
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 20% குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 4.2 சதவிகிதமாக இருப்பதே. சில ஆண்டுகளுக்கு முன் இது 2.7 சதவிகிதமாகத்தான் இருந்தது. 1991 ஏப்ரலில் 13,900 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2011 அக்டோபரில் 1,11,150 கோடி ரூபாயாக எகிறியுள்ளது.

என்ன காரணம்?
வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம், நாம் மேலும் மேலும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்து வருவதுதான். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த இரு பொருட்களின் தேவை அத்தியாவசியமாக இருப்பதால் இவற்றின் இறக்குமதி எதிர்காலத்திலும் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும். அதனால் வர்த்தகப் பற்றாக்குறையும் உயரும். இதனைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பும் குறையவே செய்யும். அடுத்து, நம் நாடு ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையே அதிகம் நம்பி உள்ளது. இந்நாடுகளில் பொருளாதாரம் மற்றும் தொழில் சூழல் சாதகமாக இல்லை என்பது இந்தியாவுக்குப் பாதகமான அம்சமாக இருக்கிறது.

ரூபாய் மதிப்பும் எஃப்.டி.ஐ.யும்!
ரூபாய் மதிப்புக்கும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் (எஃப்.டி.ஐ.) நேரடித் தொடர்பு இருக்கிறது. கடந்த 2007-ல் இந்தியாவுக்கு 1,249.2 கோடி டாலர் எஃப்.டி.ஐ. வந்தது. அந்த ஆண்டில் ரூபாய் மதிப்பு 41.20-ஆக இருந்தது. 2009-ல் 3,139.6 கோடி டாலர் எஃப்.டி.ஐ. வந்த நிலையில் ரூபாய் மதிப்பு 48.32-ஆக குறைந்தது. அதாவது, எஃப்.டி.ஐ. வரத்து குறைவாக இருந்த ஆண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வலிமையாக இருந்துள்ளது.
அடுத்த முக்கியமான விஷயம், ஜி.டி.பி. வளர்ச்சி அதிகமாக இருந்தால் ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு, 2007-ல் ஜி.டி.பி. வளர்ச்சி 9.6 சதவிகிதமாக இருந்தது. அந்த ஆண்டில் டாலர் மதிப்பு 41.20 ரூபாயாக இருந்தது. 2009-ல் ஜி.டி.பி. வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருந்தது. அப்போது ரூபாய் மதிப்பு 48.32 ரூபாயாக இருந்தது. 2012-ல் ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் ரூபாய் மதிப்பும் வீழ்ச்சிக் கண்டுள்ளது.

இனி எப்படி?
''டெக்னிக்கல்படி பார்த்தால், தற்போதைய நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 56 என்பது வலிமையான ரெசிஸ்டன்ஸ் ஆக உள்ளது. அதிகரித்துவரும் வர்த்தகப் பற்றாக்குறை, அதிக பணவீக்க விகிதம், ஜி.டி.பி. வளர்ச்சி குறைவு, எஃப்..டி.ஐ. வரத்து குறைவு, இதர பொருளாதார காரணிகளை வைத்து பார்க்கும்போது, 2013-ல் இந்திய ரூபாய் மதிப்பு சராசரியாக 55 முதல் 56 ரூபாயாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது'' என்றார் சுரேஷ்.
அதிக ஏற்ற, இறக்கம் கொண்டது என்பதால் கரன்சி மீது ஒரு கண் வைத்திருப்பது நல்லது!
- சி.சரவணன்