Published:Updated:

நாணயம் மேடை..!

ஏற்றுமதியில் ஜெயிக்கும் வழி!

நாணயம் மேடை..!

ஏற்றுமதியில் ஜெயிக்கும் வழி!

Published:Updated:
##~##

ஏற்றுமதி ஆர்டர் பிடித்துத் தரும் ஏஜென்டுகள் இருக்கிறார்களா? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? அவர்களுக்கு லாபத்தில் எவ்வளவு சதவிகிதம் கமிஷனாகத் தர வேண்டும்?

 - கமலா முருகேசன், திருப்பத்தூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீண்ட காலமாக சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஏராளமான ஏஜென்டுகள் உலக அளவில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு இந்தியாவிலும் அலுவலகம் இருக்கிறது. பொருள் ரீதியாக ஏற்றுமதிக்கு உதவும் ஏஜென்டுகளை இணையதளம் மூலம் தேடிக்கொள்ளலாம். பொதுவாக ஏஜென்டுகள் 5% முதல் 12% வரை கமிஷன் கேட்பார்கள். இது பொருளுக்குப் பொருள் மாறுபடும். அதிகம் போட்டியுள்ள ஆடைகள் போன்றவற்றுக்கு 5% கமிஷன்தான் கேட்பார்கள். இந்த கமிஷன் என்பது லாபத்தில் தரப்படுவதில்லை. ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மொத்த மதிப்புக்கு (பொருளின் விலை, சரக்குப் போக்குவரத்து கட்டணம் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்ந்து) கமிஷன் கணக்கிடுவதுதான் நடைமுறை.'

நாணயம் மேடை..!

மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட் மூலம் அதிகம் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் என் குடும்ப நண்பர். மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட் என்றால் என்ன என்பதை விளக்கிச் சொல்ல முடியுமா?

- விக்டர், ஆறுமுகநேரி.

''மற்றவர்களிடமிருந்து பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்வதுதான் மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட். இதில், முதலீடு என்பது குறைவாக இருக்கும். அதாவது, சொந்தமாக தொழிற்சாலை அமைக்க வேண்டி இருக்காது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட நினைப்பவர்கள் சிறிது காலத்துக்கு மெர்ச்சன்ட் எக்ஸ்போர்ட்டராகச் செயல்பட்டுவிட்டு, பிறகு சொந்தமாகப் பொருட்களை தயாரித்து அனுப்புவதன் மூலம் ரிஸ்கை குறைக்க முடியும்.'

ஏற்றுமதி வணிகத்தில் ஜெயிக்க கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று சொன்னால் ஏற்றுமதிக்குப் புதியவனான என் போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

- சுரேஷ் கோபி, சென்னை - 17.

''ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் அதிலுள்ள நெளிவுசுழிவுகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியும். எங்களின் பியோ அமைப்புகூட வருகிற டிசம்பர் 6 முதல் 8 வரையிலான தேதி களில் ஏற்றுமதி பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதில் ஏற்றுமதியில் புதிதாக நுழைபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்ல இருக்கிறோம். கூட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் எங்களின் உதவி இயக்குநர் என்.விஸ்வநாதனை 90032 73337 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம். தரமான பொருள், சரியான நேரத்தில் டெலிவரி, வாடிக்கையாளரின் திருப்தி, பொருட்களின் நியாயமான விலை போன்றவற்றைக் கடைப்பிடித்தால் ஏற்றுமதி வணிகத்தில் சுலபமாக வெற்றி பெற முடியும்.'

வெளிநாட்டிலிருக்கும் இறக்குமதியாளரிடமிருந்து பணம் கிடைக்க என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

- விமலா குமார், காரைக்கால்.

''சிறந்த வழி, முன்னரே பணம் வாங்கிக்கொள்வது. அதற்கு இறக்குமதியாளர் தயாராக இல்லை என்றால் லெட்டர் ஆஃப் கிரெடிட் என்கிற முறையில் ஏற்றுமதி பணத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இறக்குமதியாளரின் வங்கி ஏற்றுமதி தொகைக்கு உத்தரவாதம் அளிப்பதுதான் லெட்டர் ஆஃப் கிரெடிட். இதையும் தாண்டி ஏதாவது பிரச்னைகள் (சரக்கு சேதம் அடைதல், திருடு போதல்) ஏற்பட்டால் மத்திய அரசு சார்ந்த பாரத ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தில் (ECGC) இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.'

தொகுப்பு: சி.சரவணன்.

நாணயம் மேடை..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism