Published:Updated:

வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?

உஷார்

வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?

உஷார்

Published:Updated:
வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

து ஓர் அதிர்ச்சி தரும் சம்பவம். இந்தச் சம்பவம் உங்களுக்கு நேராமல் இருக்க வேண்டுமென்றால், இந்தக் கட்டுரையை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும்.

மும்பையைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவர் ஒரு  வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். கடனைக் கட்டி முடித்தபிறகு  வங்கியிலிருந்த தனது ஆவணங்களைக் கேட்டார்.  ஆனால் வங்கி அதிகாரிகளோ, 'உங்கள் வீடு தொடர்பான ஆவணம் காணாமல் போய்விட்டது’ என்று சொல்ல,  அதிர்ச்சி அடைந்தார். ஆறு மாதம் நடையாக நடந்தபின், 'ஆவணம் தொலைந்துவிட்டது. டூப்ளிகேட் ஆவணம் வாங்க நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்கள் அதிகாரிகள்.

என்னென்ன ஆவணங்கள்?

வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?

வங்கியில் கடன் வாங்கும்போது பங்குப் பத்திரம், மியூச்சுவல் ஃபண்ட் பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் பத்திரம், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களின் ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட்டைத் தருவோம். சொத்தை அடமானம் வைத்து வாங்கும் கடன்களான வீட்டுக் கடன், இன்ஷூரன்ஸ் பாலிசியின் மேல் வாங்கும் கடன், ஃபிக்ஸட் டெபாசிட், நேஷனல் சேவிங் ஸ்கீம் மீது வாங்கும் கடன்களுக்கு ஒரிஜினல் ஆவணங்களைத்தான் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை வங்கி தொலைத்துவிடும்பட்சத்தில் இதன் டூப்ளிகேட் சான்றிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இந்த ஆவணங்கள் எல்லாம் தொலைந்தால்கூட சமாளித்துவிடலாம். ஆனால், வீட்டுப் பத்திரம் தொலைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமானதாக இருக்கும். வீட்டுப் பத்திரம் தொலையும்பட்சத்தில் பத்திரப் பதிவுத் துறையிலிருந்து டூப்ளிகேட் ஆவணங்கள் வாங்குவது பகீரத முயற்சிதான். முதலில் காவல் துறையில் புகார் செய்யவேண்டும். பிறகு, பத்திரிகையில் விளம்பரம் தரவேண்டும். இப்படி பலவற்றை செய்தபிறகுதான் ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு செல்ல முடியும். ரிஜிஸ்டர் ஆபீஸில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கினாலும், ஒரிஜினல் பத்திரத்திற்கு இருக்கும் மரியாதை டூப்ளிகேட் பத்திரத்திற்கு கிடைக்காது. ஆக, வங்கி செய்யும்  தவறுக்காக கடைசியில் நாம்தான் நஷ்டப்பட வேண்டியிருக்கும்.

எப்படி காணாமல் போகிறது?

பெரும்பாலும் வங்கிகளின் அலட்சியத்தினால் ஒரிஜினல் ஆவணங்கள் காணாமல் போகின்றன. அடுத்து, இயற்கை பேரிடர்களான வெள்ளம், தீ விபத்து போன்ற சமயங்களில் ஆவணங்களைத் தொலைக்கின்றன வங்கிகள். 2005-ல் மும்பை யிலும்,   2006-ல் குஜராத் வெள்ளப் பெருக்கிலும் வங்கிகள் பலருடைய ஆவணங்களை தொலைத் திருக்கின்றன. ஆவணங்கள் தொலைந்துபோவது ஒரு பிரச்னை என்றால், இன்னும் சில வங்கிகள் ஆவணங்களை சிதைந்த நிலையில் தருவது இன்னொரு பிரச்னை.

வீட்டுக் கடன் வாங்கியவர்களின்  ஆவணங்கள் வங்கியில் பாதுகாக்கப்படுவது பற்றி எடுத்துச் சொன்னார் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை கிளை துணை மேலாளர் எழில்வண்ணன்.

நீங்களே பார்க்கலாம்!

வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?

''பொதுவாக ஒரு சொத்துக்கு எதிராக கடன் தரும்போது வங்கிகள் ஆவணங்களை செக்யூரிட்டியாக வாங்கிக்கொள்ளும். அப்படி வாங்கும் ஆவணங்களை வைக்க ஒரு தனி அறை வங்கிகளில் இருக்கும். பல கிளைகளுக்குச் சேர்த்து ஓர் இடத்தில் இந்த சென்ட்ரலைஸ்டு மையம் இருக்கும். இங்குதான் ஆவணங்கள் வைக்கப்படும்.

இந்த ஆவணங்கள் பெர்சனல் டாக்குமென்ட் மற்றும் பிராபர்ட்டி டாக்குமென்ட் என பிரிக்கப்படும். பெர்சனல் டாக்குமென்ட் என்பது கடன் சம்பந்தமாக வாடிக்கையாளர் தரும்  தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்கள். பிராபர்ட்டி ஆவணம் என்பது சொத்தின் ஒரிஜினல் ஆவணம். இவற்றை சீல் வைத்து, தீயினால் பாதிக்க முடியாத அறையில் லாக்கரில் வைப்பார்கள். இதனை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஆடிட்டிங்கின்போது சோதனை செய்வார்கள்.

வாடிக்கையாளர்கள் ஒரிஜினல் ஆவணங்களை பார்க்க வேண்டும் அல்லது ஜெராக்ஸ் தேவை எனில் எழுத்துப்பூர்வமாக வங்கிக்குத் தெரிவித்து வாங்கிப் பார்த்துக்கொள்ளலாம். இப்போது தொழில்நுட்பங்கள் நிறைய வளர்ந்துவிட்டதால் அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்கிறோம்.  

ஆம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்கலாம்!

நீங்கள் கடன் வாங்கிய இடமும், ஆவணங்கள் இருக்கும் இடத்தின் தூரத்தைப் பொறுத்து ஆவணங்களைத் திரும்பத் தருவதற் கான நாட்கள்மாறும்.  குறைந்தபட்சம் இரண்டு நாட்களிலி ருந்து அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் வங்கிகள் ஆவணங் களைத் தந்துவிடும்.  குறிப்பிட்ட நாட்களுக் குள் ஆவணங்களைத் தரவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் அந்த வங்கிக் கிளை மேலாளர் அல்லது தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அப்படியும் கிடைக்க வில்லை எனில், வங்கி ஆம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், நஷ்டஈடு எதையும் வங்கிகள் தராது'' என்றார் அவர்.

பத்திரமாக இருக்கிறது!

வங்கியில் நம் ஆவனங்கள்... பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா?

தனியார் வங்கிகளில் இந்த நடைமுறை எப்படி என அறிய வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி.யின் மெம்பர் ஆஃப் எக்ஸிக்யூட்டிவ் மேனேஜ்மென்ட் ஜோசப் மேத்யூவுடன் பேசினோம்.

''வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஆவணங்களை மிக பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வருகின்றன. அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணத்தை அடிக்கடி பார்க்க நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. காரணம், ஆவணங்களை அடிக்கடி எடுத்து, மீண்டும் சரியாக வைக்கத் தவறுவதன் மூலம் தொலைந்து போக வாய்ப்புண்டு. என்றாலும், சில தவிர்க்க முடியாதச் சூழ்நிலையில், அதாவது வீட்டை விற்க முற்படும்போது  மட்டும் ஆவணத்தை வெளியே எடுத்துக்காட்டுவோம். இதற்கு நாங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. அதேபோல ஆவணம் தொலையாமல் இருக்க சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். அதன்படி எங்கள் நிறுவனத்தில் ஆவணம் தொலைந்தால் அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவோம். அப்படியே தொலைந்தாலும் அதற்கான சான்றிதழை தந்து விடுவோம்'' என்றார்.

வாடிக்கையாளர்கள் தரும் ஆவணங்கள் பத்திரமாக உள்ளது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, அதற்கு பாதகம் வராமல் நடந்து கொள்வது வங்கிகளின் கடமை!

- பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism