Published:Updated:

மிட்டலை மிரட்டும் பிரான்ஸ் அரசாங்கம்!

மிட்டலை மிரட்டும் பிரான்ஸ் அரசாங்கம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான லஷ்மி மிட்டல், பிரான்ஸ் அரசின் கடுங்கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆர்சிலர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ததே இந்த கோபத்திற்கு காரணம்.

2006-ல் ஆர்சிலர் நிறுவனத்தை வாங்கும்போது ஆட்குறைப்பு செய்யமாட்டோம்; முதலீட்டைக் குறைக்கமாட்டோம் என பிரான்ஸ் அரசாங்கத்திற்கு உறுதிசொல்லி இருந்தார் மிட்டல். ஆனால், இப்போது உருக்கு துறை மந்தமாக இருக்கிறது என்பதால், பிரான்ஸில் ஃப்லாரஞ்ச் என்னும் இடத்தில்

மிட்டலை மிரட்டும் பிரான்ஸ் அரசாங்கம்!

உள்ள ஃபர்னஸ் ஆலையை மூட மிட்டல் முடிவு செய்ய, அதனால் 600 பேர் வேலை இழக்கும் நிலை.  

இந்த வேலை இழப்பைத் தடுக்க ஃப்லாரஞ்ச் ஆலையை தேசியமயமாக்கிவிடலாம் என அதிரடி கருத்து சொல்லி இருக்கிறார் பிரான்ஸின் தொழில் துறை அமைச்சர் அர்னாட் மான்டேபர்க். அதோடு நிற்காமல், லஷ்மி மிட்டலின் உறவு பிரான்ஸுக்கு தேவை இல்லை என்றும் காரசாரமாக பேசி, பிரச்னை இன்னும் பூதாகரமாகி இருக்கிறது.  

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹேலண்ட்-யை சந்தித்து பேசிய லஷ்மி மிட்டல்,

மிட்டலை மிரட்டும் பிரான்ஸ் அரசாங்கம்!

தன் பக்க நியாயங்களை எடுத்துச்சொல்லி இருக்கிறாராம்.  இதற்கிடையில், இந்த ஃபர்னஸ் ஆலையை பிரான்ஸ் அரசு யாருக்காவது விற்க முயற்சிக்க, இதுவரை யாரும் வாங்க முன்வரவில்லை.

உலக பொருளாதார நெருக்கடி யால் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத் தின் பங்குகள் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.  படாதபாடுபட்டு அந்நிறுவனத்தை நடத்திவரும் நிலையில் புதிய சிக்கலில் இருந்து மிட்டல் எப்படித்தான் மீண்டு வரப்போகிறாரோ!              

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு