Published:Updated:

காக்டெய்ல்!

செ.கார்த்திகேயன்.

காக்டெய்ல்!

செ.கார்த்திகேயன்.

Published:Updated:

சென்ட்ரல் பேங்கின் நவீன வளாக திறப்பு!

காக்டெய்ல்!

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை பல்லாவரம் கிளையின் நவீன மற்றும் புதிய வளாக திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகன் வ தங்க்சலே புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாட்டில் மொத்தம் 196 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இதன் மொத்த வணிகம் 18,000 கோடி ரூபாய். நூறு சதவிகித கோர் பேங்கிங் மற்றும் அதிவேக நெட் பேங்கிங் போன்ற வசதிகள் இவ்வங்கியின் சிறப்பு அம்சம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலக்குங்க பாஸ்!

தொழிலதிபர்கள் பட்டியலில் புதுமுகங்கள்!

காக்டெய்ல்!

ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை ஆண்டுதோறும் டாப் தொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த வருடம் 11 புதிய தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். எடுத்த எடுப்பில் ஒன்பதாவது இடத்தை ஹிந்துஜா பிரதர்ஸ் பெற்றுள்ளனர். 61-வது இடத்தை கிளென்மார்க் பார்மா நிறுவனர் கிளென் சல்டான்ஹா பெற்றுள்ளார். 63-வது இடத்தில் மணிபால் எஜுகேஷன் அண்ட் மெடிக்கல் குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பாய் மற்றும் லட்சுமண் தாஸ் மிட்டல் 75-வது இடத்தில் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார். ஜாய் ஆலுக்காஸ் 81-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.ராமசாமி 88-வது இடத்தில் இருக்கிறார்.

வாழ்த்துக்கள் டியர் பிஸினஸ்மேன்ஸ்!

ஏலம் போன சார்லியின் தொப்பி!

காக்டெய்ல்!

நகைச்சுவை நடிப்பால் உலக மக்கள் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளின் என்றாலே அவரின் முகம் பலருக்கு நினைவிற்கு வருகிறதோ, இல்லையோ அவர் அணிந்திருக்கும் தொப்பியும், அடிக்கடி சுழற்றும் பிரம்பும்தான் நினைவுக்கு வரும். இவை, அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள ஏல மையம் ஒன்றில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. ஏல மையம் இந்த பொருட்களுக்கு நிர்ணயம் செய்திருந்த விலை 40,000 முதல் 60,000 டாலர்கள் வரை. ஆனால், நிர்ணயமான விலையைத் தாண்டி கிட்டத்தட்ட 62,500 டாலர்கள் வரை ஏலம் போனது.

சார்லி 'கேப்’ன்னா சும்மாவா?!

சாதிக்கும் சாந்தா கோச்சர்!

காக்டெய்ல்!

உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. சாந்தா கோச்சருக்கு இன்னொரு பெருமையும் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ஃபார்ச்சூன் இதழ்படி, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண்களில் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் 4.24 கோடி ரூபாய். அதே ஃபார்ச்சூன் இதழ் 2012-ம் ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் மனிதர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில், சாந்தா கோச்சர் 18-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். பங்கு வர்த்தகத்தின் ஜாம்பவான் வாரன் பஃபெட் 19-வது இடத்தில் இருக்கும்போது சாந்தா கோச்சர் 18-வது இடத்தைப் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஜெஃப் பெஜோஸ். இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. டிம் கூக் இருக்கிறார்.

ஹேட்ஸ் ஆஃப் சாந்தா!

உயரும் ஜேம்ஸ் பாண்டின் சம்பளம்!

சமீபத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வெளியான ஜேம்ஸ் பாண்ட் படம் ஸ்கைஃபால். இந்த படம் ஹாலிவுட்டில் சக்கைப் போடுபோட்டு வருகிறது. கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சொலேஸ், ஸ்கைஃபால் என்று மூன்று படங்களில் இவர் ஜேம்ஸ் பாண்ட்-ஆக நடித்திருக்கிறார். கேஸினோ ராயல் படத்தில் 1.9 மில்லியன் பவுண்ட் சம்பளமாக வாங்கினார். குவாண்டம் ஆஃப் சொலேஸில் 4.4 மில்லியன் பவுண்ட் சம்பளம் வாங்கினார். இப்போது வெளியான ஸ்கைஃபால் படத்தில் 10.7 மில்லியன் பவுண்டும் சம்பளமாக வாங்கியுள்ளார். இது தவிர, மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருக்கும் அவருக்கு 31 மில்லியன் பவுண்ட் சம்பளம் தரத் தயாராக இருக்கிறார்களாம் ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள்.

இதல்லவா சம்பளம்?!

1,000 கிளை கண்ட ஐ.டி.பி.ஐ.!

காக்டெய்ல்!

சென்ற வாரம் ஐ.டி.பி.ஐ. வங்கி தனது 1,000-வது கிளையை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடியில் துவக்கியது. இதை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். வங்கித் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: ''கடந்த 42 ஆண்டுகளில் வங்கிச் சேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதே ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஐநூறாவது கிளையை காரைக்குடியில் 2008-ல் தொடங்கி வைத்தேன். 4 ஆண்டுகளில் இந்த வங்கியின் ஆயிரமாவது கிளையைத் திறந்தது பெருமைக்குரிய விஷயம்'' என்றார்.

வெல்டன், வெல்டன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism