Published:Updated:

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

Published:Updated:
டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?
டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?
 ##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்றவற்றுக்கான செலவுகளுக்கு மெடிக்ளைம் பாலிசியில் இழப்பீடு கிடைக்குமா?

- பிரகலாதன், தென்காசி.

ரவி, காப்பீடு ஆலோசகர், பஜாஜ் கேப்பிட்டல்.

''புதிதாக கண்டறியப்படும் நோய் தாக்கினாலும் 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால் மெடிக்ளைம் பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். எனவே, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய் தாக்குதல்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தால் செலவு தொகைக்கு க்ளைம் செய்துகொள்ள முடியும்.'

கமாடிட்டி டிரேடிங்கில் பிளாட்டினம் இருக்கிறதா?  

- கதிரேசன், திருச்சி.

சிவக்குமார், கிளஸ்டர் ஹெட், ஏஞ்சல் கமாடிட்டி புரோக்கிங்.

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?
டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

''கமாடிட்டி சந்தையில் பிளாட்டினம் டிரேடிங் 2008-ல் கொண்டு வரப்பட்டது. ஆனால், தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே ரொக்கச் சந்தை விலைக்கும், ஆன்லைன் விலைக்கும் அளவு கடந்த விலை வித்தியாசம் உருவானது. இதனால் விற்பனையில் குழப்பம் ஏற்பட்டதால் பிளாட்டினம் ஆன்லைனில் டிரேட் ஆவது சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது.''

சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்திவிட்டு, பணம் கட்டாமல் விட்டுவிட்டேன். தற்போது கார் வாங்குவதற்குப் புதிதாக கடன் வாங்க முடியுமா? சிபில் அமைப்பில் எத்தனை வருடங்களுக்குத் தகவல்கள் இருக்கும்?

- வின்சென்ட், கோயம்புத்தூர்.

கணேசன், முதன்மை மேலாளர். பஞ்சாப் நேஷனல் வங்கி.

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

''சிபில் அமைப்பில் இத்தனை வருடங்களுக்குத் தான் உங்களது விவரங்கள் பராமரிக்கப்படும் என்கிற வரம்பு கிடையாது. ஒருமுறை உங்களது பெயர் பதிவாகிவிட்டால் அதை நீக்க முடியாது. உதாரணமாக, நீங்கள் வங்கியில் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாதபட்சத்தில் சிபில் பட்டியலுக்கு உங்கள் பெயரை தந்துவிடுவோம். பின்பு, நீங்கள் கடனைக் கட்டிவிட்டாலும் அந்த விவரங்கள் இருக்குமே தவிர, பட்டியலிலிருந்து பெயரை நீக்க முடியாது. இந்த பட்டியலில் உங்கள் பெயரில் பாக்கிக் கடன் இருக்கும்பட்சத்தில் எந்த நிறுவனமும் உங்களுக்கு கடன் வழங்காது. நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டுக்குரிய பணத்தை செட்டில்மென்ட் செய்தபின் புதிய கடன் வாங்க முயற்சி செய்வது நல்லது.''

நான் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறேன். நான் எனது தாயார் மூலம் சொந்த ஊரில் இடம் வாங்கி

 வீடு கட்டியுள்ளேன். பத்திரப் பதிவு மற்றும் எந்த வேலைகளுக்கும் நான் வரவில்லை. எல்லா நடைமுறைகளையும் அம்மாவே பார்த்துக்கொண்டார். பிற்காலத்தில் அம்மா பெயரிலிருந்து என்

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

பெயருக்கு வீடு மற்றும் இடத்தை மாற்ற வரிகள் ஏதேனும் கட்ட வேண்டுமா?

- ரமேஷ்ராயன்.

அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''நீங்கள் சம்பாதித்து அனுப்பிய பணத்தைக் கொண்டு மனை மற்றும் வீடு வாங்கியிருந்தாலும், உங்கள் தாயாரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப் பட்டிருப்பதால் பிற்காலத்தில் அந்த சொத்தில் அனைத்து வாரிசுகளும் உரிமை கோர முடியும். எனவே, உங்கள் தாயார் பெயரில் இருக்கும் மனை மற்றும் வீட்டை உங்கள் பெயருக்கு கிரயத் தொகை இல்லாத ஒரு உரிமை மாற்ற தானப் பத்திரம் மூலம் உரிமை மாற்றம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக ரூபாய் பத்தாயிரம் மற்றும் பதிவுக் கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். வேறு வரிகளோ கட்டணங்களோ கிடையாது.''

பங்குப் பிரிப்பு, போனஸ் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

- சீனிவாசன், திருவாரூர்.

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?

ஏ.எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.

''நிறுவனம் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும்போது முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு கொடுக்கும். இதனால் நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரித்து பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். போனஸ் பங்கினால் முதலீட்டாளருக்கு உடனடி லாபம் கிடைக்காது. ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் கூடுதல் டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.  

பங்குப் பிரிப்பு என்பது பங்குகளின் விலை மிகவும் உயர்ந்து காணப்படும்போது அதன் முக மதிப்பைக் குறைப்பதாகும். உதாரணமாக, 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்கை ரூபாய்

5 முக மதிப்பு கொண்ட இரு பங்காகப் பிரிப்பதாகும். இதனால், பங்குகளில் முதலீடு செய்ய அதிக எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள் முன் வருவார்கள். பங்குப் பிரிப்பினால் முதலீட்டாளர்களுக்கு உடனடி ஆதாயம் இல்லை என்றாலும், நீண்ட காலத்தில் பங்குகள் விலை உயரும்போது லாபம் கிடைக்கலாம்.''

டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?
டெங்கு தாக்குதல் மெடிக்ளைம் கிடைக்குமா ?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism