Published:Updated:

நாமினியை எளிதாக மாற்றலாம் !

தொகுப்பு: இரா.ரூபாவதி.

பிரீமியம் ஸ்டோரி

இன்ஷூரன்ஸ் பற்றி வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் மை அசெட்ஸ் டாட்காம் நிறுவனர் வி.சங்கர்.

நாமினியை எளிதாக மாற்றலாம் !
##~##

நான் சில பாலிசிகளைத் திருமணத்திற்கு முன்பே எடுத்து வைத்திருந்தேன். அதில் என் தம்பியை நாமினியாக நியமித்திருந்தேன். இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது. நாமினியாக இருக்கும் தம்பிக்குப் பதிலாக என் கணவர் பெயரை சேர்க்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதிகபட்சம் எத்தனை நாமினியை நியமிக்கலாம்.?

கே.வள்ளி, விழுப்புரம்.

நாமினியை எளிதாக மாற்றலாம் !

''உங்கள் தம்பிக்குப் பதிலாக, கணவரை நாமினியாகச் சேர்ப்பது மிகவும் சுலபமான காரியம்தான். உங்களின் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லது உங்களின் ஏஜென்டிடம் சொன்னாலே போதும். அவர்கள் நாமினியை மாற்றுவதற்கான விண்ணப்பத்தைத் தருவார்கள். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதர வேண்டும். ஆன்லைனிலும் நாமினியை மாற்றும் வசதி இருக்கிறது. ஒருவர் அதிகபட்சமாக எத்தனை நாமினியை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால், அவர்களில் யாருக்கு எவ்வளவு சதவிகிதம் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல வேண்டும். மேலும், ரத்த சம்பந்தம் இல்லாத உறவுகளை நாமினியாக நியமிக்கும்போது மட்டும், 'நாமினியாக இருக்க நான் சம்மதிக்கிறேன்’ என நாமினியாக இருப்பவர் எழுத்து மூலமாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உறுதிமொழி தரவேண்டும்.'' 

நான் மெடிக்ளைம் பாலிசியை ஒவ்வொரு ஆண்டும் சரியாக புதுப்பித்துவிடுவேன். எனக்கு கிடைக்கும் நோ  கிளைம் போனஸ் தொகை ஒவ்வொரு முறையும் வித்தியாசப்படு கிறது. இந்த தொகை எதன் மதிப்பில் தரப்படுகிறது? முதலில் செலுத்தும் பிரீமியத்தின் கவரேஜ் தொகையின் அடிப்படையிலா அல்லது உயர்ந்திருக்கும் கவரேஜ் தொகையின் அடிப்படையிலா என்பதைத் தெளிவுப்படுத்துங்கள்?

சாமிநாதன், திருவாரூர்.

நாமினியை எளிதாக மாற்றலாம் !

''நோ கிளைம் போனஸ் என்பது ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் வித்தியாசப்படும். ஏனெனில், நீங்கள் 1,00,000 ரூபாய்க்கு பாலிசி எடுத்தீர்கள் எனில், நோ கிளைம் போனஸ் என்பது ஐந்து சதவிகிதமாக இருக்கும். இதனுடன் சேர்த்து 1,05,000 ரூபாயாக உங்களின் கவரேஜ் தொகை இருக்கும். அடுத்த ஆண்டு இந்த 1,05,000 ரூபாய்க்கு ஐந்து சதவிகிதம் என்று நோ கிளைம் போனஸ் கிடைக்கும். அதோடு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நோ கிளைம் போனஸ் வாங்கியபிறகு நான்காவது ஆண்டு கிளைம் வாங்கினீர்கள் என்றால் ஐந்தாவது ஆண்டு நோ கிளைம் போனஸ் கிடைக்காது. ஆறாவது வருடம் அப்போது உள்ள தொகைக்கு 5 சதவிகிதம் நோ கிளைம் போனஸ் கிடைக்கும். அதனுடன் பிரீமியத் தொகை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.''

சென்னையில் வசிக்கும் எனக்கு திருநெல்வேலியில் சொந்த வீடு இருக்கிறது.  அந்த வீட்டிற்கு ஹவுஸ் ஹோல்டர் பாலிசி எடுக்க முடியுமா?

இளையகுமார், நந்தனம், சென்னை.

நாமினியை எளிதாக மாற்றலாம் !

''வீட்டிற்கு மட்டும் தனியாக பாலிசி எடுக்க முடியும். இயற்கைச் சீற்றங்கள், தீவிரவாதச் செயல்கள், தீ போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு இதில் கிளைம் பெறலாம். இந்த வகை பாலிசியில் வீட்டில் உள்ள பொருட்களை தவிர்த்து, வீடு கட்ட ஆகும் செலவுக்கு மட்டும்தான் கவரேஜ் கிடைக்கும். மனையின் மதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கான பிரீமியம் கவரேஜ் தொகையில் 1 - 1.75% வரை இருக்கும்.''

என் எண்டோவ்மென்ட் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், என் ஏஜென்ட் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் ஒரு வருடம் கிளைம் பெற முடியாது என்கிறார். இது உண்மையா?

கணேஷ், சென்னிமலை.

நாமினியை எளிதாக மாற்றலாம் !

''இது முற்றிலும் தவறு. அப்படி எந்தவிதமான நிபந்தனையும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிடையாது. டேர்ம் இன்ஷூரன்ஸில் இறப்பு ஏற்பட்டால் மட்டும்தான் கிளைம் பெற முடியும். பாலிசி எடுத்த ஓராண்டுக்குள், பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால் கிளைம் பெற முடியாது, அவ்வளவுதான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு