Published:Updated:

இந்தியாவின் வழியில் அமெரிக்கா..!

ஃபிஸ்கல் கிளிஃப்...வா.கார்த்திகேயன்

இந்தியாவின் வழியில் அமெரிக்கா..!

ஃபிஸ்கல் கிளிஃப்...வா.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ண்மைக் காலமாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிகம் அடிக்கடி இடம்பெறும் வார்த்தை 'ஃபிஸ்கல் கிளிஃப்’. அது என்ன 'ஃபிஸ்கல் கிளிஃப்’..?  

 இந்தியாவில் வரிச் சலுகை தரப்படுகிறது என்றால், அதற்கான காலக்கெடு ஏதும் இல்லாமல் அறிவிப்பது நமது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் வரிச் சலுகை தரும்போதே அந்த சலுகை எப்போது முடிவுக்கு வரும் என்பதைச் சொல்லிவிடுவார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த 2001 மற்றும் 2003 ஆண்டுகளில் கொடுத்த வரிச் சலுகைகள் 2010-ம் ஆண்டு முடிவடைவதாக இருந்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு இந்த வருட இறுதியில் முடிவடையப் போகிறது. வரிச் சலுகையை நிறுத்துவதோடு, அரசாங்கத்தின் செலவுகளையும் குறைக்க முடிவு செய்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம். இதன் மூலம் நாட்டின் நிதிநிலைமையை மாற்றுவதே

இந்தியாவின் வழியில் அமெரிக்கா..!

ஃபிஸ்கல் கிளிஃப். இப்படி செய்வதால் அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை 7.3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைய வாய்ப்புண்டு. இந்த ஃபிஸ்கல் கிளிஃப் தேவையா, இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சென்னையின் முக்கிய ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் பேசினோம். பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அவர்.

''பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வரிச் சலுகைகள் மற்றும் அரசாங்கச் செலவுகளை அதிகரித்துக்கொண்ட அமெரிக்கா இப்போது திண்டாடுகிறது. 1949-50களில் அமெரிக்க ஜி.டி.பி.யில் அந்த அரசாங்கத்தின் பங்கு சுமார் 11 - 12 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், இப்போது 42 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, அமெரிக்க அரசு செய்யும் செலவு மற்றும் திட்டங்களில்தான் அந்த நாட்டின் ஜி.டி.பி. இருக்கிறது. (ஆனால், இந்தியாவின் ஜி.டி.பி.யில் அரசாங்கத்தின் பங்கு சுமார் 15 சதவிகிதம்தான். ஆனாலும், நாம் தனியார்மயமாக்குவதைப் பற்றி தீவிரமாகப் பேசி வருகிறோம் என்பது வேறு விஷயம்!)

சரி, இவ்வளவு நாள் செலவு செய்துவிட்டு ஏன் இப்போது அமெரிக்கா செலவுகளையும்  வரிச் சலுகைகளையும் குறைக்க நினைக்கிறது? காரணம், இது தவிர அமெரிக்காவுக்கு வேறு வழி இல்லை. நம்மிடம் இருக்கும் காசுக்கு செலவு செய்யலாம். இல்லை எனில் கடன் வாங்கி செலவு செய்யலாம். கடன் வாங்கி செலவு செய்வது என்ற நிலைமையும் தாண்டினால், செலவுகளைக் குறைப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைக்கு அமெரிக்காவின் நிலையும் அதுதான். இப்போதைக்கு அமெரிக்க ஜி.டி.பி.யின் அளவு 15.09 டிரில்லியன் டாலர். ஆனால், அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 16 டிரில்லியன் டாலருக்கு மேல்.

இதற்கு பல காரணங்கள். முதலாவது, குடும்பம் என்ற அமைப்பே அங்கு இல்லை. எல்லாம் தனிமனித கலாச்சாரம்தான். தனித்தனி வீடுகள், கார்கள் என ஏகப்பட்ட செலவு செய்தார்கள்; (அமெரிக்காவில் ஒரு காபிகூட அரை லிட்டரில்தான் கிடைக்கும்!) இப்போது செய்வதறியாமல் தவிக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், டாலர்... டாலருக்கு இருக்கும் சிறப்பே, அது எந்த நாட்டில் தந்தாலும் செல்லுபடியாகிற மாதிரி எளிதில் மாறக்கூடிய கரன்சி. இதனால் நிறைய கரன்சி அடித்தார்கள்.  இதை செலவு செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தார்கள். இறக்குமதி செய்த பொருளுக்கு டாலர்களைத் தந்தார்கள்.

சீனாவில் மட்டும் 3 டிரில்லியன் டாலர் இருக்கிறது. இந்த மூன்று டிரில்லியன் டாலர் சீனாவின் அக்கவுன்டில் இருந்தாலும், அது மீண்டும் அமெரிக்காவுக்கே கடனாகத் தரப்பட்டிருக்கிறது. சீனா ஓர் உதாரணம்தான்; இதுபோல பல கடன்கள் இருக்கிறது. அதாவது, கரன்சியை அச்சடித்து, அதை தந்து பொருட்களை இறக்குமதி செய்து, வேறு நாட்டுக்கு கரன்சியை தந்து, பிறகு மீண்டும் அந்த நாட்டிடம் இருந்தே கடன் வாங்கி செலவு செய்து வருகிறது அமெரிக்கா.  

இந்தியாவின் வழியில் அமெரிக்கா..!

வரிகளை அதிகரிக்கும் பட்சத்தில் தனிநபர் களின் வருமானம் குறையும்; செலவுகளை குறைக்கும்பட்சத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மொத்தமாகச் சொல்வதானால், அமெரிக்காவின் வளர்ச்சி குறையும்.

மகாபாரதத்தில் சாருவாகா என்பவர் 'செலவு பண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள். செலவு செய்ய பணம் இல்லை என்றால் கடன் வாங்கி செலவு செய்யுங்கள். திருப்பித் தருவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்’ என்பார்.

ஆனாலும், நம் நாட்டில் யாரும் அளவுக்கு மீறி கடன் வாங்குவதில்லை. திவால் நோட்டீஸ் இங்கும் தரலாம். அதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. என்றாலும், அவ்வளவு எளிதாக யாரும் தருவதில்லை. காரணம், நமது சமூக அமைப்பு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியா கைவிட்ட இந்த கொள்கையை இப்போதுதான் அமெரிக்கா உணர ஆரம்பிக்கிறது'' என்று முடித்துக் கொண்டார்.

சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்து கொள்ளும் நம்மை, நாமே பாராட்டிக் கொள்வோம்!  

 - வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism