Published:Updated:

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

சர்ச்சை

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

சர்ச்சை

Published:Updated:
வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கிடைத்தபிறகும் அது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓயவில்லை. ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு வரவேண்டும் என்பதற்காக வால்மார்ட் நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் சுமார் 25 மில்லியன் டாலர் தொகையை  'லாபி’க்காகச்  செலவு செய்ததாக வெளியான தகவலே இப்போதைக்கு ஹாட் டாப்பிக்.

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வால்மார்ட் தவிர, டெல், ஃபைசர், ஹெச்.பி., குவால்காம், மார்கன் ஸ்டான்லி, புரூடென்ஷியல் ஃபைனான்ஸ், போயிங், ஸ்டார்பக்ஸ், ஜி.இ. மற்றும் கோல்கேட் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக சில மில்லியன் டாலர்களை தயங்காமல் செலவு செய்திருக் கிறது.

அமெரிக்க நிறுவனங்கள் எதற்காக 'லாபியிங்’ செய்கிறது, எதற்காகவெல்லாம் செலவு செய்வார்கள், 'லாபியிங்’ என்றால் லஞ்சமா, எந்த செலவுகள் எல்லாம் 'லாபியிங்’ என்கிற வகைக்குள் வரும், 'லாபியிங்’கை இந்தியாவும் அனுமதிக்கலாமா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மும்பையில் இருக்கும் ஜே.சாகர் அசோசியேட்ஸ் (J. Sagar Associates / advocates & solicitors)  நிறுவனத்தின் பார்ட்னர் சோமசேகர் சுந்தரேசனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

##~##
''லாபியிங் என்பது ஒரு விஷயத்தின் மீது தாக்கம் (influence) உண்டாக்குவது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது இருதரப்பு வாதத்தையும் எடுத்துக்கொண்டு முடிவெடுப்பதுதான் சரியானதாக இருக்கும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. இப்போது தனியார் நிதி நிறுவனங்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்ட ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது என்கிறபட்சத்தில் தனியார் நிறுவனங்கள் இதற்கான விதிமுறையை எளிமையாக்கும்படி 'லாபி’ செய்யும். அதேசமயம், முதலீட்டாளர் பாதுகாப்பு அமைப்புகள் முதலீட்டாளர்கள் நலன் கருதி விதிமுறைகளை கடுமையாக்கச் சொல்லும்.  

'லாபியிங்’ என்றவுடன் லஞ்சம் தந்து காரியத்தைச் சாதித்துக்கொள்வார்கள் என்று நாம் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. லஞ்சம் என்பது அரசு அதிகாரிகளுக்கும், சட்டத்தை உருவாக்குபவர்களுக்கும் பணம் அல்லது பரிசுகளை வழங்கு வதுதான். ஆனால், 'லாபி’ என்பது ஒரு கருத்தை முன்வைப்பது.

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

உதாரணத்துக்கு, தங்களுக்கு உகந்த, சரி என்று நினைக்கிற கருத்துகளை மீடியாக்களில் வரவைப்பார்கள். இதுகுறித்து ரிசர்ச் ரிப்போர்ட்களை தயார் செய்வார்கள். ஆராய்ச்சிகளுக்கு செலவு செய்வார்கள். விளம்பரம் தருவார்கள். தனிப்பட்ட ஆட்களாக இருந்தால் அவர்கள் ஒரு கருத்தை ஆதரித்துப் பேச, அவருக்கு அந்த விஷயத்தை விளக்கிச் சொல்வார்கள். ரிப்போர்ட்களைத் தந்து படிக்க வைப்பார்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்து அது பற்றி பேச வைப்பார்கள். இதற்கெல்லாம் செலவு செய்யவேண்டும். இந்த செலவுகளை கணக்கில் காட்டலாம் என்பது அமெரிக்காவில் இருக்கும் நடைமுறை. ஆனால், இந்தக் கணக்கை விலாவாரியாக எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை. குத்துமதிப்பாக எடுத்துச் சொன்னாலே போதும்.

தவிர, அமெரிக்க அரசிடம் லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள் மட்டுமே 'லாபியிங்’ செய்ய முடியும். 'லாபியிங்’ செய்வதற்கென்றே அமெரிக்காவில் பல நிறுவனங்கள் உண்டு. அவர்கள் அந்த வேலையைச் செய்வார்கள்'' என்றார்.

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

'இந்தியாவில் இதைக் கொண்டுவரலாமா?’ என்று அவரிடம் கேட்டோம்.

''இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டுக்கு 'லாபியிங்’ தேவையான ஒன்று. லாபி செய்ய நமது அரசாங்கம் சட்டரீதியான ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும், அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது அது ஒரு வரைமுறை இல்லாமல் நடக்கிறது. 'லாபியிங்’ தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி, அதற்கு அனுமதி அளிக்கவேண்டும்.  ஏனென்றால், 'லாபியிங்’-காக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்துவிட்டு, 10 லட்சம் ரூபாய் செலவானதாகச் சொல்லலாம். பில்களைத் தரத் தேவையில்லை என்பதால் பலரும் பொய்க் கணக்கு சொல்லவே வாய்ப்புண்டு. இதனால் லஞ்சம் பெருகுவதற்கும் வாய்ப்புண்டு.

'மார்க்கெட் 2013’ கருத்தரங்கம்!

வால்மார்ட் சர்ச்சை... ‘லாபியிங்’ என்பது லஞ்சமா?

ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் செக்யூரிட்டீஸ் டைம்ஷேர் ஓனர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்,  மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து பங்குச் சந்தை குறித்த 'மார்க்கெட் 2013’ என்னும் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறது.

இந்தக் கருத்தரங்கம் வருகிற டிசம்பர் 27, மாலை 6 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் (1,எல்டாம்ஸ் சாலை) உள்ள சி.பி.ஆர். கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்கத்தை மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேர்மன் ஹென்றி ரிச்சர்ட் தொடங்கி வைக்கிறார்.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி சங்கரன் நரேன் மற்றும் ஹிந்து பிஸினஸ் லைன் சீஃப் ரிசர்ச் அனலிஸ்ட் எஸ்.கே.லோகேஸ்வரி ஆகியோர் சந்தை பற்றி பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தரங்கத்தை பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன் வழி நடத்துகிறார். நாணயம் விகடன் வார இதழ்  கருத்தரங்கத்தின் மீடியா பார்ட்டனராக இருக்கிறது. நாணயம் விகடன் வாசகர்கள் இந்தக் கருத்தரங்கில் தாராளமாக கலந்துகொண்டு பயன்பெறலாம்!

என்றாலும், இப்போதும் பல நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 'லாபியிங்’ செய்து கொண்டு தான் இருக்கின்றன. நமது அரசாங்கம் இதற்கு முறைப்படியான அனுமதி அளிக்கும்பட்சத்தில் ஒவ்வொரு நிறுவனமும் எந்த விஷயத்துக்காக, எவ்வளவு பணத்தை செலவு செய்கிறது என்பது மக்களுக்குத் தெரியவரும்'' என்று முடித்தார் சோமசுந்தரம்.

அரசல்புரசலாக நடக்கும் 'லாபியிங்’ கூத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர, கறாரான விதிகளுடன் அதை அனுமதிப்பதே நல்லது என்பது நடுநிலை யாளர்களின் கருத்தாக இருக்கிறது. நம்ம ஊர் சில்லறை வணிகர்களும் அமெரிக்க 'லாபியிங்’ வழிமுறைகளை பயன்படுத்தியிருந்தால் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிக்கும் சட்டம் வராமலே கூட போயிருக்கலாம்!

- வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism