Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் !

செக்டார் அனாலிசிஸ் !

செக்டார் அனாலிசிஸ் !

செக்டார் அனாலிசிஸ் !

Published:Updated:
##~##
''என்ன சார் வேணும்? இட்லியா, தோசையா?'  சாதாரண கேள்விதானே! ஓட்டலுக்குள் நுழையும் முன்பே அங்கே என்ன கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். நமக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும். இருந்தாலும், இந்தக் கேள்வி கேட்டவுடன் என்ன செய்வோம்?

'மெனு கார்டைக் கொடுப்பா’ என்று கேட்டு வாங்கி, அதை தீவிரமாக அலசி ஆராய்ந்து, பல்லாண்டுகளாகச் சாப்பிட்டுவரும் அதே இட்லியை ஆர்டர் செய்வோம். ஒரு சில அயிட்டங்கள் மட்டுமே உள்ள உடுப்பி ஓட்டலிலேயே இப்படி எனில், முன்பின் நுழையாத ஃபுட் கோர்ட்க்கு போனால், ஒரே கன்ஃப்யூஷன்தான்!

'சாய்ஸ்’ - இது வரமா, சாபமா என்று தெரியவில்லை! விரைவில் முடிவெடுக்க முடியாமல் நம்மைக் குழப்பி, முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தி, நம்மைத் தொல்லைப்படுத்துவதாகக்கூடத் தோன்றலாம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து நம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை பல முக்கியமான விஷயங்களில் இந்த 'சாய்ஸ்’ இருப்பதை விரும்புகிறோம். ஆனால், தெளிவாகத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவி தேவை. அந்த உதவி நம் உறவினரிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ கிடைக்கலாம்.

பங்குச் சந்தை முதலீட்டிலும் இதே பிரச்னைதான்; சுமார் ஐயாயிரம் பங்குகளில் இருந்து நம் முதலீட்டிற்கு ஏற்ற ஒரு சில நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

செக்டார் அனாலிசிஸ் !

இதற்கு பல வழிகள் உள்ளன; குறிப்பாக, இரண்டுவிதமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி 5,000-ல் இருந்து இந்த எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

1. டாப் டவுன் அப்ரோச்

2. பாட்டம் அப் அப்ரோச்

டாப் டவுன் அப்ரோச்!

அ) முதலில் ஒரு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை எப்படி இருக்கிறது எனப் பார்ப்பது.

ஆ) பின்னர், அத்தகைய பொருளாதாரப் பின்னணியில் வளர்ந்துவரும், மேலும் வளரக்கூடிய வாய்ப்புள்ள தொழிற்துறை என்ன என்பதைக் கண்டுபிடிப்பது.

இ) கடைசியாக, அத்துறையில் உள்ள நல்ல வலுவான, நேர்மையான, திறமையான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது.

பாட்டம் அப் அப்ரோச்!

டாப் டவுன் அப்ரோச்சுக்கு நேர்மாறானது இது.

அ) முதலில் ஒரு நல்ல ஸ்திரமான, நேர்மையான, திறமையான நிறுவனத்தைக் கண்டுபிடிப்பது.

ஆ) அதன் பின்னர், அந்நிறுவனம் ஈடுபட்டுவரும் துறை எத்தகையது; அதன் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆராய்வது.

செக்டார் அனாலிசிஸ் !

இ) பிறகு ஒட்டுமொத்த பொருளாதார சூழல் அதற்கு ஆதரவான நிலையில் உள்ளதா என கண்டறிந்து அதன் அடிப்படையில் அந் நிறுவனப் பங்குகள் முதலீட்டிற்கு ஏற்றவையா எனத் தேர்ந்தெடுப்பது.

மேலே சொன்ன இரண்டு முறைகளிலும், ஒரு பொதுவான அம்சத்தைப் பார்க்கலாம்; இரண்டின் துவக்கமும் முடிவும் ஒன்றுக்கொன்று நேர்மறையாக இருந்தாலும் இரண்டிலும் நடுவில் வருவது ஒரே விஷயம்தான். அதுதான், செக்டார் அனாலிசிஸ்.

செக்டார் அனாலிசிஸ் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட துறையின் தற்போதைய நிலவரம் என்ன, எதிர்கால வாய்ப்புகள் எப்படி, வருங்கால வளர்ச்சி எப்படி இருக்கலாம், அதன் வளர்ச்சியை நிர்ணயம் செய்யக்கூடிய அம்சங்கள் என்ன, அவை பெரிய அளவில் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று ஆராய்வதே செக்டார் அனாலிசிஸ்.  

இந்த அனாலிசிஸ் ஏன் தேவை? சாய்ஸ் மிக அதிகமாக இருக்கும்போது, அவற்றில் நிஜமாகவே நல்ல நிறுவனங்களைச் சல்லடை போட்டுச் சலித்துதான் தேட வேண்டியிருக்கிறது. சரியில்லாத துறைகளைத் தவிர்த்து, நம் முதலீட்டிற்கு ஏற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவும் வடிகட்டி அல்லது சல்லடைதான் இந்த செக்டார் அனாலிசிஸ்.

இதனால் என்ன பயன்? எதிர்காலத்தில் அதிவேக வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள துறையாக இருப்பின், அத்துறையிலுள்ள நல்ல பங்குகளில் முதலீடு செய்வது விரைவில் நல்ல பலனை அளிக்கும். அப்படி ஷார்ட் லிஸ்ட் செய்ய உதவுவது இந்த செக்டார் அனாலிசிஸ்.

என்ன கிரைட்டீரியா? பொதுவாகப் பார்க்கையில், மிகக் குறைந்த மாறுபடும் காரணிகள்/கிரைட்டீரியா உள்ள துறைகள் நல்லது.

அத்துறை இப்போது அதனுடைய லைஃப் சைக்கிளில் எத்தகைய காலகட்டத்தில் இருக்கிறது? அதீத வளர்ச்சியைக் காணும் டீனேஜா, இல்லை ஓய்வுக்காலத்தை நோக்கித் தள்ளாட்டம் போடும் கனிந்த காலமா என்பதைத் தெரிந்துகொள்வது அத்தியாவசியம்.

செக்டார் அனாலிசிஸ் !

பங்குச் சந்தையில் மற்றவர்களைவிட நல்ல லாபம் ஈட்ட இத்தகைய அனாலிசிஸ் தேவையாகிறது.

இத்துறை சைக்ளிக்கலானதா? எவ்வளவு தூரம் பாதிப்பு? இப்பாதிப்பை மட்டுப்படுத்த முடியுமா, அறிவியல்/நிர்வாக ரீதியாகவா?

மூலதனம் அதிகம் தேவைப்படும் துறையா? கடன் அதிகம் உள்ள துறையா?

இத்துறையில் கடும் போட்டி உள்ளதா?, இத்துறையின் முன்னணிப் பங்குகள் எவை?

ஒரே துறையிலுள்ள பல நிறுவனங்களின் செயல்பாடு களை எப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?

இத்துறை நிறுவனங்களின் லாப, நஷ்டத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை எனக் கண்டறிவது எப்படி? ஏனைய துறைப் பங்குகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி?

சுருக்கமாகச் சொன்னால், பெரிய மெனு கார்டில் இருந்து, நமக்கு பொருத்தமான முதலீட்டிற்கு ஏற்ற துறைகளை, பங்குகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இனி துறைவாரி அலசல்களைப் பார்க்கலாம்; முதலில் எந்தத் துறை? சஸ்பென்ஸ்; காத்திருங்கள் அடுத்த வாரம் வரை.

(அலசுவோம்)