Published:Updated:

எடக்கு மடக்கு

எடக்கு மடக்கு

எடக்கு மடக்கு

எடக்கு மடக்கு

Published:Updated:

''புதிய சபதம் எடுப்போம்!''

எடக்கு மடக்கு
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'எ
ன்ன ஏகாம்பரம், நியூ இயர் பார்ட்டிக்கு வர்றீயா? உனக்கும் சேர்த்து டிக்கெட் போடட்டா?’ என்று ஓல்டு ஃப்ரெண்ட் ஒருத்தன் போன் செஞ்சான்.

பலசரக்கு முதல் பங்குச் சந்தை வரை பல்வேறு விஷயங்களுக்கு நான்தான் இவனுக்கு ஓசி கைடு. சுத்திச் சுத்தி வந்து இல்லாதக் கேள்வி எல்லாம் கேப்பான். ஆனா, அவன் மூலமா எனக்குக் கெடைக்கிறது இந்த நியூஇயர் பார்ட்டி மட்டும்தான்.

'ஓ, 2013 பொறந்துடுச்சு. திரும்பவும் கொண்டாட ஆரம்பிச்சுடுவீங்களே! ஓகே எனக்கும் டிக்கெட் போடு! ஆனா, ஒரு கண்டிஷன், தண்ணி போடு, சிக்கனை சாப்பிடுன்னு என்னை டார்ச்சர் பண்ணக்கூடாது’ என்றேன். 'அப்பா, உன்னைப் பத்தித் தெரியாதா! சரி, அதைவிடு, 2012 எப்படி போச்சு உனக்கு? என்று வம்புக்கிழுத்தான்.

''நேஷனல் மேத்தமேட்டிக்கல் இயர்னு அறிவிச்சாலும் அறிவிச்சிருந்தாங்க. கூட்டிக்கழிச்சு கணக்குப் பார்த்தா, 2012-ல் நிறைய விஷயங்கள் கடுப்பாத் தான் இருந்துது’ என்றேன்.

''என்னப்பா இப்படிச் சொல்லிட்டே! 2012-ல பங்குச் சந்தை கிட்டத்தட்ட 20% ரிட்டர்ன் தந்திருக்கு. கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலர் அந்நியப் பணம் உள்ளே வந்திருக்கு. இதுக்கும் மேலே உனக்கு என்ன வேணும்?'' என்று அலுத்துக்கொண்டான்.

''நீ லாபக் கணக்கை மட்டுமே பாக்குறே. நான் எல்லாக் கணக்கையும் போட்டுத்தான் சொல்றேன். இந்த வருஷத்துல நிறைய வேண்டாததெல்லாம் நடந்துருக்கு. வேண்டியதெல்லாம் நடக்கவே இல்லை'' என்றேன்.

''இப்படி ஒரு வரியில பதில் சொன்னா எப்படி? கொஞ்சம் விளக்கமாச் சொல்லுப்பா!'' - அதான் ஆரம்பத்துலயே சொன்னேனே, சுத்தி சுத்தி வந்து கேள்வி கேப்பான்னு.

''ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல! எதிர்காலத்துல நல்லா இருக்கும்ங்கிற நெனைப்புல பல துறைகளுக்குக் கடனை அள்ளி அள்ளிக் குடுத்துது பேங்குங்க. இப்ப கிங்ஃபிஷர் மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டியிருக்கு. இந்தப் பணம் காந்திக் கணக்காயிடுமோன்னு நெனைச்சு வங்கிங்க கலங்கிட்டிருக்கு. இது மாதிரி பல கம்பெனிங்க பண்ணதால என்.பி.ஏ. எகிறி கிட்டிருக்கு. டெலிகாம் துறையும் 2012-ல அடிவாங்கிடுச்சு. ரியாலிட்டியைப் பார்த்தா, இப்பவோ அப்பவோன்ன மாதிரி நிலைமைக்கு வந்துடுச்சு. இப்படி சோதனைகள் கூட்டமா வந்தா பாதிக்கப்படுறது பாமரன்தானே'' என்றேன்.

''அதான் அரசாங்கம் கடைசியா ஆக்டிவா ஆயிடுச்சே! ரீடெய்ல எஃப்.டி.ஐ., இன்ஷூரன்ஸ்-ல எஃப்.டி.ஐ., வங்கித் திருத்த மசோதா, கம்பெனி மசோதான்னு பல விஷயம் நடந்திருக்கே'' என்றான்.

''அய்யா! மனுசன் வாழ்க்கை ரொம்பச் சின்னது. அதுக்குள்ள அவன் சாதிக்கிறதுதான் அவனையும் அவன் வாழற நாட்டையும் உயர்த்தும். அதை விட்டுட்டு இடையில ஒண்ணு, ரெண்டு வருஷம் முடிவெடுக்காம ரெஸ்ட் எடுத்துட்டா அப்புறம் சாதனை லிஸ்ட்டிலே யிருந்து வேதனை லிஸ்ட்டுக்குப் போயிடுவான்.

எடக்கு மடக்கு

2012-ஐப் பாரு, நியாயம்கிறது கொஞ்சம்கூடச் செல்லாதுங்கிற மாதிரி தோற்றத்தையில்ல தந்துடுச்சு. தினந்தோறும் லஞ்ச லாவண்யம், திருட்டுத்தனம், ஏமாற்றுன்னு செய்தியாப் படிச்சு வளர்ற இந்தக் கால குழந்தைங்க என்ன நினைக்கும்? உழைச்சு சம்பாதிக்கிறது ரொம்பக் கஷ்டம் போலன்னு ஒரு தப்பான அபிப்ராயம் அவங்க மனசுல வளர்ந்துடாதா. அப்படி வளர்ந்ததாலதானே ஈமு, ஆடு, கோழி வளர்க்கிறோமுன்னு சொன்னா காசை போட்டுட்டு ஆன்னு வாயைப் பொளந்துகிட்டு உக்கார்ந்திட்டிருக்காங்க நம்ம ஜனங்க. இவங்க, டெங்கு கொசு வளர்க்கிறோமுன்னு சொன்னாக் கூட காசு போடுவாங்க போலல்ல இருக்கு'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன்.

''சரி ஏகாம்பரம், இதுக்கெல்லாம் என்ன செய்யணும்ங்கிறே?'' என்று கேட்டான்.

''தனிமனித ஒழுக்கம் குறைஞ்சு போச்சு. பேராசை தலைவிரிச்சு ஆடுது. குறுக்குவழியில சம்பாதிச்சுடலாமுன்ற எண்ணம் வளருது. கண்ணு முன்னாடி நாலு பேரு அப்படி சம்பாதிச்சு மாட்டிக்காமத் திரியறதைப் பார்த்தா, எல்லோருக்கும் அந்த எண்ணம் வருது. அதுக்கேத்த மாதிரி சட்ட திட்டமும் மாடர்னா மாறணும். எல்லாமே கமர்ஷியலா மாறினா நல்லொழுக்கமும் மனிதநேயமும் காத்துல போயிடும்ங்கிறதைப் புரிஞ்சுகிட்டு மக்கள்கிட்ட அதை வளர்த்தெடுக்கப் பாடுபடணும். இதுக்கான முயற்சியை 2013-லயாவது எடுக்கணும். நான் ஊழல் பண்ணமாட்டேன். யாரையும் ஊழல் பண்ணவும் விடமாட்டேன்னு ஓர் உறுதிமொழியை எல்லாரும் கட்டாயம் எடுக்கணும்'' என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டேன்.

''ஏகாம்பரம் புல் ஃபார்முல இருக்கே! உன்னை கொஞ்சம் கூல் பண்றதுக்குத்தான் பார்ட்டிக்குக் கூப்பிட்றேன். எல்லாம் சரியாப்போயிடும்! டோன்ட் ஒர்ரி, பீ ஹேப்பி!'' என்றான் நண்பன்.

அவன்கிட்ட இருந்த பாசிட்டிவ் திங்கிங் எனக்குப் பிடிச்சிருந்தது. எல்லாம் சரியாப் போயிடும்னு நாம் நம்புற அதேநேரத்துல அதுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டா நல்லதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism