Published:Updated:

மூலதனச் சந்தையை ஊக்கப்படுத்துங்கள் !

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

மூலதனச் சந்தையை ஊக்கப்படுத்துங்கள் !

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

மூலதனச் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக உற்சாகம் இழந்து காணப்படுகிறது. பங்குச் சந்தை குறியீடு 2008-ல் இருந்ததைவிட குறைவாகவே இருக்கிறது. மூலதனச் சந்தை ஆரோக்கியமாக இல்லாவிட்டால் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான எல்லா முயற்சிகளும் பலன் இல்லாமல் போகும். இந்த நிலைமையை சரிசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மிக முக்கியமாக, நிதி அமைச்சராக இருக்கும் சிதம்பரம் மூலதனச் சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

பங்குப் பரிவர்த்தனை வரி (STT)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூலதனச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு தற்போதைய பங்குப் பரிவர்த்தனை வரியும் அதனுடைய அதிகமான சதவிகிதமும் ஊக்கமளிப்பதாக இல்லை. இந்தப் பங்குப் பரிவர்த்தனை வரி அறிமுகப்படுத்தப் பட்ட பல நாடுகளில் தற்போது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது அல்லது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசு வருமானத்தை உயர்த்த இந்த வரியை அரசாங்கம் தொடர்ந்து விதித்து வருகிறது.

பங்குச் சந்தை இன்னும் நல்ல வளர்ச்சி காண வேண்டுமெனில், 1. இந்த வரியை முற்றிலும் நீக்கிவிட்டு, முன்பிருந்த மூலதன லாப வரி முறையைக் கடைப்பிடிக்கலாம்.  2. பங்குப் பரிவர்த்தனை வரியை கணிசமான அளவில் குறைக்கலாம். 3. பங்குப் பரிவர்த்தனை வரியைக் குறைத்து கமாடிட்டி வர்த்தகத்திற்கு வரி விதிக்கலாம்.

மூலதனச் சந்தையை ஊக்கப்படுத்துங்கள் !

பங்குச் சந்தையில் இன்னும் அதிக மக்கள் முதலீடு செய்ய மேற்கூறிய ஆலோசனைகளில் ஒன்றாவது நடைமுறைக்கு வரவேண்டும்.  

முத்திரைக் கட்டணம்!

மத்திய அரசாங்கம் பங்குப் பரிவர்த்தனை வரி வசூலிப்பதைப் போலவே, ஒவ்வொரு மாநில அரசும் பங்குப் பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. இக்கட்டணம் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் வரி விதிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது. இதில் கடன் பத்திரங்களுக்கான கட்டணம் மிகவும் சிக்கலாக இருக்கிறது. முத்திரைக் கட்டணம் வசூல் செய்வதை சீரமைக்க கமிட்டி ஒன்றை மத்திய அரசாங்கம் அமைத்திருக்கிறது. இதேபோல மாநில அரசும் செய்யவேண்டும். இக்கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தும் அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் அவசியம் வர வேண்டும்.

நிறுவனக் கடன் சந்தை!

நிறுவனங்களின் கடன் சந்தை தொடர்பான மேம்பாட்டு முயற்சி கள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனத்தின் கடன் ஆவணங்கள் திரட்டப்பட்ட பணத்தின் அளவு இன்னமும் குறைவாகவே இருக்கிறது. கடன் சந்தையில் இன்ஷூரன்ஸ் மற்றும் பென்ஷன் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும் எனில், வரி மற்றும் முத்திரைக் கட்டணத்தில் மாற்றம் செய்யவேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் துறை!

மூலதனச் சந்தையை ஊக்கப்படுத்துங்கள் !

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மியூச்சுவல் ஃபண்டிலிருந்து கிடைக்கும் லாபம் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் வெளியே செல்வது அதிகமாக உள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் சிறந்த நுழைவாயில். இத்துறையின் ஆரோக்கியம் கேப்பிட்டல் மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியம். எனவே, எல்லோரும் இதில் முதலீடு செய்யும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்காக இந்தியா முழுவதும் பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுக்குத் தரப்படும் ஊக்கத் தொகையை அதிகப்படுத்தவேண்டும். சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு மூலதன ஆதாய வரி விலக்கு தரவேண்டும்.  வீடு போன்ற சொத்துக்களை விற்று வரும் மூலதன ஆதாயத்தைக் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வரி விலக்கு அளிக்கவேண்டும்.

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்!

வருமானம் ஈட்டாத தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டை திசை திருப்பும் நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதைத் தடுக்கும்  நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. நேரடி வரி விதிப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றை அமலாக்க சிதம்பரம்தான் சரியான நபர். இதற்கு சீரிய முயற்சிகளை எடுப்பார் என நம்புவோம்.

வரி ஏய்ப்பு மூலமும் தவறான வழியில் ஈட்டப்பட்ட பணம் தற்போது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படுவதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்களும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது. நிலம் மற்றும் வீடுகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரவேண்டும்.

வரி விதிப்பில் மாற்றம்!

அடிப்படை வரி விலக்கு வரம்பை நிதி அமைச்சர் அதிகப்படுத்தமாட்டார். ஆனால், அதிக வரிக்கான வரம்பை உயர்த்துவார் என எதிர்பார்க்கலாம்.  

முன்னோர் சொத்து மீதான வரி!

வாரிசுகளுக்குக் கிடைக்கும் முன்னோர்களின் சொத்துகளுக்கு வரி விதிப்பது குறித்து நிதி அமைச்சர் பேசி வருகிறார். அந்த வரி விதிக்கப்பட்டால், எளிமையாகவும், வருமானம் ஈட்டாதச் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளின் மீது வரி விதிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism