Published:Updated:

சிபிலில் பெயர்... மீண்டும் கடன் கிடைக்குமா?

சிபிலில் பெயர்... மீண்டும் கடன் கிடைக்குமா?

##~##

?தனியார் நிறுவனம் அளித்த ஒரு கிரெடிட் கார்டு மூலம் ரூ.30,000 வரை பணம் எடுத்து, சில காரணங்களால் அந்தப் பணத்தைத் திரும்பக் கட்டாமல் விட்டுவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகையை வட்டியோடுச் சேர்த்து ரூபாய் 65,000 வரை கட்டி செட்டில்மென்ட் ஒப்பந்தமும் போட்டுவிட்டேன். ஆனால், ஒருமுறை சிபில் பட்டியலில் பெயர் ஏறிவிட்டால் திரும்ப எங்கும் கடன் வாங்கமுடியாது என்கிறார்கள். இது உண்மையா?

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- செந்தில்முருகன், வந்தவாசி.

வித்யாதர், துணை பொதுமேலாளர், எஸ்.பி.ஐ.  

''ஒருமுறை சிபில் பட்டியலில் இடம்பெற்றுவிட்டால் கடன் பெறுகிற தகுதியை இழந்துவிடுகிறீர்கள் என்பதில் உண்மையில்லை. சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றாலும், வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்தியிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே திரும்பவும் உங்களது கடன் பெரும் தகுதி தீர்மானிக்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தியபிறகு, சிபில் பட்டியலில் கடனை திருப்பிச் செலுத்தாதோர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருக்கும். கடன் வாங்கி முறையாகக் கட்டியவர்கள், காலதாமதமாகக் கட்டியவர்கள் என்கிற வகையில் சிபில் வழங்கும் ரேட்டிங் புள்ளிகளில்தான் வித்தியாசம் இருக்குமே தவிர, திரும்பவும் நீங்கள் கடன் வாங்க முடியாது என்பது உண்மை யில்லை.''

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?

?என் மகனின் மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாய். தற்போது 35 வயது ஆகிறது. இதுவரை வேறு முதலீடுகள் கிடையாது. அவரது வேலையில் ஓய்வூதியம் பிடித்தம் செய்வதில்லை இதற்கேற்ப அவர் பெயரில் என்ன வகை முதலீடுகள் செய்யலாம்?

- கீதா, சென்னை.

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?

ரா.கணேஷ், நிதி ஆலோசகர், கேமோமைல் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''உங்கள் மகனின் வயது மற்றும் வருமானத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் மாதம் பத்தாயிரம் வரை முதலீடு செய்வது சரியானதாக இருக்கும். அப்படி திட்டமிடும்பட்சத்தில் பி.பி.எஃப். மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ஐயாயிரம் வீதம் பிரித்து முதலீடு செய்யலாம். இதன்படி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலம் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கலாம் என்கிறபோது

55 வயதில் 74.86 லட்சம் தொகை கிடைக்கும். இதே காலஅளவில் பி.பி.எஃப். 8.8 சதவிகித வருமானம் கொடுக்கும் என்று வைத்துக்கொண்டால் இதன் மூலம் 32.5 லட்சம் எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு தொகைகளையும் சேர்த்து கிடைக்கும் தொகையை 55 வயதில் ஓய்வுக்கால வயதிற்கு ஏற்ப பாதுகாப்பாக முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகனது ஓய்வுக்கால வருமானத்திற்கு திட்டமிட முடியும்.''

?நான் தமிழ்நாடு அரசுப் பணியிலும், என் கணவர் புதுச்சேரி அரசுப் பணியிலும் இருக்கிறோம்.

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?

இருவரது சம்பளத்திலிருந்தும் தலா இரண்டு லட்சம் ரூபாய் கவரேஜ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசிக்கு பிரீமியம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது தேவையா?

- ஒரு வாசகி, திண்டிவனம்.

ஜெய்சங்கர், வெல்த் அட்வைஸர், இண்டியா நிவேஷ் செக்யூரிட்டீஸ்.

''மருத்துவச் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் குடும்பத்திற்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் என்கிற அளவிலாவது இருக்கவேண்டும். எனவே, நீங்களும் உங்கள் கணவருமாகச் சேர்ந்து எடுத்திருக்கும் நான்கு லட்சத்துக்கான ஃப்ளோட்டர் பாலிசித் தொகையை அதிகம் என்று கருதவேண்டாம். இரண்டு பாலிசிகளையும் ஒரே நேரத்திலோ அல்லது ஒரு பாலிசியை பயன்படுத்தியபிறகு இன்னொரு பாலிசியையோ உபயோகப்படுத்திக்கொள்ளலாம்!''

?பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு வரிச் சலுகை மற்றும் மானியங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?  

- எஸ்.குமரகுரு, தேன்கனிக்கோட்டை.

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?

கே.உன்னிகிருஷ்ணன், இயக்குநர், (தென்மண்டலம்) இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

''பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்விதமாக வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை அளிக்கிறது மத்திய அரசு. குறிப்பாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்திற்கான சான்றிதழ் வாங்குவதற்காகச் செய்யப்படும் செலவுகளில் ஐம்பது சதவிகித மானியம், வெளிநாடுகளில் நடக்கும் வர்த்தகக் கண்காட்சிகளில் கலந்துகொள்ள விமானச் செலவு மற்றும் அரங்கக் கட்டணம் போன்ற செலவுகளை கிளைம் செய்துகொள்வது, நவீன உற்பத்தி கருவிகள், பேக்கிங் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க 25 சதவிகிதம் வரை மானியம், விகாஷ் கிருஷ் கிராம உத்யோக் கிசான் திட்டத்தின் மூலம் ஏற்றுமதி மதிப்பில் 5 சதவிகிதம் வரை வரிச் சலுகை என உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு மானியம் மற்றும் வரிச் சலுகை கிடைக்கிறது. ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் மூலமும், அபேடா (Agricultural and Processed Food Products Export Development Authority) மூலமும் விண்ணப்பித்து இந்தச் சலுகைகளைப் பெறமுடியும்.''

சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?
சிபிலில் பெயர்... மீண்டும் கடன்  கிடைக்குமா?