Published:Updated:

வேலை பார்க்கும் தம்பதிகள் :இரட்டைச் சம்பளம்... இரட்டைச் சலுகை..!

சி.சரவணன்

வேலை பார்க்கும் தம்பதிகள் :இரட்டைச் சம்பளம்... இரட்டைச் சலுகை..!

சி.சரவணன்

Published:Updated:
##~##

விலைவாசி ஜெட் வேகத்தில் ஏறும் இந்தக் காலத்தில், கணவன் - மனைவி இருவரும் வேலை பார்த்தால்தான் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்கிற நிலை. வீட்டுக்கு இரண்டு வருமானம் வரும்நேரத்தில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து கொஞ்சம் திட்டமிட்டால், இன்னும் நிறையச் சேமிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாதச் சூட்சுமம். இதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணன்.

''பத்தாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் சொந்த வீடு வாங்கியவர்களின் சராசரி வயது 45-ஆக இருந்தது. இது இன்றைக்கு சுமார் 27-ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தாராளமாக கிடைக்கும் வீட்டுக் கடன்தான். இந்த வீட்டுக் கடனை திரும்பக் கட்டுவதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் கூடுதலாக வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்'' என்ற சத்தியநாராயணன், அது எப்படி என்பதை விளக்கிச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனித்தனி வீட்டுக் கடன்!

வேலை பார்க்கும் தம்பதிகள் :இரட்டைச் சம்பளம்... இரட்டைச் சலுகை..!

''வீட்டுக் கடன் வாங்கும்போது கணவன் - மனைவி இருவர் பேரிலும் சேர்த்து வாங்கினால், இருவரும் தனித்தனியாக வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். குடியிருக்கும் வீட்டைக் கடனில் வாங்கி இருந்தால் திரும்பச் செலுத்தும் அசலில் 80சி பிரிவின் கீழ் ஓராண்டில் அதிக பட்சம் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் தலா ஒரு லட்சம் ரூபாயாக மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் அதிகபட்சமாக வரிச் சலுகை பெற முடியும்.

வேலை பார்க்கும் தம்பதிகள் :இரட்டைச் சம்பளம்... இரட்டைச் சலுகை..!

திரும்பக் கட்டும் கடனில் வட்டிக்கு ஓராண்டில் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகை (பிரிவு 24) கிடைக்கும். வீட்டுக் கடனை தம்பதிகள் சேர்ந்து வாங்கி இருக்கும்பட்சத்தில் 3 லட்சம் ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

இந்தச் சலுகை களை பெற வீட்டுக் கடன் பெறும்போதே, வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை இருவர் பெயரிலும் வாங்குவதோடு, யார் எவ்வளவு மாதத் தவணை  கட்டப்போகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுவது அவசியம். அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வருமான வரிச் சலுகை கிடைக்கும். மேலும், மனை வாங்கி வீடு கட்டுவது என்றால் அதனை கணவன்-மனைவி இருவர் பெயரிலும் கூட்டாகப் பதிவு செய்வது கட்டாயம்'' என்றவர், பிள்ளைகளின் கல்விச் செலவு தொகையில் வேலை பார்க்கும் அல்லது வருமானம் ஈட்டும் தம்பதிகள் எப்படி கூடுதலாக வரிச் சலுகை பெறலாம் என விளக்கினார்.

குழந்தைகளின் படிப்பு!

''வரிதாரர் ஒருவர் இரு பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு 80சி பிரிவின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால் கணவர் ஒரு பிள்ளைக்கும், மனைவி ஒரு பிள்ளைக்கும் தனித்தனியே கல்விச் செலவுக்கு வரிச் சலுகை பெறலாம்.

இதேபோல், ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை தனித்தனியாக எடுத்து கூடுதல் வரியை மிச்சப்படுத்துவதோடு கூடுதல் கவரேஜும் பெற முடியும்''’

என்றார். இனியாவது வேலை பார்க்கும் தம்பதிகள் ஒன்றுகூடி வருமான வரியைத் திட்டமிட்டுச் செய்யலாமே ! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism