Published:Updated:

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

Published:Updated:
##~##

பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் கமாடிட்டி டிரேடிங்கில் இறங்க முடியுமா?

- சுதாகர், திருப்பூர்.  ரமணன், கமாடிட்டி நிபுணர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தாராளமாக கமாடிட்டி டிரேடிங்கில் இறங்க முடியும். இதற்கேற்ப சில்வர் மைக்ரோ, கோல்டு கினியா, ஜிங்க் மினி, பெட்டல் மினி போன்றவற்றை வாங்கலாம். என்றாலும், நமது டிரேடிங்கின் மார்ஜின் தொகையைப் போல ஐந்து அல்லது ஆறு மடங்கு தொகையைக் கையிருப்பாக வைத்துக்கொண்டு ஈடுபடுவது நல்லது. குறைந்த தொகையில் டிரேடிங்கில் இறங்கும்போது எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டால் தொடர்ந்து டிரேடிங் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். எனவே, பத்தாயிரம் ரூபாயில் கமாடிட்டி டிரேடிங்கில் இறங்கலாம் என்றாலும், இந்த பணத்தை மட்டுமே முழுவதுமாக நம்பி டிரேடிங்கில் இறங்க வேண்டாம்!''  

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

ஒருவர் அதிகபட்சமாக எத்தனை எஸ்.ஐ.பி.களில் முதலீடு செய்யலாம்? 

- கதிரேசன், தூத்துக்குடி.  ஹரிகரன், நிதி ஆலோசகர்.

''மொத்தமாக முதலீடு செய்வதைவிட குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக முதலீடு செய்வதுதான் எஸ்.ஐ.பி. (சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) முறை. உங்களது பொருளாதார வசதியைப் பொறுத்து நீங்கள் எத்தனை ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். ஆனால், உங்கள் நோக்கம் சரியாக நிறைவேற வேண்டுமெனில் அதிகபட்சமாக ஐந்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்தாலே போதும். அதிக அளவிலான ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அவற்றை பராமரிக்க முடியாமல் சிரமப்படவே செய்வோம்!''

எனது மனைவி தனது தகப்பனார் இறந்தபிறகு தனது பாட்டன் வழி சொத்தில் பங்கு கேட்டு தனது மூன்று சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது அதில் இரண்டு சகோதரர்கள் மட்டும் என் மனைவியை தாஜா செய்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் விடுதலைப் பத்திரம் செய்துகொண்டதுடன், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாகவும் பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளனர். மூன்று பேர் மீது வழக்கு இருக்கும் நிலையில் இப்படி செய்தது செல்லுமா? இதை ரத்து செய்ய முடியுமா? என் மனைவி சார்பாக நான் வழக்காட முடியுமா?  

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

- ஆர். நடராஜன், சென்னை.  என்.சி.ரகுராமன், வழக்கறிஞர். சென்னை உயர்நீதிமன்றம்.

''வழக்கு நிலுவையில் இருக்கும்போது, வழக்கில் கோரிய சொத்தை விடுதலைப் பத்திரம் எழுதி அதை பதிவு செய்திருந்தால் மேற்கொண்டு உங்கள் மனைவி அந்த சொத்தில் உரிமை கோர முடியாது. குறிப்பாக, மூன்று சகோதரர்களில் யாராவது ஒருவருக்கு தனது சொத்தின் உரிமையை விட்டுத் தருவதாக குறிப்பிட்டிருந்தாலும் அந்த விடுதலைப் பத்திரம் செல்லும். அதன் அடிப்படையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்தில் உரிமையை விட்டுக் கொடுத்ததனால் வழக்கைத் தொடர்ந்து உங்கள் மனைவி நடத்த முடியாது. விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்குத் தொடுக்க விரும்பினால் உங்கள் மனைவியிடமிருந்து ஒரு பொது அதிகாரப்பத்திரம் வாங்கியபின் ஈடுபடலாம். விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள ஷரத்துகளைப் பார்த்து தகுந்த வழக்கறிஞர் ஆலோசனைபடி வழக்குத் தொடுக்கவும்.''

நீண்ட கால முதலீடுகள்தான் வருமானம் தரும் என்பது ஏன்?

- கார்த்திகேயன், செங்கிப்பட்டி.  பழனியப்பன் மெய்யப்பன். இயக்குநர், விராமத் ஃபைனான்ஷியல் சர்வீஸ்.

''நீண்ட கால முதலீடுகள் மட்டுமல்ல, குறுகிய கால முதலீடுகளும் வருமானம் ஈட்டித் தரும். ஆனால், ரிஸ்க் அதிகமாக இருக்கும். சமகால அரசியல், பொருளாதார நிகழ்வுகள் பங்குச் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கங்களால் நமது முதலீடு ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கலாம். குறுகிய கால முதலீட்டில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நீண்ட கால முதலீடு என்கிறபட்சத்தில் இந்த தாக்கம் குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. நமது முதலீட்டின் வளர்ச்சி என்பது சந்தையின் வளர்ச்சியை ஒட்டியே கணிக்கப்படுவதால், சந்தையை குறுகிய காலத்துக்குக் கணிப்பது என்பது அதிக ரிஸ்க் எடுப்பதாக இருக்கும். எனவேதான், முதலீட்டின் வளர்ச்சியைக் கணிக்க குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.''

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

எனது தந்தை காலமாகிவிட்டார். வீட்டில் ஆவணங்கள் அனைத்தும் அவருடைய பெயரிலேயே உள்ளது. அதை அப்படியே தொடரலாமா? அல்லது அம்மா பெயருக்கு மாற்றிக்கொள்ளலாமா?  

- எஸ்.வெங்கடேசன், சென்னை.  ஆர்.முருகபாரதி, வழக்கறிஞர். சென்னை உயர்நீதிமன்றம்.

''உயிரோடு இருப்பவர் பெயரில் ஆவணங்கள் இருப்பதே சட்டரீதியாக சரியானது. எனவே, அவரது பெயரில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அவரது வாரிசுகள் பெயருக்கு மாற்றிக்கொள்வது நல்லது. பொதுவாக, சொத்து ஆவணங்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, உள்ளாட்சி அமைப்புகளின் வரிகள், குடும்ப அட்டை போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்துகொள்வது குழப்பங்களை தவிர்க்க உதவும். ஆவணங்களை அப்படியே தொடரும்பட்சத்தில் சட்டரீதியான குழப்பங்கள், சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.''

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட இடத்தில் தொழில் தொடங்க முடியுமா?

- சுந்தரராஜன், திருத்தணி, பத்மநாபன், கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

''தாராளமாக முடியும். நீங்கள் வாங்கியுள்ள கடனை தொடர்ந்து திருப்பிச் செலுத்தி வரும்பட்சத்தில் அதற்கு எந்த சிக்கலும் இல்லை. நீங்கள் அந்த இடத்தை அடமானம் வைத்துள்ள வங்கியின் அனுமதி பெற்று அந்த இடத்தில் தொழில் தொடங்கிக்கொள்ள முடியும். அடமானம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு, அடமான தொகை இவற்றின் அடிப்படையில் வங்கி அனுமதி வழங்கும். அடமான கடனை திருப்பி செலுத்தாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் தொழிலை முடக்குவதற்கும் வங்கிக்கு உரிமையுள்ளது.''

நீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism