Published:Updated:

ரத்தன் டாடா: டாடா பை பை!

ரத்தன் டாடா: டாடா பை பை!

ரத்தன் டாடா: டாடா பை பை!

ரத்தன் டாடா: டாடா பை பை!

Published:Updated:
ரத்தன் டாடா: டாடா பை பை!

ரத்தன் டாடா - பாரம்பரியமிக்க டாடா குழுமத்தை வளர்ச்சியின் சிகரத்திற்குக் கொண்டு சென்றவர். இந்திய நிறுவனமாக இருந்த டாடாவை சர்வதேச பிராண்டாக மாற்றியப் பெருமை ரத்தனுக்கே. அப்படிப்பட்ட ரத்தன் டாடா கடந்த டிசம்பர் 28 அன்று ஓய்வு பெற்றார். தேர்ந்த பிஸினஸ்மேனான அவர், டாடா குழுமத்திற்கு ஆற்றிய பணிகள் கணக்கிலடங்காது.

சதிவாய்ப்புகளுக்குக் குறைவில்லாத ரத்தன் டாடா நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியல் முடித்தார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அட்வான்ஸ்டு மேலாண்மை புரோகிராம் படித்தார். படித்துமுடித்த கையோடு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் வேலைவாய்ப்பிற்கான பயிற்சியை மேற்கொண்டார். இந்த வேலைதான் என்றில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்வாராம் ரத்தன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ஜே.ஆர்.டி. டாடாவுக்குப் பிறகு ருசி மோடி, அஜீத் கேர்கர் போன்ற ஜாம்பவான்களையும் தாண்டி,  1991-ல் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை இவர் எப்படி கொண்டு செல்லப் போகிறாரோ என பலரும் நினைத்தனர். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடங்கிய டாடா குழுமத்தை, அத்தனைபேரும் அதிசயித்துப் போகிற வகையில் ஓர் உலக நிறுவனமாக உயர்த்திக் காட்டினார்.

டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் இருந்த இவர், சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை அந்நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். 10,000 கோடி ரூபாயில் இருந்த டாடா குழுமத்தை 4,75,721 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்த பெருமை இவருக்குண்டு.

கடந்த இருபதாண்டுகளில் சென்செக்ஸ், நிஃப்டியைவிட ரத்தன் டாடா தலைமையில் டாடா குழுமம் கொடுத்த வருமானம் அதிகமாகும். கடந்த இருபதாண்டுகளில் சென்செக்ஸ் 13.6 சதவிகிதமும் நிஃப்டி 13.47 சதவிகிதம் லாபம் தர, டாடா நிறுவனமோ 20.8 சதவிகித லாபம் தந்தது.

ரத்தன் டாடா: டாடா பை பை!

முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட் பத்திலேயே ஒரு காரை தயாரிக்கவேண்டும் என்பது ரத்தனின் ஆசை. அதற்கான வேலையை தானே முன்னின்று செய்ததன் விளைவாக உருவானதுதான் டாடா இண்டிகா. தனக்குப் பிரியமான இண்டிகா காரில்தான் அலுவலகத்துக்குப் போய் வருவதை முன்பு வழக்கமாகக் கொண்டிருந்தார் ரத்தன் டாடா.

சாதாரண மக்களும் பயன்படுத்துகிற வகையில் ஒரு லட்ச ரூபாயில் ஒரு காரைத் தயாரிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாகச் சொல்லி வந்தார் ரத்தன். இதன் விளைவாக உருவானதுதான் டாடா நானோ.

அப்போதைக்கப்போது சில சர்ச்சையில் சிக்கினாலும் (உதாரணம், நீரா ராடியாவுடன் போனில் பேசியது!) அவரது புகழ் இம்மி அளவுக்குக்கூட குறையவில்லை.

75 வயதில் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ரத்தன் டாடா, இந்தியாவின் ஒளிமயமான பிஸினஸ் எதிர்காலத்திற்கு வழிகாட்டுவார் என்று நம்புவோமாக!

- செ.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism