Published:Updated:

பஞ்சாயத்து டு சி.எம்.டி.ஏ. புது அப்ரூவல் வாங்கணுமா?

பஞ்சாயத்து டு சி.எம்.டி.ஏ. புது அப்ரூவல் வாங்கணுமா?

##~##

சென்னை புறநகரில் பஞ்சாயத்து அப்ரூவல் இடம் வாங்கியிருந்தேன். தற்போது அந்தப் பகுதி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் ஏற்கெனவே வாங்கிய பஞ்சாயத்து அப்ரூவல் செல் லுமா? அல்லது புது அப்ரூவல் வாங்க வேண்டுமா?

- கதிரேசன், திருத்தணி.

பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.

''பெருநகர விரிவாக்கத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சாயத்து அப்ரூவல் செல்லும். சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் மட்டும் வாங்கினால் போதும். ஏற்கெனவே, அப்ரூவல் வழங்கப்பட்ட இடத்திற்குத் திரும் பவும் அனுமதி வாங்கவேண்டிய அவசியமில்லை''.

பஞ்சாயத்து டு சி.எம்.டி.ஏ. புது அப்ரூவல் வாங்கணுமா?

நான் ஒரு நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தேன். இரண்டு வருடமாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. என்ன செய்வது?

- கதிரவன், புதுச்சேரி.

லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''பொதுவாக, பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை வாங்கும்போது இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியாது. நிறுவனம் நல்ல செயல்பாட்டில் இருந்து, முறையாக டிவிடெண்ட் வழங்கி வரும்பட்சத்தில் பிரச்னை இல்லை. நிறுவனத்தின் செயல்பாடும் சரியில்லை, டிவிடெண்டும் இல்லை, எதிர்கால வளர்ச்சித் திட்டங்களும் சரியாக இல்லை என்கிறபட்சத்தில் இந்தப் பங்கை விற்றுவிடுவது நல்லது. நிறுவனத்தின் செயல்பாடுகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதபட்சத்தில் இந்த பங்குகளை வாங்க விருப்பம்கொண்ட பிறரிடத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமோ பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிவிடுவது நல்லது.''

எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு 2007-ல் வாங்கினேன். அவர்கள் சொன்ன ஓர் இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கு அதன் மூலம் பிரீமியம் கட்டினேன். மறு வருடம் கார்டை பயன்படுத்தாமல் சும்மா வைத்திருந்தேன். ஆனால், அவர்கள் திரும்ப மறுவருடமும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் பிடித்தம் செய்துள்ளனர். அந்த விவரம் எனக்குத் தெரியவில்லை. இதற்கென வட்டியோடுச் சேர்த்து தற்போது இரண்டு மடங்கு தொகையைக் கட்டச் சொல்கின்றனர். இந்த தொகையைக் கட்டாததால் எனது கிரெடிட் மதிப்பு குறைகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது?

- உஷாராணி, சென்னை.

எஸ்.கோபாலகிருஷ்ணன், முதன்மை ஆலோசகர், திஷா நிதி சார்ந்த ஆலோசனை மையம்.

''கிரெடிட் கார்டு வாங்கும்போதே அதற்குரிய ஒப்பந்த ஷரத்துகளை முழுமையாகப் படித்து பார்த்துதான் கையப்பம் இடவேண்டும். அந்த வகையில் அவர்கள் வழங்கிய இன்ஷூரன்ஸ் திட்டத்திற்கு நீங்கள் வழங்கிய ஒப்புதலில் என்னென்ன ஷரத்துகள் குறிப்பிடப்பட்டிருந்தன என்பதைப் பார்க்க வேண்டும். இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்காகத் தொகை பிடிக்கப்பட்டிருந்து, அதற்குரிய மாதாந்திர ஸ்டேட்மென்ட கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் அந்த தொகைக்குரிய வட்டிக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இது தொடர்பாக கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் பேசி ஒரு சமரசத் தொகை கட்டவும். இதற்கு அத்தாட்சியாக ஒரு செட்டில்மென்ட் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும். இதன்பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனமே சிபில் பட்டிய லில் இடம்பெற்றிருக்கும் உங்களது பெயரை கடன்காரர் பட்டியலிலிருந்து நீக்க பரிந்துரைத்து விடும்.''

பஞ்சாயத்து டு சி.எம்.டி.ஏ. புது அப்ரூவல் வாங்கணுமா?

ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு மெடிக்ளைம் கிடைக்குமா?

- செந்தில், பொள்ளாச்சி.

வி.அனுராதா சீனிவாசன், காப்பீடு ஆலோசகர், திருவாரூர்.

''ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் இழப்பீடு பெறமுடியும். ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அரசு பதிவுபெற்ற மருத்துவமனையாகவும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்ட மருத்துவமனையாகவும் இருக்க வேண்டும். ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வியாதி சார்ந்த மசாஜ்களுக்கு க்ளைம் கிடைக்கும். ஆனால், சாதாரண மசாஜ்களுக்கு க்ளைம் கிடைக்காது.''

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை அனுப்ப விரும்புகிறேன். இது ஏற்றுமதியின் கீழ் வருமா? இப்படி அனுப்ப யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

- ஜெ.அன்வர், கள்ளக்குறிச்சி.

கே.உன்னிகிருஷ்ணன், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) இயக்குநர் (தென் மண்டலம்).

''உங்கள் நண்பருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசாக அனுப்பினால் அதற்கு எந்த சான்றும் தேவையில்லை. அதேநேரத்தில், அனுப்புபவர் குறிப்பிடும் மதிப்பை சுங்கத் துறை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து இது அமையும். வெள்ளிப் பொருட்களை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்ட நினைத்தால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான அனுமதி பெறுவது அவசியம்.'

பஞ்சாயத்து டு சி.எம்.டி.ஏ. புது அப்ரூவல் வாங்கணுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு