Published:Updated:

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

கேள்வி - பதில்

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

கேள்வி - பதில்

Published:Updated:
வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

வங்கியில் அறிமுக கையப்பம் போடுவதன் மூலம் பிற்காலத்தில் எனக்கு பிரச்னை வருமா?

வடிவேல், திருத்தணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
எஸ்.வெங்கடேசன்,
கிளை மேலாளர், சிண்டிகேட் வங்கி, வேலூர்.

''ஜாமீன் போடுபவருக்கு உள்ள பொறுப்புகள் போல அறிமுக கையப்பம் போடுபவருக்கு கிடையாது. உங்கள் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கியவர் ஏதாவது தவறான காரியத்தில் ஈடுபட்டால் உங்களிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்கு அறிமுகமான நபர்களுக்கு மட்டுமே அறிமுக கையப்பம் போடுங்கள். ஆனால், 2013 ஏப்ரல் முதல் புதிதாக கணக்குத் தொடங்க அறிமுக கையெழுத்து தேவையில்லை என ஆர்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதன்படி வரும் நிதி ஆண்டிலிருந்து ஒரு வாடிக்கையாளருக்கு இன்னொரு வாடிக்கையாளர் அறிமுக கையப்பம் போட வேண்டியதில்லை.''

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

வீட்டுக் கடன் வாங்கி இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில், அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்க முடியுமா?

மாணிக்கம், திருநெல்வேலி.

கிருஷ்ணன், கிளை மேலாளர், பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்னை.

''வீட்டுக் கடன் கட்டி முடிக்கப்படாத நிலையிலும் வீட்டை விற்க முடியும். இதற்கு வீட்டை விற்கும் உரிமையாளர், வாங்குபவர், வங்கி மூவரும் கூட்டாக 'டிரை பார்ட்டி அக்ரிமென்ட்’ (ஜிக்ஷீவீறிணீக்ஷீtஹ் கிரீக்ஷீமீமீனீமீஸீt) செய்துகொள்ளவேண்டும். இதன்படி வீட்டை வாங்குபவர் நிலுவையிலுள்ள கடனை வங்கியில் செலுத்தினால் அவர் வசம் வீட்டு ஆவணங்களை வங்கி அளிக்கும். அல்லது அந்த வீட்டை வாங்குபவருக்கு வீட்டுக் கடன் பெறும் தகுதியிருக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் மூலமும் அவர் அந்த வீட்டை வாங்கலாம். ஆனால், கடன் நிலுவையில் இருக்கும்போது அப்படியே விற்பது சரியானதல்ல, உங்கள் பெயரிலுள்ள கடனை அவர் கட்டுவதாக ஒப்புக்கொண்டு விற்பனை செய்யவும் முடியாது.''

உயிலின்படி ஒரே சர்வே எண்ணில் எனக்கும், என் சகோதரருக்கும் கூட்டுப் பட்டா உள்ளது. பாகம் பிரிக்கப்படாமல் அனுபவித்து வருகிறோம். இந்த நிலையில் என் சகோதரர் தன்னுடைய இடத்தை விற்கும்போது மொத்த நிலத்தையும் சேர்த்து பத்திரம் எழுதித் தந்துள்ளார். ஆனால், எனது நிலம் என் வசமே உள்ளது. இது தொடர்பாக சட்ட ரீதியாக நான் என்ன செய்யவேண்டும்?

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

என்.ரமேஷ், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

''பாகம் பிரிக்கப்படாமல் உங்களுடைய சொத்தையும் சேர்த்து விற்பனை செய்தது சட்ட ரீதியாக செல்லாது. அந்த விற்பனை, பாகம் பிரிக்கப்படாத உங்கள் நிலத்தைக் கட்டுப்படுத்தாது. எனவே, உங்கள் பாகத்தை கோரி நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்குத் தொடரலாம். மேலும், உங்கள் சகோதரர் செய்து கொடுத்த கிரய ஒப்பந்தம் பாகம் பிரிக்கப்படாத உங்கள் சொத்திற்கு செல்லாது என்றும் உத்தரவிடக் கோரி பரிகாரம் கேட்கலாம்.''

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

நான் வாங்கிப்போட்ட இடத்திற்கு பல வருடங்களாக நில வரி கட்டவில்லை. தற்போது கட்ட வேண்டுமெனில் என்ன நடைமுறை?

கதிரேசன், பொள்ளாச்சி

ஜீவா, வழக்கறிஞர்

''காலிமனை அமைந்துள்ள பகுதியின் உள்ளாட்சி அமைப்பிலும், அந்தப் பகுதியின் கிராம நிர்வாக அலுவலகத்திலும் இதற்குரிய நில வரியைக் கட்டலாம். அல்லது அந்த இடத்தில் வீடு கட்ட பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த இடத்திற்கு நிலுவையில் உள்ள மொத்த வரியும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.''

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

என் வயது 36. நான் எல்.ஐ.சி.யில் பென்ஷன் பிளான் எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். எனக்கு எல்.ஐ.சி.யில் உள்ள பென்ஷன் பிளான்கள் குறித்து சொல்லவும்!

குமரகுரு, தஞ்சாவூர்.

ஏ.ஜி.பழனி, காப்பீடு ஆலோசகர்.

''எல்.ஐ.சி.  பென்ஷன் பிளான் மற்றும் ஜீவன் தரங் என இரண்டு பென்ஷன் பிளான்கள் உள்ளன. எல்.ஐ.சி. பென்ஷன் பிளான் என்பது பங்குச் சந்தை சார்ந்து இயங்கக்கூடிய யூலிப் பிளான். பாலிசி காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் பென்ஷன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடையாது. பாலிசி காலம் முடிந்தபிறகு எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஜீவன் தரங் திட்டம் என்பது இன்ஷூரன்ஸுடன் கூடிய பென்ஷன் திட்டமாகும். பாலிசி காலத்திற்குப் பிறகு கட்டிய பணம் திரும்பக் கிடைப்பதுடன், பென்ஷன் தொகையும் கிடைக்கும். பாலிசிதாரரின் இறப்புக்குப் பிறகு அவரது குடும்பத்திற்கு காப்பீடுத் தொகை கிடைக்கும்.''

வங்கி அறிமுக கையொப்பம்... பிரச்னை வருமா?

எனது தந்தை இறந்துவிட்டார். அவரது பெயரிலுள்ள பங்கு ஆவணங்களை என் பெயருக்கு மாற்ற நிறுவனத்திற்கு விண்ணப்பம் அனுப்பி ஆறு மாதம் ஆன பின்பும் பதில் இல்லை. இடையில் டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. என்ன செய்வது?

மோகன், தஞ்சாவூர்.

எஸ்.ரமேஷ், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் அண்ட் ஷேர்ஸ்.

''விண்ணப்பித்த மூன்று மாதங்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அனுப்பிய விண்ணப்பத்தில் உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழ் மற்றும் சட்ட ரீதியான வாரிசு ஆவணங்களில் குழப்பம் இருக்கும்பட்சத்திலும் தாமதம் ஆகலாம். எனவே, தாமதத்திற்கான காரணம் என்ன என்பதைக் கடிதம் மூலம் தொடர்புடைய நிறுவனத்திடம் கேட்கவும். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால்கூட டிவிடெண்ட் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். நிறுவனத்திடமிருந்து சரியான தகவல் வராதபட்சத்தில் பங்குச் சந்தையின் முதலீட்டாளர் சேவைப் பிரிவில் முறையிடலாம். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் செபி அமைப்புக்கு புகார் அளித்தால் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism