Published:Updated:

ரீடெயில் எஃப்.டி.ஐ : உள்ளூர் கடைகளே ஸ்மார்ட்!

வா.கார்த்திகேயன்,படங்கள்: பா.கார்த்திக்.

நேர்காணல்

 ##~##

மார்தி ஜி.சுப்ரமணியம் - நியூயார்க் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் நிதி மற்றும் பொருளாதாரத்துக்கான பேராசிரியர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முக்கியமான பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரொபசர். இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., முருகப்பா குரூப், நொமுரா அசெட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் போர்டு உறுப்பினராக இருந்தவர். செபி உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கியவர், பொருளாதாரம் பற்றி பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியவர். நிதி சம்பந்தமாக பல விருதுகளைப் பெற்றவர் என அவரது பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாணயம் விகடனுக்காக சிறப்புப் பேட்டி கண்டோம். உலகப் பொருளாதாரம் முதல் உள்ளூர் நிலைமைகள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துகளை நறுக்குத் தெறித்தமாதிரி எடுத்துச் சொன்னார். இனி அந்தப் பேட்டியிலிருந்து...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

?உங்கள் கல்லூரி வாழ்க்கைப் பற்றி சொல்லுங்கள்.

''நான் சென்னை ஐ.ஐ.டி.யில் இன்ஜினீயரிங் படித்தேன். ஆனால், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. படிக்கப் போய்விட்டேன். இதெல்லாம் நான் திட்டமிட்டுச் செய்ததல்ல; தற்செயலாக அமைந்தவை. எம்.பி.ஏ.வுக்குப் பிறகு டாடா குரூப் நிறுவனமான டாடா அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸஸில் வேலைக்குச் சேர்ந்தேன். டாடா குரூப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் எம்.பி.ஏ. நான்தான். இருந்தாலும் பி.ஹெச்.டி. செய்வதற் காக எம்.ஐ.டி.க்கு (விணீssணீநீலீusமீtts மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்) சென்றேன். பிறகு அமெரிக்காவிலே ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்.''

?உலகம் முழுக்க பல கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பேராசிரியர் நீங்கள். இந்தியாவில் கல்வி நிலை எப்படி இருக்கிறது?

ரீடெயில் எஃப்.டி.ஐ : உள்ளூர் கடைகளே ஸ்மார்ட்!

''இந்தியாவில் கல்வி நிலை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. சர்வதேசப் பட்டியலில் ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட இருப்பதாக தெரியவில்லை. ஏதோ ஒரு கல்லூரியை ஆரம்பித்துவிட்டு, அதற்கு ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். என்று பெயர் வைத்துவிட்டாலே அந்த நிறுவனத்துக்கு தரம் இருக்கும் என்று அர்த்தம் அல்ல. இந்திய கல்வி நிறுவனங்கள் ஒரு கட்டத்துக்குப்பிறகு தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவே இல்லை. ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களின் நிலைமையே இப்படி என்றால் மற்ற கல்வி நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசம். உலகத்தில் எங்கும் பார்க்க முடியாத விஷயம், இங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் எழுத வரவில்லை. ஆங்கிலமும் சரியாகப் பேச வரவில்லை. ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும், இந்திய மாணவர்கள் தரமான 'ரா மெட்டீரியல்’கள். அவர்களுக்குச் சரியான பயிற்சி தந்தால், அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்.''

?ஃபிஸ்கல் கிளிஃப் பற்றி?

ரீடெயில் எஃப்.டி.ஐ : உள்ளூர் கடைகளே ஸ்மார்ட்!

''ஃபிஸ்கல் கிளிஃப் காரணமாகச் சந்தைகள் இரண்டு சதவிகிதம் சரிவு’ - பிப்ரவரி மாத இறுதியில் இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் இருப்பது நம்பிக்கைப் பிரச்னைதான். (நீஷீஸீயீவீபீமீஸீநீமீ நீக்ஷீவீsவீs). வளர்ச்சிக்கான சாத்தியம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. மேலும், அங்கு வலுவான சோஷியல் செக்யூரிட்டி சிஸ்டம் இருப்பதால் செலவு அதிகமாக இருக் கிறது. இன்னும் 20, 25 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவின் நிலைமையும் இப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது.''

?எதிர்கால இந்தியாவைப் பற்றி  உங்கள் பார்வை என்ன?

''2020-ம் ஆண்டுவாக்கில் 30 வயதுக்குள்ளாக இருக்கும் இளைஞர்கள் இந்தியாவில்தான் அதிகமாக இருப்பார்கள். அதிகமாக இருப்பார்கள் என்று சொல்வதைவிட உலகின் முக்கியமான சில நாடுகளில் இருக்கும் அனைத்து இளைஞர்களைவிட இந்தியாவில் அதிகமாக இருப்பார்கள். ஆனால், இவ்வளவு இளைஞர்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இவர்களுக்குச் சரியான வேலை கிடைக்குமா, இவர்களைப் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.''

?இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்?

''இந்தியா வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இது போதாது என்றே தோன்றுகிறது. தென் கொரியாவின் தனிநபர் வருமானம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவைவிட குறைவு. ஆனால், இப்போது இந்தியாவைவிட தென் கொரியாவின் தனிநபர் வருமானம் 20 மடங்கு அதிகம். எனவே, நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்.''

?இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் போர்டில் இருந்திருக்கிறீர்கள்! ஐ.டி. துறையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்குமா?

''முன்புபோல 30 சதவிகித வளர்ச்சி என்பது இனியும் சாத்தியமில்லை. ஆனால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு சராசரியாக 10 சதவிகித அளவில் வளர்ச்சி இருக்க வாய்ப்பு இருக்கிறது. குறைந்த செலவில், தரமான பணியாளர்கள், அதிக எண்ணிக்கையில் கிடைப்பார்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், நம்மைவிட்டால் ஆள் கிடையாது என்ற எண்ணம் நல்லதல்ல. இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் நமக்குப் போட்டியாக வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பல புதுமைகளை கொண்டுவந்தால்தான் நம்மால் வளர்ச்சியைத் தொடரமுடியும்.''

?ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது பற்றி?

''நாளுக்குநாள் நமது இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்துகொண்டே வருகிறது. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இவர்களை வைத்துதான் நாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எப்போதுவேண்டுமானாலும் வெளியே சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களை இங்கே கட்டிப்போட்டு வைத்திருக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்கள் முதலீடே செய்யமாட்டார்கள்.

அடுத்த வழி, அந்நிய நேரடி முதலீடு. இங்குதான் பிரச்னையே. அடிக்கடி விதிமுறை களை நாம் மாற்றும்பட்சத்தில் அந்நிய முதலீடுகள் வருவது குறையும். நிலையான விதிமுறைகள் இருக்கும்போதுதான் முதலீடுகள் வரும். ஒருவேளை அந்நிய முதலீடும் வரவில்லை என்றால், ரூபாய் சரியும். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்புவதைத் தாமதம் ஆக்கினால் ரூபாய் மேலும் சரியவே செய்யும். ரூபாய் சரிகிறது என்பதற்காக நாம் குரூட் ஆயிலை இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாகவே இருக்கவேண்டும்.''

?ரீடெயில் துறையில் அந்நிய முதலீட்டை பற்றி?

''வெளிநாட்டு கடைகளைவிட நம் ஊர் வியாபாரிகள் மிகவும் ஸ்மார்ட் ஆனவர் கள். உதாரணத்துக்கு, என்னையே எடுத்துக் கொண்டால் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கடையில்தான் பொருட்களை வாங்கு கிறேன். அதுதான் எனக்கு சௌகர்யம். இவர்கள் கொடுக்கும் சேவையை பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்க முடியாது!''