Published:Updated:

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

பிரீமியம் ஸ்டோரி
வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு என்ன நடைமுறை?

- ஜே.ராபர்ட் ப்ரீஸ், திருச்சி.

##~##
எஸ்.சந்தானகிருஷ்ணன்,
துணை மேலாளர், தி ஓரியன்டல் இன்ஷூரன்ஸ்.

''பொதுவாக, வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளுக்கு மட்டுமே காப்பீடு கொடுக்கிறார்கள். காப்பீட்டுக்கு அனுமதிக்கப்படும் விலங்குகளை கால்நடை மருத்துவர் பரிசோதித்து அவர் அளிக்கும் மருத்துவச் சான்று அடிப்படையில் காப்பீடு பாலிசி அளிக்கப்படும். கால்நடை மருத்துவர் விலங்கின் மதிப்பாக குறிப்பிடும் தொகைக்கு பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இந்த தொகையில் 4 முதல் 5%  வரை பாலிசி பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். கறவை மாடு, நாய் போன்ற சில பிராணிகளுக்கு எக்ஸ்டென்ஷன் பிரீமியம் கட்டினால், மாடுகளுக்கு கறவை நின்ற பிறகு இழப்பீடும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ செலவும் தரப்படும். பொதுவாக நோய் மற்றும் விபத்துகளிலிருந்து வளர்ப்பு பிராணிகள் இழப்பை சமாளிக்க இந்த பாலிசி உதவும்.''

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மாதச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய். இதில் மாதம் 3,000 முதலீடு செய்யலாம் என யோசிக்கிறேன். ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் முதலீட்டுத் திட்டங்கள் எதை தேர்ந்தெடுக்கலாம்?

- செந்தில்முருகன், சிதம்பரம்.

அழகப்பன், நிர்வாக இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ்.  

''குறைந்த சம்பளம் மற்றும் குறைந்த முதலீட்டு தொகை என்பதால் அதிக ரிஸ்க் கொண்ட முதலீட்டு திட்டங்களில் இறங்க வேண்டாம். ஐந்திலிருந்து பத்து வருட காலத்தில் நல்ல வருமானம் ஈட்டித் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பாக, பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவும். ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் 95, ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்க் பேலன்ஸ்டு போன்ற ஃபண்டுகளில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பிரித்து முதலீடு செய்யவும். நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 15 சதவிகிதம் வரை வருமானம் எதிர்பார்க்கலாம்.''

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

என் பெயரை சமீபத்தில் மாற்றியுள்ளேன். இதை கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன். புதிய பெயரை பான் கார்டில் மாற்றுவது எப்படி?

- பழனி, திண்டுக்கல்.

டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''பெயர் மாற்றப்பட்டதை பான் கார்டில் புதுப்பித்துக்கொள்ள பான் கரெக்ஷன் விண்ணப்பம் தந்தால் போதும். பெயர் மாற்றத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை ஏற்று, அவர்களால் அளிக்கப்பட்ட ஒப்புதல் கடிதம், முகவரிச் சான்று, அடையாளச் சான்று, சமீபத்திய புகைப்படம் இவைகளை இணைத்து பான் கரெக்ஷன் விண்ணப்பம் அளித்தால், 45 நாட்களுக்குள் மாற்றம் செய்யப்பட்ட பெயரில் பான் கார்டு கிடைத்துவிடும்.''

ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தேன். அதற்காக டேர்ம் பாலிசி எடுத்திருந்தேன். இடையிலேயே மொத்த கடனையும் கட்டி முடித்து விட்டேன். இந்நிலையில் அந்த பாலிசியை அப்படியே தொடரலாமா அல்லது விட்டுவிடலாமா?

- கார்த்திகேயன், சென்னை.

முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், நீங்கள் உங்களுக்கென்று தனியாக ஒரு டேர்ம் பாலிசி எடுத்திருக்க வேண்டும். இப்படி உங்களுக்கு என்று எடுத்துள்ள பாலிசி உங்களது ஆண்டு வருமானம் அல்லது சம்பளத்தைப் போல் சுமார் 10 முதல் 12 மடங்கு அளவுக்கு இருந்தால் கடனுக்காக எடுத்த இந்த பாலிசியைத் தொடர வேண்டாம். அல்லது உங்களுக்கு என்று எடுத்திருக்கும் பாலிசிக்கு பிறகு ஆண்டு வருமானம் உயர்ந்திருந்தால் இந்த பாலிசியையும் தொடரலாம். எனவே, உங்களது ஆண்டு வருமானத்துக்கு ஏற்ப இதை முடிவு செய்துகொள்ளுங்கள்.''    

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

ஜாமீன் இல்லாமல் வங்கியில் தொழிற்கடன் வாங்க முடியுமா?

- முருகன், தஞ்சாவூர்.

வித்யாதர், துணை பொது மேலாளர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.

''தாராளமாக வாங்க முடியும். பள்ளி, கல்லூரிகள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் சார்ந்த தொழில்கள் தவிர உற்பத்தி மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்களுக்கு சிறு மற்றும் குறு தொழில்கள் தொழிற்கடன் என்கிற வகையில் கடன் உத்தரவாத இன்ஷூரன்ஸ் திட்டத்தில் (CGTMSE) அதிகபட்சமாக ஒரு கோடி வரை ஜாமீன் இல்லாமல் கடன் வாங்க முடியும். இந்த வகை கடன்களுக்கு ஈடாக அடமான (collateral) சொத்துக்கள் தரவும் வேண்டாம்.

வளர்ப்பு பிராணிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

நான் சில வருடங்களுக்கு முன்பு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன். இதற்கென தொடங்கப்பட்ட டீமேட் கணக்கில் தற்போது எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை. இப்போது அந்த டீமேட் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? அந்த கணக்கை புதுப்பிக்க கட்டணங்கள் ஏதேனும் கட்ட வேண்டுமா?

ஏ.எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.

''சில காலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருந்து, மீண்டும் இறங்கினாலும் அதே டீமேட் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம். டீமேட் கணக்கை பராமரிப்பதற்கு என்று ஒவ்வொரு வருடமும் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் இந்த கட்டணத்தை செலுத்தத் தவறியிருந்தால் இந்த கட்டணத்தை கட்டி மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த கணக்கில் ஏதேனும் பங்குகள் வைக்கப்பட்டிருந்தால் இதற்கான ஹோல்டிங் கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். மற்றபடி டீமேட் கணக்கை புதுப்பிப்பதற்கு என தனியாக பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. ஆனால், கணக்கை புதுப்பிப்பதற்கு மீண்டும் அடையாளச் சான்று கொடுக்க வேண்டும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு