Published:Updated:

மெட்டல் & ஆயில்

பானுமதி அருணாசலம்

மெட்டல் & ஆயில்

பானுமதி அருணாசலம்

Published:Updated:

இந்த வாரம் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து குறிப்பிடுகிறார் ஏஞ்சல் கமாடிட்டி புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

##~##

'சீனாவில் வெளியான தயாரிப்பு இண்டெக்ஸ் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தில் முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தது. தங்கத்திற்கும் வெள்ளிக்குமான விகிதம் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. பிரேசில் கடந்த பதினோரு வருடங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தை அதிகமாக வாங்கி யுள்ளது. கடந்த மாதத்தில் 17.2 டன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் 52.5 டன் தங்கத்தைக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், கஜகஸ்தான், துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் தங்களது தங்க கையிருப்பை அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலக நாடுகள் தங்களது தங்க கையிருப்பை அதிகரித்துள்ளதும் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்குக் காரணம். அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுகிறவர்கள் 41,000 பேர் குறைந்து 4,10,000-மாக சென்ற வாரத்தில் இருந்ததாக அமெரிக்க லேபர் துறை தெரிவித் துள்ளது. ஃபெடரல் வங்கியின் தலைவர் 2013-ம் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும் என கூறியுள்ளார். தங்கத்தின் விலை வரும்

மெட்டல் & ஆயில்

வாரத்திலும் அதிகரிக்கவே செய்யும்''.

அடிப்படை உலோகங்கள்!

சீனாவில் ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனம் வெளியிடும் தயாரிப்பு பி.எம்.ஐ. நவம்பர் மாதத்தில் 50.4 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 49.5 புள்ளிகளாக இருந்தது. இது செப்டம்பர் 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பெரிய உயர்வு. சீனாதான் உலகளவில் காப்பரை அதிகம் பயன்படுத்தும் நாடு. சென்ற ஆண்டில் மட்டும் மொத்த உலக பயன்பாட்டில் நாற்பது சதவிகிதம் கொண்டுள்ளது.

2012-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 2,67,000 டன் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவே 2011-ம் ஆண்டில் 2,48,000 டன் அதிகமாக இருந்தது. மேலும், ஜெர்மனியின் தயாரிப்பு இண்டெக்ஸ் நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது. ஐரோப்பா, பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் தயாரிப்பு பி.எம்.ஐ. அதிகரித்துள்ளது. இதேபோல் 2012 ஜனவரி முதல் செப்டம்பர் மாதத்தில் 2,93,000 டன் ஜிங்க் அதிகமான கையிருப்பைக் கொண்டுள்ளது. இதுவே 2011-ம் ஆண்டில் 5,56,000 டன் கையிருப்பைக் கொண்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் கையிருப்பு குறைந் துள்ளது. சென்ற வருடத்தை ஒப்பிடும்போது கையிருப்பு குறைந்தாலும், சப்ளை அதிகமாக இருப்பதால் ஜிங்க் விலை குறைய வாய்ப்பு அதிகம்.

நிக்கலை பொறுத்தவரை, 2012-ல் 89,000 டன் அதிக கையிருப்பு இருந்தது. இதுவே 2011-ல் 3100 டன் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த வருடம் சப்ளை அதிகமாக இருப்பதால் நிக்கலின் விலை வரும் வாரத்தில் குறையும்.

மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

ச்சா எண்ணெய் விலை நடுநிலைமையாக வர்த்தக மாகி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் இடையில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக சமரசம்,  டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், சீனாவின் தயாரிப்பு விகிதம் உயர்வு கச்சா எண்ணெய்க்கு சாதகமாக உள்ளது. ஈரானிலிருந்து தென் கொரியா நாடு அக்டோபர் மாதத்தில் 5.78 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இன்ஷூரன்ஸ் தராமல் ஐரோப்பா பகுதிகளில் தடை செய்திருந்தனர். இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் தென் கொரியாவிற்கு சப்ளை செய்யப் படாமல் இருந்தது. எனினும், வரும் வாரத்தில் இஸ்ரேலில் ஏதும் பிரச்னை நடந்தாலோ அல்லது கச்சா எண்ணெய் இன்வென்ட்டரி குறைந்தாலோ விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு!

வம்பர் 2011-ம் ஆண்டுக்கு பிறகு இயற்கை எரிவாயு விலை இந்த ஆண்டு அதிகரித்தது. மேலும், அமெரிக்காவில் குளிர் அதிகரித்து வருவதால் இயற்கை எரிவாயுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி குறைந்தாலோ அல்லது குளிர் மேலும் அதிகரித்தாலோ விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மெட்டல் & ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism