Published:Updated:

கேள்வி-பதில்

டேர்ம் பாலிசியிலிருந்து எண்டோவ்மென்ட் பாலிசிக்கு மாற முடியுமா?

கேள்வி-பதில்

டேர்ம் பாலிசியிலிருந்து எண்டோவ்மென்ட் பாலிசிக்கு மாற முடியுமா?

Published:Updated:
##~##

?டேர்ம் பாலிசியிலிருந்து எண்டோவ்மென்ட் பாலிசிக்கு மாறுவது சாத்தியமா?

தாமஸ், திருவையாறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுந்தரராஜன், வெல்த் அட்வைஸர், ஐ.என்.ஜி.வைஸ்யா.

''டேர்ம் இன்ஷ§ரன்ஸ் பாலிசியிலிருந்து எண்டோவ்மென்ட் பாலிசிக்கு நேரடியாக‌ மாற முடியாது. டேர்ம் பாலிசியைத் தொடர‌ விருப்பம் இல்லாதபட்சத்தில், எண்டோவ்மென்ட் பாலிசியை புதிதாக‌ எடுத்துக்கொள்ளலாம். வேறு முதலீடுகள் இருக்கிறது; அதனால் காப்பீடு மட்டும் போதும் என்றால் டேர்ம் பாலிசியில் இருப்பதே சிறப்பு. ஆனால், பிரீமியத் தொகையின் ஒரு பகுதி முதிர்வுத் தொகையாக‌ திரும்ப‌ வரவேண்டும் என்று நினைப்பதால்தான் பலரும் எண்டோவ்மென்ட் பாலிசியை எடுக்கிறார்கள். இதன் மூலமான வருமானம் சுமார் 5-6 சதவிகிதம் என்பதால் டேர்ம் பாலிசியிலிருந்து எண்டோவ்மென்ட் பாலிசிக்கு மாறுவது பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும்.''

கேள்வி-பதில்

?ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வங்கி வைப்பு நிதி வைத்திருக்கிறேன். நான் வருமான வரி சம்ப‌ந்தமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன‌?

சதீஷ், திருச்சி

ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்.

''ஒரு லட்சத்துக்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும்பட்சத்தில் அதிலிருந்து வரும் வட்டி வருமானம் ஓராண்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்தத்‌ தொகைக்கு டி.டி.எஸ். பிடித்தம் செய்வார்கள். எனவே, உங்களது பான் கார்டு நகல் மற்றும் படிவம் 15 ஆகிய  இரண்டையும் வங்கிக்கு அளித்தால் டி.டி.எஸ். பிடித்தம் செய்யமாட்டார்கள். பான் எண் தரவில்லை எனில் வட்டி வருமானத்தில் 20 சதவிகிதத்தை வரியாகப் பிடித்துவிடுவார்கள். இந்த வட்டி வருமானத்தை உங்களது ஆண்டு வருமானத்தோடு சேர்த்து வருமான‌ வரி கணக்கிட வேண்டும்.'

கேள்வி-பதில்

?சிறிய அளவில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன். பத்து நபர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் கட்டாயமாக போனஸ் மற்றும் கிராஜுவிட்டி தரவேண்டுமா? இதற்கான வழிமுறைகளை எப்படித் தெரிந்துகொள்வது?

காளிங்கன், பரமகுடி.

சதீஷ்குமார், ஆடிட்டர்.

''சிறிய அளவிலான‌ தொழில் நிறுவனம் என்றாலும் தொழிலாளர் நலச் சட்டப்படி, உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் தரவேண்டியது கட்டாயம். அதேபோல ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக கிராஜுவிட்டி தர வேண்டும். சிறிய நிறுவனம் என்றாலும் அதற்காக நீங்கள் தொழில் வரி கட்டுவது அவசியம். இதுதவிர, விற்பனை வரி அல்லது சேவை வரி, சிறுதொழில் நிறுவனச் சான்றிதழ் என்று ஏதாவது ஒரு வகையில் தொழில் நிறுவன அடையாளத்தோடு இயங்குவதால், தொழிலாளர் நலன் சார்ந்த‌ விஷயங்களையும் கவனித்தே ஆகவேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் பணியாற்றும் இடம் என்றாலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை  தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் பெறலாம்.''

?நான் செய்துவரும் தொழிலில் அவ்வப்போது சேரும் தொகைகளை சேர்த்து மூன்று மாதத்துக்கு அப்படியே வைத்திருப்பேன். அதன் பிறகு அந்தப் பணத்தை என் தொழிலுக்குப் பயன்படுத்துவேன். இந்த மூன்று மாத இடைவெளியில், சேரும் பணத்தை முதலீடு செய்து திரும்ப எடுப்பதுபோல திட்டங்கள் இருக்கிறதா?

மதிவாணன், தஞ்சாவூர்

சங்கர், நிதி ஆலோசகர்.

''மூன்று மாதங்கள் என்பது முதலீட்டுக்கு குறுகியகாலம் என்பதால், இதிலிருந்து அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. தவிர, மூன்று மாத இடைவெளியில் வேறொரு வகையில் அந்தப் பணம் தேவைப்படுவதால், அதற்கேற்ப பணத்தை உடனடியாக திரும்ப எடுக்கும் வகையில் இருக்கும் முதலீட்டுத் திட்டங்கள்தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் லிக்விட் ஃபண்ட் வகைகளில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில் உள்ள வசதி எப்போதும் எவ்வளவு தொகையையும் முதலீடும் செய்யலாம் என்பதே. அதேபோல திரும்ப எடுத்தும்கொள்ளலாம். வங்கி வைப்பு நிதி அளவிற்கே வருமானம் கிடைக்கும். இதற்கு வங்கி வைப்பு நிதியே பெஸ்ட் என்று நீங்கள் நினைத்தால் அதிலேயே பணத்தைப் போட்டு வைக்கலாம். இந்த இரண்டு முதலீடுகளின் சிறப்பே, அதிக அளவு வருமானம் ஈட்டித் தரும் என்பதைவிட பணம் உங்கள் கையில் இருப்பதைவிட பாதுகாப்பான‌ இடத்தில் இருக்கும் என்பதே!''

கேள்வி-பதில்

?மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பர்ச்சேஸ், அடிஷனல் பர்ச்சேஸ், ரீபர்ச்சேஸ் என்று சொல்கிறார்கள்.இவற்றுக்கான விளக்கம் என்ன?

கோமதி சுந்தர், திருப்பூர்

ஸ்ரீதேவி கணேஷ், நிதி ஆலோசகர், கேமோமைல் ஃபைனான்ஷியல் பிளானர்.

''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதல் முறையாக ஒருவர் முதலீடு செய்கிறபோது, ஒரு ஃபண்டை வாங்குகிறார். இதை 'பர்ச்சேஸ்’ என்கிறோம். அதே ஃபண்டில் இரண்டாவது முறையாக முதலீடு செய்கிறபோது அது 'அடிஷனல் ஃபர்ச்சேஸ்’ என்று சொல்லப்படும். அந்த ஃபண்டுகளை ஃபண்ட் நிறுவனத்திற்கே நாம் திருப்பி விற்பனை செய்வதை 'ரீபர்ச்சேஸ்’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.'

?அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க முன்பதிவு செய்யும் போது பத்திரப் பதிவுக் கட்டணம் வாங்கினார்கள். யூ.டி.எஸ். (பிரிக்கப்படாத மனை) பதிவுக்கு என்று சொன்னார்கள்.  கட்டடம் கட்டியபிறகு அதன் மதிப்புக்கும் தனியாக முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

தீபா, சென்னை.

பார்த்தசாரதி, இயக்குநர், பார்த்தசாரதி அசோஸியேட்ஸ்.

''புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் அந்தக் கட்டடத்தின் யூ.டி.எஸ். பகுதிக்கு மட்டும் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் செலுத்தி பத்திரப் பதிவு செய்தால் போதுமானது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட‌ அந்தக் கட்டடத்தின் மதிப்பிற்கு முத்திரைத்தாள் கட்டணம் கட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால், அந்த வீட்டை மறு விற்பனை செய்கிறபோதுதான் யூ.டி.எஸ். மற்றும் கட்டட மதிப்பிற்கும் சேர்த்து பதிவு மற்றும் முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும்.''

கேள்வி-பதில்

?வேல்யூ ஃபண்டுகள் என்றால் என்ன?

குமரகுரு, திருத்தணி.

அழகப்பன், இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ்

''வேல்யூ ஃபண்ட் என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகை. பி.இ. விகிதம் குறைவாக இருக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதுதான் வேல்யூ ஃபண்டுகள். அந்த‌ப் பங்குகள் குறிப்பிட்ட‌ வளர்ச்சி வரும் வரை வைத்திருப்பார்கள். தவிர, ரிஸ்கான‌ பங்குகளில் முதலீடு செய்யாமல், சந்தை ஏறினாலும், இறங்கினாலும் பாதிப்பு அதிகம் இல்லாமல் பொறுமையாக‌ வளரும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த‌ வகை ஃபண்டுகள் நீண்ட‌ கால‌ நோக்கில் வளர்ச்சியைக் கொடுக்கும் விதமாக‌ இருக்கும்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism