Published:Updated:

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

Published:Updated:
2012 பிஸினஸ் காக்டெய்ல்!
2012 பிஸினஸ் காக்டெய்ல்!
2012 பிஸினஸ் காக்டெய்ல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2012 ஆரம்பத்தில் இருந்து  தள்ளாடவே செய்தது. இதனால் அதன் பங்கு விலை மளமளவென சரிந்தது. நஷ்டத்தை ஈடுகட்ட கிங்ஃபிஷர் நிர்வாகம் அதன் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைத்தது. மாதக் கணக்கில் சம்பளம் வராமல் போகவே விமான ஓட்டுநர்கள், நிறுவனம் சார்ந்த ஊழியர்கள் பொறுமை இழந்து வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கினர். இதனால் பிரச்னை இன்னும் உக்கிரமானது. இந்நிறுவனத்திற்கு கடன் தந்த வங்கிகள் ஒருபுறம் கடனைத் திருப்பிக் கேட்டு நச்சரிக்க, நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஊழியர்கள் போராட்டம் செய்ய, கிங்ஃபிஷர் நிறுவனம் இறுதி மூச்சை கஷ்டப்பட்டு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இனி கிங்ஃபிஷர் தப்பிக்கும்!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

ஏப்ரல் 2012 வரை ஃபேஸ்புக் என்பது மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளமாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால், மே 2012 முதல் பங்குச் சந்தையில் வருமானம் ஈட்டும் ஒரு வர்த்தகப் பொருளாக மாறியது. மே, 18-ம் தேதி ஃபேஸ்புக் ஐ.பி.ஓ. வருவதற்கு முன்பே ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், அதன் இமேஜை பல மடங்கு உயர்த்துகிற மாதிரி பல வேலைகளைச் செய்தார். இதனால் ஃபேஸ்புக் ஐ.பி.ஓ. நன்றாகவே கல்லா கட்டியது. கிட்டத்தட்ட 38 டாலரில் லிஸ்ட்-ஆன ஃபேஸ்புக்கின் பங்கு விலை ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ந்து குறையத் தொடங்கி, ஒரே வாரத்தில் 28.84 டாலர் வரை இறங்கியது. என்ன செய்தால் ஃபேஸ்புக் பங்கின் விலை ஏறும் என்று மார்க் ஜுகர்பெர்க்கிற்கும் தெரியவில்லை; அதில் முதலீடு செய்தவர்களுக்கும் தெரியவில்லை!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே சர்வதேச நிதி ஆணையத்தின் சீஃப் எக்கனாமிஸ்ட்-ஆக இருந்தவர். ஐ.ஐ.டி. டெல்லியிலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ.வும், அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு டாக்டர் பட்டமும் பெற்றவர். இன்னொரு முக்கியமான விஷயம், இதுவரை இந்தப் பதவியில் இருந்தவர்களில் யாரும் தமிழரில்லை. இவரால் தமிழகத்துக்கே பெருமைதான்!

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரும் ஊழலாகக் கருதப்பட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம். இதைத் தொடர்ந்து 2ஜி லைசென்ஸை உச்ச நீதிமன்றம்  ரத்து செய்தது. 2012-ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்தபோது 28,000 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்த்த 2ஜி 9,407 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தியாவில் டெல்லி மற்றும்  மும்பை உள்பட நான்கு பெரிய நகரங்களிலிருந்து யாரும் ஏலம் கேட்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொலைதொடர்புத் துறை கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த அதிக விலைதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் சொன்னாலும், 2ஜி ஊழல் விசாரணையைப் பிசுபிசுத்துப் போகவைக்கவே இந்தத் தோல்வி என்கிறார்கள் வேறு சிலர். என்னதான் நடக்குது இந்த நாட்டிலே!  

2012 பிஸினஸ் காக்டெய்ல்!

இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான  ஜி.எம்.ஆர். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான நிலைய கட்டுமான ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசு டிசம்பர், 2012-ல் ரத்து செய்தது. இதனால், ஜி.எம்.ஆர். நிறுவனம் பெரும் பாதிப்புக்குள்ளானது. தனக்கு ஏற்படும் பொருளாதாரக் குறைபாடுகளையும், நஷ்டங்களையும் தவிர்க்க ஜி.எம்.ஆர். நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் ஜி.எம்.ஆர். நிறுவனம் தோல்வியையே தழுவியது. இதனால், கட்டுமான நிறுவனங்களில் ஜாம்பவானாக விளங்கிய ஜி.எம்.ஆர். நிறுவனம், இப்போது புதிய பிஸினஸைத் தேடி அலைய வேண்டிய கட்டாயம்! யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதானோ?

- செ.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism