெல்வேலியில படிச்சுட்டு சென்னையில வேலைக்கு இன்டர்வியூவுக்கு வர்றவன் நிலைமையை நினைச்சுப் பாருங்க. ட்ரெயின் டிக்கெட்டை ஏத்தினா அவங்கெல்லாம் சிரமப்பட மாட்டாங்களா? மின்சாரத்தை ஏத்தி, அதை ஏத்து இதை ஏத்துன்னு ஏத்தினா நிரந்தர வேலையில இருக்கிறவங்களுக்குப் பஞ்சப்படியும் சேர்ந்து ஆட்டோமேட்டிக்காய் ஏறிடும். கடைசியா இதுல சிக்கப் போறவன் அன்னாடம் பிழைப்புக்குக் கஷ்டப்படுறவன்தான்.  

நீங்க சொல்றதுல ஒரு நியாயம் இருக்குதுங்க. சரியான சர்வீஸிற்கு சரியான விலை. இது கார்ப்பரேட் நியாயம். டில்லி டில்லிதான். பம்பாய் பம்பாய்தானுங்க. டில்லில எடுக்கற முடிவு பலதரப்பட்ட மக்களோட நிலைமையை மனசில வச்சு எடுக்கப்படறதா இருக்கணும். பம்பாயில எடுக்கப்படற முடிவு லாப நோக்கத்தை மட்டும் குறியா வச்சு எடுக்கப்படறதா இருக்கணும். பம்பாயில, டில்லியில எடுக்க வேண்டிய முடிவு எடுக்கப்பட்டா என்னவாகும்? நம்மள்ள பலபேர் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியிருக்கும்.

நாமளாவது பரவாயில்லீங்க. மாச சம்பளத்துல இருக்கறோம். அன்னாடம் பிழைப்பை நம்பி வாராவாரம் கூலி வாங்கிறவனை நினைச்சுப் பாருங்க! அவனுங்க பிரச்னை புரியும். அவன் குடும்பம் குட்டி எதுவும் முன்னேறாமயே போயிடும்.

அரசாங்கம் லாபநோக்கம் இல்லாததுங்க. இதுக்கு எதிர்மறையா அரசாங்கம் நினைச்சா நாடு வளராதுங்க. செலவுகளைக் குறைச்சாலே கடன் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாத் தீர்ந்துடுமுங்க. அமெரிக்க பொருளாதார மேதை ஒருத்தரு எல்லாத்தையும் ஃப்ரீ மார்க்கெட்டா விட்டுட்டீங்கன்னா, இரண்டு மூணு தலைமுறைக்கப்புறம் நாடு கடலுக்கு கீழே இருக்குமுன்னு சொல்லியிருக்காரு. இதை நல்லா நினைவில வச்சுக்குங்க. இப்படி இடத்தை விக்கலாம், எல்லா விலையையும் ஏத்தலாமுன்னு ஐடியா கொடுக்காதீங்க. பாவங்க நம்ம ஜனங்க..!