Published:Updated:

எடக்கு மடக்கு - அப்பன் சொத்தை வாங்க ஏன் வரி கட்டணும்?

எடக்கு மடக்கு - அப்பன் சொத்தை வாங்க ஏன் வரி கட்டணும்?

எடக்கு மடக்கு - அப்பன் சொத்தை வாங்க ஏன் வரி கட்டணும்?

எடக்கு மடக்கு - அப்பன் சொத்தை வாங்க ஏன் வரி கட்டணும்?

Published:Updated:
 ##~##

என்னோட தாத்தாவோட கிளாஸ்மேட் ஒருத்தரு ஊரைவிட்டு ஓடிப்போயி சினிமா ஸ்டைலுல பெரிய பணக்காரர் ஆயிட்டாரு. சொத்துபத்துன்னு பார்த்தா, பல நூறு கோடி ரூபாய் தேறும். 1995-ம் வருடப் பொங்கலுக்கு எங்க தாத்தா வழக்கம்போல நண்பரைப் பார்க்கப் போனாரு. அப்ப அந்த நண்பரு உடம்பு சரியில்லாம இருந்ததால அங்கேயே இரண்டு மாசம் தங்கிட்டாரு. அவரு மரணப் படுக்கையில இருந்தப்ப நடந்த ஒரு விஷயத்தை எங்க தாத்தா அப்பப்ப சொல்லுவாரு.

''அவரு சம்பாதிச்ச சொத்தைப் பிரிச்சு உயில் எழுத வக்கீலைக் கூப்பிட்டாரு. 'உங்க சொத்து உங்க பையனுக்குப் போய்ச் சேரணுமின்னா, உங்க பையன் டாக்ஸ் கட்டணும்,’ன்னாரு வக்கீலு. பதினைஞ்சு நாளா பல்ஸ் குறைஞ்சுபோய் படுக்கையில கிடந்தவரு சட்டுன்னு எந்திருச்சு, ''என்னாத்துக்கு, நான் ராப்பகலா ஓடிச் சம்பாதிச்சதை என் பையனுக்குக் கொடுக்கிறதுக்கு அவன் ஏன் டாக்ஸ் கட்டணும்?''ன்னு கொதிச்சுப் போயி கேட்டாரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இல்லீங்கய்யா இது எஸ்டேட் டூட்டி. மூதாதையரி டமிருந்து சொத்து இலவசமா வர்றதால அதுக்கு ஒரு தொகையை அரசாங்கம் வரியா விதிக்குது''ன்னாராம் லாயர்.

''அட போங்கய்யா, நான் வேலையில்லாம இருந்தப்ப எங்க அப்பா அடிச்ச அடியில நான் சிட்டிக்கு ஓடிவந்து சோத்துக்கு வழியில்லாம இருந்தப்ப எந்த அரசாங்கம் என்னைக் காப்பாத்துச்சு? நானா அரைவயிறும் கால்வயிறுமா சாப்பிட்டு காசு சேர்த்து ரிஸ்க் எடுத்து தொழில் பண்ணி சம்பாதிச்சேன். என் பிள்ளை, பேரன் பேத்தியெல்லாம் என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாதுன்னு சேர்த்து வச்சேன். சொத்துபத்து அதிகமா குமிஞ்சதுக்கப்புறம் வருஷ வருமானத்துல 10 பெர்சன்ட் தர்மம் செஞ்சேன்; கோயில் கட்டுனேன். பல பேரை படிக்க வச்சேன்; எத்தனையோ பேருக்கு மெடிக்கல் செலவுக்கு உதவி செஞ்சேன். என் சம்பாத்தியத்துல கிட்டத்தட்ட 2 கோடி இந்த மாதிரி பொதுச் செலவு செஞ்சிருக்கேன். இதையெல்லாம் கணக்குப் பார்த்தா, நான் ஞ்சேன்?''ன்னு பொருமித் தள்ளிட்டார்.  

எடக்கு மடக்கு - அப்பன் சொத்தை வாங்க ஏன் வரி கட்டணும்?

கிழம் கெட்டியான ஆளு. அவரே எஸ்டேட் டூட்டி பத்தி கண்ணாடியைத் தொடைச்சுப் போட்டுட்டு படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அந்த வருஷத்திலேயிருந்து எஸ்டேட் டூட்டியை அரசாங்கம் ரத்து பண்ணப் போகுதுங்கிற செய்தியைப் படிச்சுட்டு, உற்சாகமாயிட்டாரு. மகனைக் கூப்பிட்டு, 'மார்ச் 15-ம் தேதியில இருந்து எஸ்டேட் டூட்டி இல்லேன்னு அரசாங்கம் சொல்லியிருக்கு. நான் அதுக்கு முன்னாடி செத்துட்டேன்னா சிக்கலு. என்ன செலவானாலும் சரி என்னை மார்ச் 15-ம் தேதிவரைக்கும் சாக விடாதே’ன்னு சொல்லிட்டாரு.

கரெக்ட்டா மார்ச் 14 நைட்டு அவருக்கு நாடித்துடிப்பு ரொம்பவும் கொறைய ஆரம்பிச் சுடுச்சு. நடுச்சாமத்துல எந்திருச்சு மணி என்னன்னு கேட்டாரு. 11.30-ன்னு சொன்னேன். அதுதான் அவரு பேசுன கடைசி வார்த்தை. அதுக்கப்புறம் ஒரு மூணு மணிநேரம் கழிச்சு (15-ம் தேதி அதிகாலையில) நல்லபடியாப் போய்ச் சேர்ந்தாரு. உயிரைக் கையில பிடிச்சிட்டு இருந்தேம்பாங்களே. அதை நான் கண்ணால அன்னைக்குத்தாண்டா ஏகாம்பரம் பார்த்தேன்''ன்னு சொல்லி உணர்ச்சி வசப்படுவாரு எங்க தாத்தா.

1995-ல போன எஸ்டேட் டூட்டியை திரும்பக் கொண்டுவர்றதுக்கு இப்ப முயற்சியை

செஞ்சிகிட்டு இருக்காரு நம்மாளு. இது என்னங்க அநியாயம்? அரசாங்கத்துக்கு பசி எப்பவும் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படி ஒழிச்சுகட்டின வரிகளை திரும்பவும் தூசி தட்டி போட்டா என்னத்துக்கு ஆகும்? உதாரணத்துக்கு, எங்க தாத்தாவோட நண்பரையே எடுத்துக்குங்க. கஷ்டப்பட்டு சம்பாதிச்சாரு. மகன், பேரன் பேத்தின்னு கஷ்டப்படாம இருக்கட்டுமின்னு சொத்து சேர்த்தாரு. ஒரு லெவலுக்கு அப்புறமா அவரே பல தான தர்மம் பண்ணுனாரு. தனிமனிதருக்கான கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி மாதிரி. இதுமாதிரி பண்ணற பல தான தர்மங்களை நாம இப்பவும் பார்க்குறோம். செத்துப் போன பிறகு பிள்ளை களுக்குச் சொத்து போய்ச் சேர டாக்ஸ் கட்டணுமின்னா யாராவது தான தர்மம் பண்ணுவாங்களா? தனிமனிதரு ஒருத்தரு ஒரு அமௌன்டை நல்ல காரியம் பண்றதுக்கு ஒதுக்கி செலவு பண்றதுக்கும், அதே பணத்தை அரசாங்கத்தோட கையில தர்றதுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒருத்தரு நல்லகாரியம் பண்ண நினைச்சா ஒரு லட்சமும் அந்த நல்ல காரியத்துக்குப் பயன்படும். அரசாங்கம் அந்த ஒரு லட்சத்தை வாங்கினா அங்கங்கே கட்டிங் போனது போக அதிகபட்சமா 50,000 ரூபாய் நல்ல காரியத்துக்குப் போய்ச் சேரும்.

இப்படி ஒருத்தர் சம்பாதிச்ச சொத்து அவரோட வாரிசுக்குப் போகணுமின்னா டாக்ஸ் கட்டணுமின்னு வந்தா என்னவாகும், எல்லோரும் ஏமாத்த நினைப்பாங்க. டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கும் சொத்து கைமாறுரவங்களுக்கும் இடையே இடைவிடாத சண்டையும், அப்பீலும் நடந்துகிட்டே யிருக்கும். சுலபமா விதிச்சு சுலபமா வசூல் பண்றமாதிரி சட்டத்தைப் போடறதை விட்டுட்டு இப்படி இடியாப்பச் சிக்கல் வர்ற சட்டத்தைக் கொண்டுவர்றது சரியில்லீங்களே!

'என்ன ஏகாம்பரம், பணக்காரங்களுக்கு ஏன் இப்பிடி சப்போர்ட் பண்றேன்’னு நீங்க என்னை கேக்கலாம். 'அரசாங்கத்து வந்து சேரவேண்டிய வரி குறையுதே’ன்னு கேக்கலாம். பணக்காரங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணேலேங்க. டாக்ஸ் சிஸ்டம் சிம்பிளா இருந்தாத்தான், நாட்டுல எல்லோரும் டாக்ஸ் கட்டுவாங்க. இல்லாட்டி இல்லாத டகால்டி வேலையெல்லாம் பண்ணி மொத்தமா ஓளிச்சு வச்சுடுவாங்கங்கறதுதான் என் கவலைங்க.

சும்மா பணக்காரனுக்கு டாக்ஸ் போடறேன், போடறேன்னு சொல்லி ஆரம்பிச்சீங்கன்னா அவங்க நேரடியாச் செய்ற ஆக்கப்பூர்வப் பணியும் பாதிக்கும். புதுசா ஏதோ செய்றேன்னு இருக்கிறதையும் கெடுத்துடாதீங்கய்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism