Published:Updated:

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

நாணயம் மேடை

பிரீமியம் ஸ்டோரி

தொழில் வாய்ப்புகள், தொழிற்கடன் திட்டங்கள், தொழில்களுக்கான அரசு மானியம் மற்றும் சலுகைகள் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார், இட்காட் கன்சல்டன்ஸி அண்ட் சர்வீஸஸ் தலைமை துணைத் தலைவர் பி.ஆர்.பெருமாள்.

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!
மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

மின்சாரப் பற்றாக்குறை என்பது கடுமையாக இருக்கும் இன்றைய நிலையில் மின்சாரம் மிகக் குறைவாகச் செலவாகும், லாபம் தரக்கூடிய தொழில்கள் மூன்றை பரிந்துரை செய்ய முடியுமா?

- கருப்பசாமி, பாளையங்கோட்டை.

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

குடும்பத் தலைவியான நான் பகுதி நேரமாக வீட்டில் இருந்தபடியே ஏதாவது பொருட்களைத் தயாரித்து கடைகளுக்கு ஆட்கள் வைத்து சப்ளை செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். தற்போதையச் சூழ்நிலையில் எது மாதிரியான பொருட்களுக்கு அதிக தேவை இருக்கிறது?

- கே.சுந்தரி, நாமக்கல்.

''இரு கேள்விகளுக்கும் பொருத்தமான ஒரு பதிலைச் சொல்கிறேன். மின்சாரத் தேவை மிகக் குறைவாக உள்ள பல்வேறு ஊரகத் தொழில்கள் உள்ளன. அதில் மூன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். அவை, 1.பாக்கெட் செய்யப்பட்ட தின்பண்டங்கள், 2. கிளீனிங் பவுடர், 3. ஹாலோ பிளாக்.

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

மெழுகுவத்தி, சொட்டு நீலம், பெருங்காயம் போன்றவற்றைத் தயாரிக்கிறேன் கடன் தேவைப்படுகிறது. இதற்கு மானியம் கிடைக்குமா?

- மாரியப்பன், முகவூர், ராஜபாளையம்.

''பொதுவாக, தொழில் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கான தொழில் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது அது சார்ந்தப் பொருளாக இருக்கவேண்டும். மெழுகுவத்தி, சொட்டு நீலம், பெருங்காயம் ஆகிய பொருட்கள், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை. எனவே, இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தயாரிக்கத் திட்ட மிடலாம். இதற்கான கடன் பாரத பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் அருகாமை பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும். தொலைபேசி எண்: 04562 - 252739'.

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!
மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

எஸ்.எஸ்.ஐ., எம்.எஸ்.எம்.இ. போன்ற அமைப்புகளிலிருந்து உங்கள் இட்காட் அமைப்பு எப்படி வேறுபடுகிறது? புதிதாகத் தொழில் செய்பவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகளை நீங்கள் அளிக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் உங்களுக்கு எங்கெல்லாம் அலுவலகங்கள் இருக்கின்றன?

- வி.செல்வா, விழுப்புரம்.

''தலைமை அலுவலகம் சென்னை யில் (044 - 42936825) அமைந் துள்ளது. கிளை அலுவலகங்கள் சேலம் (0427-2440051), ஈரோடு (0424-2266984) நகரங்களிலும், திட்ட அலுவலகங்கள் வேலூர்,

தஞ்சாவூர், புதுச்சேரியிலும் அமைந்துள்ளன. மத்திய, மாநில அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இணைந்து இந்தியாவின் தொழில் மேம்பாட்டுக்கு உதவும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இட்காட். எங்கள் அமைப்பு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, குறிப்பாக வங்கிக் கடன் பெறுகிற வகையில் திட்ட அறிக்கைகளைத் தயாரித்து வழங்குகிறது. மேலும், தொழில் தொடர்பான அனைத்து விவரங்களும் சமீபத்திய நிலவரம் வரை துல்லியமாக இடம் பெற்றிருக்கும்.''

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

''நான் பல புதிய தொழில்நுட்பங்களை வைத்துள்ளேன். இந்த தொழில்நுட்பங்களை காப்பிரைட் பண்ண முடியுமா? அதற்கான நடைமுறை என்ன?''  

- பாலசுப்ரமணியன், இ-மெயில் மூலமாக...

''புதிய தொழில்நுட்பங்களின் காப்புரிமை மற்றும் கடன் வசதிக்கு கீழ்க்கண்ட நிறுவனத்தை அணுகவும்.

Rural Innovations Network,
20/6, 2nd Street Lloyds Road,
Lakshmipuram,
Royapettah, Chennai - 600 014
044 - 4263 6443, 2811 2108

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி, அதை கிராவல் செய்து விற்கும் தொழிலில் எனக்கு அனுபவம் உள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்குமா?

- ஆர்.அண்ணாதுரை, செய்யாறு.

''வங்கிக் கடன் தாராளமாகக் கிடைக்கும். தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறமுடியும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகவும்.''

மின்சாரத் தேவை குறைவாக உள்ள தொழில்கள்!

ஜவுளித் தொழில் தற்போது மந்தமாக உள்ளது. மேலும், மின்தடை பெரும் பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் எந்த மாதிரியான தொழிலை மேற்கொண்டால் லாபகரமாக இருக்கும்?

- விக்னேஷ், திருப்பூர்.

''உணவுப் பொருட்கள் விற்பனை, காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்வது அல்லது விற்பனையில் ஈடுபடுவது லாபகரமாக இருக்கிறது. இதற்கான மின்சாரத் தேவையும் மிகக் குறைவு. இவற்றில் நீங்கள் ஆர்வம் காட்டலாம்''

தொகுப்பு: சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு